வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

சமீபத்திய அறிமுகமான மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் தொடர்பான முதல் தொலைக்காட்சி கமர்ஷியல் (TVC) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

இந்த 2022 பிப்ரவரி மாதத்தில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, பெரியதாக எந்தவொரு அறிவிப்புமின்றி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரையும் மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.39 லட்சங்களில் (ஆரம்ப நிலை எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட்) இருந்து ரூ.7.10 லட்சங்கள் (டாப் இசட்.எக்ஸ்.ஐ+ வேரியண்ட்) வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான டிவிசி வீடியோ மாருதி சுஸுகி அரேனா யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. 'இதயத்தில் இருந்து வலிமை' என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ தொலைக்காட்சி மற்றும் இணையத்தள பக்கங்களில் விளம்பரப்படுத்துவதற்கு ஏற்ப 30 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ளது.

புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரின் வெளிப்புற தோற்றத்தை காட்டுவதில் இருந்து ஆரம்பிக்கும் இந்த வீடியோவில் காரின் உட்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இதன் மூலமாக செயல்படும் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளன. பின்னர், பொருட்களை வைத்து செல்லும் அளவிற்கு இந்த காரின் பின்பக்கத்தில் இடவசதி வழங்கப்பட்டுள்ளது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

புதிய வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்டுள்ள புதிய 1.2 லிட்டர் அட்வான்ஸ் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பறைச்சாற்றப்பட்டுள்ளது. இதற்கேற்ப சில உணர்வுப்பூர்வமான வசனங்கள் டிவிசி வீடியோவில் இடம் பெறுகின்றன. இறுதியாக, 2022 வேகன்ஆர் -இன் மைலேஜ் 25.19kmpl என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பு வழங்கப்பட்டதை போலவே புதிய வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் காரும் எல்.எக்ஸ்.ஐ, வி.எக்ஸ்.ஐ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ என்கிற மூன்று விதமான ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

அத்துடன் கமர்ஷியல் பயன்பாட்டிற்கான டூர் வெர்சனிலும் வழக்கம்போல் வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட் கார் கிடைக்கும். 2022 வேகன்ஆருக்கு பிரத்யேகமான சந்தா திட்டங்களை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது. இதன்படி மாதத்தவணைகள் வெறும் ரூ.12,300/மாதம் -இல் இருந்து ஆரம்பிக்கின்றன. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், புதிய வேகன்ஆரும் முந்தைய வேகன்ஆரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே விளங்குகின்றன.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

மாருதி சுஸுகியின் இந்த உயரம் அதிகமான ஹேட்ச்பேக் காரின் நீளம் 3,655மிமீ, அகலம் 1,620மிமீ மற்றும் உயரம் 1,675மிமீ மற்றும் வீல்பேஸ் (முன்& பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2,435மிமீ ஆகும். பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி 341 லிட்டர்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய வேகன்ஆருக்கு ஏகப்பட்ட வண்ணங்களிலான நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

2022 வேகன்ஆர் மாடலின் டாப் இசட்.எக்ஸ்.ஐ வேரியண்ட்டை மட்டும் கருப்பு மேற்கூரை உடன் சிவப்பு மற்றும் கருப்பு மேற்கூரை உடன் மக்மா க்ரே என்கிற இரட்டை-நிற பெயிண்ட் தேர்வுகளில் வாங்கலாம். வேகன்ஆரின் மேற்கூரையின் டிசைன் மற்றும் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் உட்புறத்திலும் ஏகப்பட்ட புதிய தலைமுறை வசதிகள் மற்றும் அப்டேட்டான தொழிற்நுட்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

புதிய வேகன்ஆரின் உட்புற கேபின் ஆனது பிரீமியம் தரத்திலான பழுப்பு மற்ரும் அடர் க்ரே என்கிற இரட்டை-நிறங்களில் அலங்கரிப்பட்டு வழங்கப்படுகிறது. துணியால் ஆன இருக்கை கவர்கள், ஸ்மார்ட்ப்ளே நாவிகேஷன் உடன் 7-இன்ச் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ மற்றும் க்ளவுட் சார்ந்த சேவைகளை வழங்கக்கூடிய 4 ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை 2022 வேகன்ஆரின் உள்ளே வழங்கப்பட்டுள்ள அம்சங்களாகும். இவற்றுடன் வேகன்ஆர் மாடலின் பாதுகாப்பு அம்சங்களில் இம்முறை மாருதி சுஸுகி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

வலிமை பெற்ற 1.2 லி கே-சீரிஸ் என்ஜினுடன் 2022 மாருதி வேகன்ஆர் ஃபேஸ்லிஃப்ட்!! முதல் டிவிசி வீடியோ வெளியீடு!

இந்த ஹேட்ச்பேக் காரில் இரட்டை காற்றுப்பைகள் (அனைத்து வேரியண்ட்களுக்கும்), விபத்துகளின் போது இறுக்கி பிடிக்கக்கூடிய சீட் பெல்ட்கள், சீட் பெல்ட் அணியாததை நினைவூட்டுவான், காரின் வேகத்தை உணர்ந்து தானாக லாக் ஆகும் கதவுகள், ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்காக ஏதுவாக சென்சார்கள் என மொத்தம் 12 விதமான பாதுகாப்பு வசதிகளை மாருதி சுஸுகி வழங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, February 28, 2022, 16:50 [IST]
English summary
Maruti suzuki released 2022 wagonr official tvc find here all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+