சான்ஸே இல்ல... சிஎன்ஜி கார் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட மாருதி சுஸுகி... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு சிஎன்ஜி (CNG) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த சூழலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஎன்ஜி கார்களின் விற்பனை தற்போது ஒட்டுமொத்தமாக 10 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. 10 லட்சம் சிஎன்ஜி கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்திருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது சிஎன்ஜி கார்களை எஸ்-சிஎன்ஜி (S-CNG) என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான செக்மெண்ட்களில் மொத்தம் 9 எஸ்-சிஎன்ஜி கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், ஆல்டோ, எஸ்-ப்ரெஸ்ஸோ, வேகன்ஆர், செலிரியோ, டிசையர், எர்டிகா, ஈக்கோ, சூப்பர் கேரி, டூர்-எஸ் ஆகிய வாகனங்கள் அடங்குகின்றன.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2010-11ம் நிதியாண்டில், 15,900 சிஎன்ஜி கார்களை விற்பனை செய்திருந்தது. 2016-17ம் நிதியாண்டில் இந்த விற்பனை எண்ணிக்கை 3.5 லட்சமாக உயர்ந்தது. இதன்பின் இந்த எண்ணிக்கை 2018-19ம் நிதியாண்டில் 5.3 லட்சமாகவும், 2020-21ம் நிதியாண்டில் 7.98 லட்சமாகவும் உயர்ந்தது. இந்த சூழலில், இந்த எண்ணிக்கை தற்போது 10 லட்சமாக உயர்ந்துள்ளது.

இது 2021-22ம் நிதியாண்டின் பிப்ரவரி மாதம் வரையிலான கணக்கீடு ஆகும். பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி கார்களை பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளை நாம் பெற முடியும். இயக்குவதற்கான செலவு குறைவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை சிஎன்ஜி கார்களின் மிக முக்கியமான நன்மைகள் ஆகும்.

ஆனால் சிஎன்ஜி ஸ்டேஷன்களுக்கான பற்றாக்குறைதான், சிஎன்ஜி கார்களை பயன்படுத்துவதில் இருக்கும் பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் வரும் காலங்களில் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் சிஎன்ஜி ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சிஎன்ஜி கார்களை பயன்படுத்துவதில் இருக்கும் மிக முக்கியமான பின்னடைவும் இதன் மூலமாக நிவர்த்தி செய்யப்படவுள்ளது. எனவே தற்போது இருப்பதை காட்டிலும், வரும் காலங்களில் சிஎன்ஜி கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தற்போது அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன.

இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது டியாகோ மற்றும் டிகோர் கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், வரும் காலங்களில் மேலும் பல்வேறு கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதற்கிடையே மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்களுக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பிற்கு சிறப்பான மைலேஜ் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் செலிரியோ கார் ஒரு கிலோவிற்கு 35.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், அதே நேரத்தில் வேகன் ஆர் சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 34.05 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் ஆல்டோ சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 31.59 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 31.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசையர் சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர எர்டிகா சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 26.08 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்றும், ஈக்கோ சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 20.88 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்றும் மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது. இவை மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஎன்ஜி கார்கள் இந்திய சந்தையில் வெற்றி நடைபோட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








