மாருதி பிரெஸ்ஸா கார் ஓனர்களுக்கு நற்செய்தி! உங்க காருக்கு அப்டேட் வந்துருக்குது!

மாருதி சுஸூகி நிறுவனம் தனது பிரெஸ்ஸா காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான ஓவர் தி ஏர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டை எப்படி செய்வது? இது குறித்த தகவல்கள்களை விரிவாக காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்தின் மின் சைஸ் எஸ்யூவி காரான பிரெஸ்ஸா கார் மிகவும் பிரபலமான கார் ஏராமானோர் இந்த காரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் பின் இந்த காருக்கான விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரெஸ்ஸா வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்றை மாருதி சுஸூகி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாருதி பிரெஸ்ஸா கார் ஓனர்களுக்கு நற்செய்தி! உங்க காருக்கு அப்டேட் வந்துருக்குது!

மாருதி சுஸூகி நிறுவனம் பிரெஸ்ஸா காரில் பொருத்தியுள்ள ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்ட காருக்கு ஓடிஏ அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வெளியிட்டை வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் இலவசமாக செய்து கொள்ள முடியும். இதை அவர்கள் சர்வீஸ் சென்டருக்கு தான் சென்று செய்ய வேண்டும் என்பதில்லை. ஸ்மார்ட் போனை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்து அப்டேட் செய்யலாம். அல்லது மாருதி நிறுவனத்தின் வெப்சைட்டிலேயே நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த அப்டேட் செய்துவிட்டபிறகு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை பயன்படுத்த முடியும். இந்த வசதி சமீபத்தில் வெளியான கிராண்ட் விட்டாரா காரில் இருகு்கிறது. இது போக இந்த அப்டேட்டில் ஹெட்ஸ் அப் டிஸ்பிளேயில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் இடம் பெற்றுள்ளது. இதனால் டிரைவர் சாலையிலிருந்து கண்ணை எடுக்காமலேயே நேவிகேஷனையும் நோட் செய்ய முடியும்.

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா கார் கடந்த ஜூன் மாதம் அறிமுகமான நிலையில் இந்த காரை 1.9 லட்சம் பேர் புக் செய்துள்ளனர். இந்த கார் ரூ7.99 லட்சம் என்ற ஆரம்ப விலையிலிருந்து விற்பனையாகி வருகிறது. இந்த கார் மார்கெட்டில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனட், நிஸான் மேக்னைட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இதை செய்கிறது.

இந்த பிரெஸ்ஸா காரில் புதிதாக கனெக்டிவிட்டி அப்டேட்டும் இத்துடன் சேர்ந்து செய்யப்படுகிறது. ஸ்மார்டர் ப்ளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மென்டில் வயர்லெஸ் கனெக்டிவிட்டியும் ஹெட்ஸ் அப் மற்றும் மல்டி- இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே கனெக்டிவிட்டி ஆகியவற்றின் அப்டேட்டை பெறுகிறது. இவை இரண்டையுமே காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இன்டர்நெட் வசதி கொண்ட ஒரு போனை இணைத்தால் தானாகவே அப்டேட் ஆகிவிடும். இதை கார் பயணத்தின் போதே செய்யலாம் இதற்காக வாடிக்கையாளர்கள் தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.

இந்த காரில் முக்கிய அம்சங்களாக எலெக்ட்ரிக் சன் ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் டாக் மற்றும் ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மென்ட் உடன் இணைக்கப்பட்ட ARKAMYS-ன் சவுண்ட் சென்ஸ் தொழிற்நுட்பம், 360 டிகிரி கேமரா, 40க்கும் அதிகமான கனெக்டிவிட்டி அம்சங்கள் நிறைந்த சுஸூகி கனெக்ட் டெலிமேட்டிக்ஸ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 10, 2022, 17:56 [IST]
English summary
Maruti suzuki released ota update for brezza suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+