புதுமுக மாருதி காருக்கான புக்கிங் பணிகள் ஸ்டார்ட் ஆகியாச்சு! ரூ.11,000 இருந்தா நீங்களும் அதை புக் செய்யலாம்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதுமுக கார் கிராண்ட் விட்டாரா (Grand Vitara) -விற்கான புக்கிங் பணிகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் புதுமுக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகளையே தற்போது மாருதி இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. ஒய்எஃப்ஜி (YFG) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வந்த காருக்கே புக்கிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கார் 'கிராண்ட் விட்டாரா' எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த தகவலையும் தற்போது மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாகக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த காரின் அதிகாரப்பூர்வ வருகை வரும் 20ம் தேதி அரங்கேற இருக்கின்றது. இதனை முன்னிட்டே நிறுவனம் அதிகாரப்பூர்வ புக்கிங்கை ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக தொடங்கியிருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் புதிய கிராண்ட் விட்டாரா காரை அதன் நெக்ஸா ஷோரூம் வாயிலாகவே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

ஆகையால், நெக்ஸா விற்பனையாளர்கள் மற்றும் நெக்ஸா ஆன்லைன் தளத்தின் வாயிலாகவே புதிய கிராண்ட் விட்டாராவிற்கான புக்கிங் பணிகள் ஏற்கப்பட்டு வருகின்றன. புக்கிங் தொகையாக ரூ. 11 ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது. காரை புக் செய்பவர்களுக்கு வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் மாருதி சுஸுகி டெலிவரி வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸுகி நிறுவனம் மிக சமீபத்திலேயே பிரெஸ்ஸா எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, நிறுவனம் மற்றுமொரு புதிய தயாரிப்பாக விரைவில் கிராண்ட் விட்டாராவை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா உடனான கூட்டணியின் வாயிலாகவே மாருதி சுஸுகி இப்புதிய கிராண்ட் விட்டாராவை உருவாக்கியிருக்கின்றது.

அண்மையில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எனும் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காரை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட சுஸுகி குளோபல்-சி பிளாட்பாரத்தை பயன்படுத்தியே புதிய கிராண்ட் விட்டாரா உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே மிகவும் துடிப்பான எஸ்யூவி தோற்றம், அதிக பிரீமியம் அம்சங்கள் மற்றும் சூப்பரான ஹைபிரிட் வசதி கொண்ட மோட்டார் உள்ளிட்ட அம்சங்களை மாருதி சுஸுகி நிறுவனம் கிராண்ட் விட்டாராவில் வாரி வழங்கியிருக்கின்றன.

நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கிராண்ட் விட்டாரா காரை உலக தரத்திற்கு ஏற்ப உருவாக்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஐரோப்பா மற்ரும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு இக்காரை ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணத்தினாலேயே கிராண்ட் விட்டாராவை அது உலக தரத்திற்கு ஏற்ப உருவாக்கியுள்ளது.

தற்போது உலக சந்தையில் விற்பனையில் இருக்கும் கிராண்ட் விட்டாராவை ரீ-பிளேஸ் செய்யும் வகையில் இந்த கார் அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. புதிய கிராண்ட் விட்டாரா இரு விதமான எஞ்ஜின் தேர்வில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும். மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட 1.5 லிட்டர் கே15சி பெட்ரோல் மற்றும் டொயோட்டாவின் ஸ்ட்ராங்கான ஹைபிரிட் அம்சம் கொண்ட 1.5 லிட்டர் டிஎன்ஜிஏ மோட்டார் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது.

இரண்டும் அதிக எரிபொருள் சேமிப்பை வழங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, டிஎன்ஜிஏ மோட்டார் 91 எச்பி மற்றும் 122 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், சேர்த்து 79 எச்பி மற்றும் 141 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய ஹைபிரிட் மோட்டார் ஒன்றும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கும். இதற்கென தனி பேட்டரி பேக் உள்ளிட்டவையும் இந்த வெர்ஷனில் வழங்கப்பட இருக்கின்றது.

இந்த பேட்டரி பேக் தானாக காரின் இயக்கத்தில் இருந்து சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆகையால், தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இந்த பேட்டரிக்கு இருக்காது. இதுபோன்று சிறப்பு வசதியே மைல்டு ஹைபிரிட் வெர்ஷனுடன் உருவாகியிருக்கும் கே-சீரிஸ் மோட்டாரும் இருக்கின்றதும்.

இந்த 101 எச்பி மற்றும் 135 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மாதிரியான மைல்டு ஹைபிரிட் அம்சத்துடனேயே எர்டிகா மற்றும் பிரெஸ்ஸா ஆகிய கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. மாருதி சுஸுகி புதிய கிராண்ட் விட்டாரா காரில் கூடுதல் சிறப்பு வசதியாக ஆல் கிரிப் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் கூடுதல் தேர்வாக வழங்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








