விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த 2022 ஆகஸ்டு மாதத்தில் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

ஏதோ இப்பதான் ஆகஸ்டு மாசம் தொடங்கின மாதிரி இருக்கு அதுக்குள்ள அது முடிஞ்சு, இப்போ செப்டம்பர் மாசமும் தொடங்கிருச்சு. மாதம் தொடங்கியதை முன்னிட்டு கடந்த மாதம் முழுவதும் செய்யப்பட்ட புதிய வாகன விற்பனை நிலவரத்தை ஒவ்வொரு வாகன உற்பத்தி நிறுவனங்களும் வெளியிடத் தொடங்கியுள்ளன. ஆச்சரியமளிக்கும் வகையில் பல நிறுவனங்கள் கடந்த ஆகஸ்டில் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், 2022 ஆகஸ்டு மாதத்தில் ஒட்டுமொத்தமாக 78,843 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருப்பதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

இது 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலம் 36 சதவீதம் அதிகம் விற்பனை எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனம் சந்தித்திருப்பதைப் போலவே மிகவும் சூப்பரான விற்பனை வளர்ச்சியையே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற நிறுவனங்கள் சிலவும் 2022 ஆகஸ்டு மாதத்தில் பெற்றிருக்கின்றன. அவ்வாறு, அதிக எண்ணிக்கை வாகனங்களை விற்பனைச் செய்திருக்கும் வாகன உற்பத்தியாளர்களில் மாருதி சுஸுகியும் ஒன்று.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

இந்நிறுவனம் சென்ற ஆகஸ்டு மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,65,173 யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது 2021 ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலும் 26 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியாகும். அதாவது, இந்நிறுவனம் சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 1,30,699 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது. இதனையே பீட் செய்யும் வகையில் நடப்பாண்டு ஆகஸ்டில் நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையாகியுள்ளன.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

தற்போது விற்பனையாகியிருக்கும் ஒட்டுமொத்த வாகன யூனிட்டுகளில் 1,43,692 யூனிட்டுகள் உள்நாட்டில் விற்பனையாகியவை ஆகும். மீதமுள்ள 21,481 யூனிட்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையிலேயே நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்தில் செய்யப்பட்டிருக்கும் விற்பனை எண்ணிக்கை அதிகமானதாக உள்ளது.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

அதுவே, இதே நடப்பு 2022 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துடன் இப்போது கிடைக்கப்பட்டிருக்கும் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் நிறுவனம் லேசாக விற்பனைச் சரிவைச் சந்தித்திருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. ஆமாங்க, 2022 ஜூலையில் நிறுவனம் 1,75,916 யூனிட்டுகளை விற்பனைச் செய்திருக்கின்றது. இது, 2022 ஆகஸ்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் யூனிட்டுகள் அதிகம் ஆகும்.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

இந்தியாவின் மாபெரும் வாகன உற்பத்தியாளராக மாருதி சுஸுகி விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த புகழைத் தொடர்ச்சியாக தாங்கிக் கொண்டிருக்கும் வகையிலேயே கடந்த ஆகஸ்டு மாதத்தில் அதிக எண்ணிக்கையில் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகியுள்ளன. நிறுவனத்தின் சிறிய ரக வாகனங்களுக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் பலினோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு மிக மிக சூப்பரான டிமாண்ட் நிலவி வருகின்றது. இவற்றிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அதீத வரவேற்பின் காரணத்தினாலேயே இந்தியாவில் முன்னணி வாகன உற்பத்தியாளராக மாருதி சுஸுகி விளங்கிக் கொண்டிருக்கின்றது.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு அது விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கும் சிஎன்ஜி ரக வாகனங்களும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் பெட்ரோல், டீசல் மிக அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இதன் விலையுயர்வைச் சமாளிக்கும் பொருட்டு மக்கள் மாற்று எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட வாகனங்கள்மீது அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

அந்தவகையில், சிஎன்ஜி வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த ரக வாகன விற்பனையிலும் மாருதி சுஸுகியே முன்னணி வகித்துக் கொண்டிருக்கின்றது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக நிறுவனம் அதன் அனைத்து கார் மாடல்களையும் சிஎன்ஜி வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

விற்பனையில பிச்சு ஒதறுது... டாடா மட்டுமில்லைங்க மாருதியும் ஆகஸ்டுல கெத்து காட்டியிருக்கு... மாருதினா சும்மாவா!

சமீபத்தில்கூட நிறுவனம் அதன் ஸ்விஃப்ட் கார் மாடலை சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, பலினோ, புதிய பிரெஸ்ஸா ஆகிய கார் மாடல்களையும் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆகையால், தற்போது பெற்றுக் கொண்டிருப்பதைப் போலவே வரும் காலங்களிலும் இந்நிறுவனம் தொடர் விற்பனை வளற்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Article Published On: Thursday, September 1, 2022, 20:49 [IST]
English summary
Maruti suzuki sales breakup in august 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+