சத்தமே இல்லாம பிரபல கார் மாடலை நீக்கிய மாருதி.. குமுறும் வாடிக்கையாளர்கள்! இத நீக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பிரபலமான கார் மாடல் ஒன்றை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்புகளில் எஸ்-கிராஸ் கார் மாடலும் ஒன்று. இந்த மாடலையே நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து நீக்கியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் எஸ்-கிராஸ் கார் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. பெரியளவில் இந்த காருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இப்போதும் கணிசமான அளவில் இந்த மாடலுக்கு ரசிகர்கள் உள்ளனர்.

அவர்களையே இந்த காரின் வெளியேற்றம் அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. லக்சூரி கார்களுக்கு இணையான ஸ்டைலான தோற்றம், அதிகளவு பிரீமியம் அம்சங்களைக் கொண்டதே இந்த எஸ்-கிராஸ். மாருதி சுஸுகி நிறுவனம் அதன் நெக்ஸா ஷோரூம் வாயிலாகவே இக்காரை விற்பனைக்கு வழங்கி வந்தது. பிரீமியம் தயாரிப்புகளை மட்டுமே இந்த ஷோரூம் வாயிலாக நிறுவனம் விற்பனைக்கு வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே எஸ்-கிராஸ் நெக்ஸா தளத்தில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றது. ஆகையால், இனி இந்த கார் விற்பனைக்குக் கிடைக்காது என்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த வெளியேற்றத்தால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப நிறுவனம் பலினோ காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் கூபே ரக வாகனத்தைக் களமிறக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. மாருதி சுஸுகி நிறுவனம் எஸ்-கிராஸ் காரை முதல் முறையாக இந்தியாவில் 2015ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தின்போது இந்த கார் டீசல் எஞ்ஜினில் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டது. அந்தவகையில், 1.3 லிட்டர் மல்டிஜெட் மோட்டாரிலும், அடுத்ததாக 1.6 லிட்டர் டீசல் மோட்டாரிலும் விற்பனைக்கு வழங்கப்பட்டது.

இவற்றை அடுத்தே 2020 ஆம் ஆண்டில் டீசல் மோட்டார் தேர்வுகளுடன் சேர்த்து முதல் முறையாக பெட்ரோல் மோட்டார் அறிமுகம் செய்யப்பட்டது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் மைல்டு ஹைபிரிட் மோட்டாருடன் அது விற்பனைக்கு வழங்கப்பட்டது. இந்த வசதிக் கொண்ட எஸ்-கிராஸுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இது நல்ல மைலேஜை வழங்கக் கூடியதாகவும், அதிக பிரீமியம் அம்சத்தைக் கொண்டதாகவும் இருந்ததால் கணிசமான அளவு விற்பனையைப் பெற்று வந்தது. ஆனால், இந்த வரவேற்பானது நாளுக்கு நாள் டல்லடிக்க ஆரம்பித்தது. இதன் விளைவாகவே நிறுவனம் தற்போது எஸ்-கிராஸ் காரை விற்பனையில் இருந்து அகற்றியிருக்கின்றது.

இதைத்தொடர்ந்து புதுமுகங்களால் நிறுவனம் இந்தியர்களைக் கவரும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் டொயோட்டா நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாக்கிய கிராண்ட் விட்டாராவை நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் எஸ்யூவி காராகும். இரு விதமான ஹைபிரிட் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என்கிற தேர்வுகளிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரின் அதிகபட்ச மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கு 27.97 கிமீ ஆகும். கிராண்ட் விட்டாரா ரூ. 10.45 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பன்முக ஆடம்பர வசதிகளுடன் இக்கார் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை (ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்பம் கொண்டது), ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், காரின் பின் பக்கத்திற்கும் ஏசி வெண்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழையும் வசதி, பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட் கேமிரா, ஆம்பியன்ட் லைட்டுகள், கார் இணைப்பு தொழில்நுட்பம், எஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் கிராண்ட் விட்டாராவில் வழங்கப்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications