ஆடி மாசம் முடிஞ்சும் ஆஃபர்களை அள்ளி வழங்கும் மாருதி நிறுவனம்... இது தான் கார் வாங்க சரியான நேரம்....
மாருதி சுஸூகி நிறுவனம் தனது அரேனா டீலர் ஷிப்களில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு ஆஃபர்களை அறிவித்துள்ளனர். இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸூகி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு தங்களது அரேனா டீலர் ஷிப்களில் விற்பனை செய்யப்படும் கார்களுக்காக ரூ50ஆயிரம் வரையில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்தத் தள்ளுபடி புதிதாக அறிமுகமான ஆல்டோ கே10, பிரெஸ்ஸா, எர்டிகா மாடல் கார்களுக்கு மட்டும் கிடையாது. இந்த தள்ளுபடி கார்பரேட், கேஷ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஸ்கீம்களில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கீம் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்

மாருதி செலிரியோ
மாருதி செலிரியோ கார் கடந்தாண்டு அறிமுகமானது. இந்த காருக்கு ரூ49 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் மேனுவல் கியர் கார்களுக்கு ரூ49 ஆயிரமும், ஆட்டோமெட்டிக் கியர் கார்களுக்கு ரூ34 ஆயிரம் வரையிலும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

மாருதி எஸ்-பிரஸ்ஸோ
மாருதி சுஸூகி நிறுவனம் தனது எஸ்-பிரஸ்ஸோ கார்களுக்கு பணம், எக்ஸ்சேஞ்ச் மற்றும் கார்பரேட் தள்ளுபடிகளை வழங்குகிறது. ஆனால் எது எதுக்கு எவ்வளவு தள்ளுபடி என்ற சரியான விபரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

மாருதி ஸ்விஃப்ட்
இந்த கார் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் பிரிமியம் ஹேட்ச் பேக் கார். இந்த கார்களை அரேனாவில் இந்த செப்டம்பர் மாதம் வாங்கினால் ரூ45 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடி இந்த காரின் ஆட்டோமெட்டிக் வேரியன்டிற்கு வழங்கப்படுகிறது. மேனுவல் கியர் வேரியன்ட்களுக்கு ரூ25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது

மாருதி டிசையர்
இந்த கார் சப்-காம்பேக்ட் செடான் செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் கார். இந்த காருக்கு ரூ40 ஆயிரம் வரை செப்டம்பர் மாதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தள்ளுபடி ஆட்டோமெட்டிக் வேரியன்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேனுவல் வேரியன்டிற்கு ரூ20ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன் ஆர்
மாருதி சுஸூகி நிறுவனத்திலேயே சிறப்பாக விற்பனையாகும் கார் வேகன் ஆர் கார் தான். இந்தகாருக்கு ரூ39000 வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேனுவல் வேரியன்டிற்கான தள்ளுபடி தான். ஆட்டோமெட்டிக் வேரியன்டிற்கு ரூ34000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி ஆல்டோ 800
மாருதி சுஸூகி நிறுவனம் ஆட்டோ 800 காருக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த காருக்கு இந்தச் செப்டம்பர் மாதம் ரூ29 ஆயிரம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த கார்தான் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக விற்பனையாகும் ஹேட்ச்பேக் காராகும்.


Click it and Unblock the Notifications