பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு! இந்த கார் லிட்டருக்கு 27கிமீ மைலேஜ் தரும்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் இன்று (ஜூலை 20) இந்திய சந்தையில் வெளியீடு செய்யப்பட்டது. வேறொரு நிறுவனத்துடனான கூட்டணியின் வாயிலாகவே மாருதி சுஸுகி நிறுவனம் இக்காரை உருவாக்கியிருக்கின்றது. டொயோட்டாவே அந்த கூட்டணி நிறுவனம் ஆகும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

இந்த இரு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரவர்களுக்கான கார்களை இணைந்து உருவாக்கிக் கொண்டிருப்பதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை இரு நிறுவனங்களும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்திவிட்டன. இந்த நிலையிலேயே, கூட்டணியின் அடிப்படையில் டொயோட்டாவிற்காக உருவாக்கப்பட்ட அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

இதனைத் தொடர்ந்து தற்போது மாருதிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கிராண்ட் விட்டாரா இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் மைல்டு ஹைபிரிட் என இரு விதமான ஆப்ஷன்களுடன் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது. இதுமட்டுமின்றி, இன்னும் பன்முக பிரீமியம் தர அம்சங்களுடனும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

ஆகையால், நிறுவனத்தின் மிக விலையுயர்ந்த காராக கிராண்ட் விட்டாரா காட்சியளிக்க இருக்கின்றது. ஏற்கனவே இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 11 ஆயிரம் முன்-தொகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாராவை நெக்ஸா டீலர்கள் வாயிலாக விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

எனவே இந்த ஷோரூம்கள் வாயிலாகவும், ஆன்-லைன் வாயிலாகவும் மட்டுமே புதுமுக விட்டாராவிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இக்காரின் அதிகாரப்பூர்வ விற்பனைக்கான அறிமுகம் வரும் ஆகஸ்டு மாதம் அல்லது செப்டம்பர் மாதம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் கிராண்ட் விட்டாராவை மாருதி சுஸுகி உருவாக்கியிருக்கின்றது. இதற்கு சான்றாக காரின் முகப்பு பகுதி உள்ளது. மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தை வழங்கக் கூடிய க்ரில் காரின் முன் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், எல்இடி லைட், ஸ்டீல் பார், மிக உறுதியான அமைப்புடைய பம்பர் ஆகியவையும் விட்டாராவின் தனித்துவமான தோற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

தொடர்ந்து காரின் கவர்ச்சிக்கு கூடுதல் பலத்தைச் சேர்க்கும் வகையில் 17 அங்குல அலாய் வீல்கள், இன்டிகேட்டருடன் கூடிய கண்ணாடிகள், மீனின் துடுப்பு போன்ற சிறிய ஆன்டெனா, பின் பக்கத்தை பாதியாக பிரிக்கும் ஸ்டைலில் மெல்லிய டெயில் லைட்டுகள் ஆகியவை விட்டாராவில் கொடுக்கப்பட்டுள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

வெளிப்புற தோற்றத்தைப் போலவே காரின் உட்பக்கமும் அதிக பிரீமியம் வசதிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில், ரிச் பிளாக் ஃபாக்ஸ் லெதரால் காரின் அனைத்து இருக்கைகளும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளளது. இதைத் தொடர்ந்து, சேம்பைன் கோல்டு அக்செண்டுகள் ஆங்காங்கே வழங்கப்பட்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

ஸ்ட்ராங் ஹைபிரிட் தேர்வில் கிடைக்கும் விட்டாராவே இத்தகைய அலங்கரிப்புடன் கிடைக்கும். அதேவேலையில், மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட விட்டாரா பார்ட்ரியூக்ஸ் ஃபாக்ஸ் லெதருடனும், சில்வர் நிற அக்செண்டுகளுடன் அழகுப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு, ஸ்ட்ராங் மற்றும் மைல்டு ஹைபிரிட் தேர்வுகளுக்கு இடையே கணிசமான வித்தியாசங்களை மாருதி சுஸுகி வழங்கியிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

அதேவேலையில், தொழில்நுட்பம் மற்றும் பிற அலங்கார செயலில் இரண்டும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கும் என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இக்காரில் 3டி செட்-அப் கொண்ட டேஷ்போர்டு, வண்ண ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி கேமிரா, ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பத்தினாலான 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

இதுமட்டுமின்றி, 40-க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதியும் புதிய கிராண்ட் விட்டாராவில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக ஏசி கன்ட்ரோல் செய்தல், வாகனத்தை பாதுகாத்தல், லொகேஷனைக் கண்டறிதல் போன்றவற்றை செய்துக் கொள்ள முடியும். மேலும், அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு ஆகிய அம்சமும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

புதிய கிராண்ட் விட்டாரா காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. வேரியண்ட் வாரியாக இதன் எண்ணிக்கை மாறுபட்டுக் காணப்படும். எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், மும்முனை சீட் பெல்டுகள், ரியர் டிஸ்க் பிரேக்குகள், ஹில் டெசண்ட் கன்ட்ரோல் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

எஞ்ஜினைப் பொருத்தவரை இரு விதமான தேர்வுகளில் கிராண்ட விட்டாரா விற்பனைக்குக் கிடைக்கும். இன்டெலிஜன்ட் எலெக்ட்ரிக் ஹைபிரிட் எனும் தேர்விலும், ஸ்மார்ட் ஹைபிரிட் எனும் தேர்விலும் அது கிடைக்கும். இதில், முதல் ஒன்றில் 1.5 லிட்டர் மோட்டார் மற்றும் செல்ஃப் சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சம் வழங்கப்பட்டிருக்கும். இவையிரண்டும் சேர்ந்து லிட்டர் ஒன்றிற்கு 27.97 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த மோட்டாரை இ-சிவிடி தேர்வில் மட்டுமே மாருதி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

அடுத்தபடியான தேர்வாக ஸ்மார்ட் ஹைபிரிட் உள்ளது. இந்த தேர்வில் 1.5 லிட்டர் மோட்டார் மற்றும் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கும். இதன் வாயிலாக, பிரேக் எனெர்ஜி ரீஜெனரேஷன், டார்க் அசிஸ்ட் மற்றும் ஐடில் ஸ்டார்ட் /ஸ்டாப் ஆகிய வசதிகளைப் பெற முடியும். இதன் வாயிலாகவும் எரிபொருளை மிக சிறப்பாக சிக்கனப்படுத்த முடியும். இந்த மோட்டாரின் மைலேஜ் திறன் லிட்டருக்கு 21.11 கிமீ ஆகும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி கிராண்ட் விட்டாரா கார் வெளியீடு... இந்த காரு லிட்டருக்கு 27 கிமீ மைலேஜ் தருமாம்!

மாருதி சுஸுகி நிறுவனம் இப்புதிய கிராண்ட் விட்டாரா காரில் ஆல்கிரிப் ஏடபிள்யூடி எனும் தொழில்நுட்பத்தையும் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சிஸ்டத்தின் வாயிலாக ஆட்டோ, ஸ்போர்ட், ஸ்நோவ் மற்றும் லாக் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், அனைத்து வீல் இயக்க அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

Article Published On: Wednesday, July 20, 2022, 14:01 [IST]
English summary
Maruti suzuki officially revealed mid size suv grand vitara
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+