ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை கனவுல கூட நெனச்சு பாக்க முடியாது!

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் எவ்வளவு கார்களை தயாரித்துள்ளது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த செப்டம்பர் உற்பத்தி செய்த பயணிகள் வாகனங்கள், அதாவது கார்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 1,73,929 பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் சுமார் 1.60 லட்சம் கார்களை மட்டுமே உற்பத்தி செய்திருந்தது. இதன் மூலம் கார் உற்பத்தியில் மாருதி சுஸுகி நிறுவனம் சுமார் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இனி செக்மெண்ட் வாரியாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் உற்பத்தியை காணலாம்.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

மினி மற்றும் காம்பேக்ட் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் 1,28,604 கார்களை கடந்த செப்டம்பர் மாதம் உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனையில் அதிக பங்களிப்பு செக்மெண்ட் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ஆல்டோ (Alto), வேகன் ஆர் (Wagon R), ஸ்விஃப்ட் (Swift), பலேனோ (Baleno), எஸ்-பிரெஸ்ஸோ (S-Presso), டிசையர் (Dzire) மற்றும் செலிரியோ (Celerio) ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டை சேர்ந்தவை ஆகும்.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

அதே நேரத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிட்-சைஸ் செக்மெண்ட்டை பொறுத்தவரையில், கடந்த செப்டம்பர் மாதம் 2,654 சியாஸ் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மறுபக்கம் யுடிலிட்டி செக்மெண்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 42,671 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. எர்டிகா (Ertiga), எஸ்-க்ராஸ் (S-Cross), விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza) மற்றும் எக்ஸ்எல்6 (XL6) ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் வருகின்றன.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கடந்த செப்டம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 1,73,929 கார்களை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் எஸ்-பிரெஸ்ஸோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை (S-Presso CNG) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் ஆரம்ப விலை 5.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

புதிய மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ள நிலையில், எரிபொருளுக்காக ஆகும் செலவை குறைக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு புதிய மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

இதற்கு முன்னதாக வெகு சமீபத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனையும் (Maruti Suzuki Swift CNG) விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வரும் காலங்களில் தனது சிஎன்ஜி லைன்-அப்பை இன்னும் விரிவுபடுத்துவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

இதன் ஒரு பகுதியாக வெகு விரைவில் பலேனோ காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடப்பு அக்டோபர் மாதத்திலேயே புதிய மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி கார் (Maruti Suzuki Baleno CNG) விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

மாருதி சுஸுகி பலேனோ, இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள ஒரு கார் ஆகும். டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20 மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகிய கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோ கார் போட்டியிட்டு வருகிறது. புதிய சிஎன்ஜி வெர்ஷனின் வருகைக்கு பின்னர் மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஒரு மாசத்துக்கு இவ்ளோ கார்களை மாருதி தயாரிக்குதா! மத்த கம்பெனிலாம் இதை நெனச்சு கூட பாக்க முடியாது!

இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) என்ற புதிய மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய காருக்கு 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, October 21, 2022, 12:18 [IST]
English summary
Maruti suzuki passenger vehicles production increases by 11 per cent in september 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+