கொஞ்சம் நாள் கழிச்சு வாங்கிக்கலாம்னு நினைச்சாலாம் முடியாது.. குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்!

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மலிவு விலை கார் மாடல்களில் எஸ்-பிரஸ்ஸோவும் ஒன்று. இந்த கார் மாடலிலேயே நிறுவனம் சிறப்பு பதிப்பு ஒன்றை இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ எக்ஸ்ட்ரா எனும் கார் மாடலை இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது.

இதுவே நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டிருக்கும் கார் மாடல் ஆகும். எத்தனை யூனிட்டுகள் விற்பனைக்கு வழங்கப்படும் என்கிற தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும், மிகக் குறைவான எண்ணிக்கையில் குறிப்பிட்ட காலம் மட்டுமே இது விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதாலேயே இந்த நிலை என்பது கவனிக்கத்தகுந்தது. வழக்கமான எஸ்-பிரஸ்ஸோவைக் காட்டிலும் பலமடங்கு சிறப்பு அலங்காரங்களைக் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ் பிரஸ்ஸோ

குறிப்பாக காரின் கேபினுக்குள் எக்கசக்க அம்சங்கள் வாரி வழங்கப்பட்டு உள்ளன. உள்பக்கத்தில் மட்டும் இல்லைங்க வெளிப்புறத்திலும் பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருப்பதை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், காரின் முகப்பு பகுதியில் ஸ்கிட் பிளேட், டூர் கிளாடிங், ஃப்ரண்ட் அப்பர் கிரில் மற்றும் வீல் ஆர்ச் கிளாடிங் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஏற்கனவே கூறியதைப் போல் காரின் உட்பகுதியிலும் அதிகப்படியான அலங்காரப் பணிகளை மாருதி சுஸுகி மேற்கொண்டிருக்கின்றது. அந்தவகையில், காரின் உட்பகுதியை முழுமையாக கருப்பு நிறத்தால் மாருதி சுஸுகி அலங்காரம் செய்து உள்ளது. இதுதவிர, புதிய தோற்றத்திலான இருக்கையை அது சேர்த்துள்ளது. இந்த இருக்கை வெள்ளை நிற பைக், சிவப்பு நிற தையல் உள்ளிட்டவற்றால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, டூர் பேட், ஏசி வெண்ட், சென்டர் கன்சோல் ஆகியவற்றில் சிவப்பு நிறத்திலான அக்செண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எஸ் பிரஸ்ஸோ

இது காரின் உட்பகுதிக்கு பலமடங்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த மாற்றங்களை மட்டுமே புதிய சிறப்பு பதிப்பு எஸ்-பிரஸ்ஸோ எக்ஸ்ட்ரா காரில் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஃப்ளூர் மேட்டுகள் விஷயத்திலும் அது சிறப்பு யுக்தியை கையாண்டிருக்கின்றது. புதிய ஸ்டைலான மேட்களே வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பிரத்யேக மாற்றங்களுடனேயே எஸ்-பிரஸ்ஸோ எக்ஸ்ட்ரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

விரைவில் இதுகுறித்த தகவல்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தாண்டு மற்றும் வரும் பொங்கல் பண்டிகை தினத்தை புதிய காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்களைக் கவரும் பொருட்டு மாருதி சுஸுகி இந்த சிறப்பு பதிப்பை எஸ்-பிரஸ்ஸோவை விற்பனைக்குக் கொண்டு வருகின்றது. இதன் வழக்கமான மாடல் ரூ. 4.25 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

எஸ் பிரஸ்ஸோ

இதைவிட சில ஆயிரங்களே அதிகமானதாகக் கொண்டு எஸ்-பிரஸ்ஸோ எக்ஸ்ட்ரா விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சிறப்பு பதிப்பு எஸ்-பிரஸ்ஸோ எக்ஸ்ட்ரா கார் மாடலின் எஞ்ஜின் விஷயத்தில் எந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்காது என கூறப்படுகின்றது. இப்போதையே நிலவரப்படி இந்த கார் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் கே10சி பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பம் இந்த மோட்டார் ஆகும்.

இந்த மோட்டார் 65.7 பிஎச்பி பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 89 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி (ஏஜிஎஸ்) கியர்பாக்ஸ் தேர்வுகளே இக்காரில் வழங்கப்படுகின்றது. இதே தேர்வே சிறப்பு பதிப்பு எஸ்-பிரஸ்ஸோ எக்ஸ்ட்ராவிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 25.30 கிமீ வரை மைலேஜ் தரும். இப்போது விற்பனையில் இருக்கும் எஸ்-பிரஸ்ஸோ கார் மாடலில் பாதுகாப்பு அம்சங்களாக பல சிறப்பு கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இரு ஏர் பேக்குகள் (முன் பக்கத்தில்), இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ப்ரீ டென்ஷனர் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீடு அலர்டு சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. இதேபோல் பன்முக தொழில்நுட்ப வசதிகளை தாங்கிய காராகவும் எஸ்-பிரஸ்ஸோ இருக்கின்றது. டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட திரை, ஆடியோ மற்றும் குரல் கட்டளை வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல், ட்வின் சேம்பர் ஹெட்லேம்ப் மற்றும் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ வசதி அடங்கிய டைனமிக் சென்டர் கன்சோல் உள்ளிட்ட அம்சங்களே எஸ்-பிரஸ்ஸோ காரில் மிக சூப்பரான அம்சங்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 30, 2022, 10:16 [IST]
English summary
Maruti suzuki s presso xtra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+