என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ்... எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா?

மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஆகஸ்ட் மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களை காணலாம்.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் மாருதி. இந்நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். இந்திய மக்களின் ரசனையை அறிந்து கார்களை தயாரிக்கும் இந்நிறுவனத்தின் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்ல இந்த நிதியாண்டின் முதல் 5 மாதத்திற்கான விற்பனை ரிப்போர்ட்டும் வெளியாகியுள்ளது. அதை விபரமாக காணலாம்.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

கடந்த ஆகஸ்ட் மாதம் மாருதி நிறுவனம் ஓட்டு மொத்தமாக 1,65,173 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 1,30,699 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இதுவே இந்த நிதியாண்டின் விற்பனை விபரத்தை பார்க்கும் போது ஏப்-ஆகஸ்ட் வரை மொத்தம் 8,09,020 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வெறும் 6,46,775 வானகங்கள் விற்பனையாகியிருந்தது.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

இதில் பயணிகள் வாகனத்தை பொறுத்தவரை கடந்த மாதம் மொத்தம்1,34,166 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்ததுடன் ஒப்பிட்டால் அப்பொழுது 1,03,187 வானகங்கள் விற்பனையாகியிருந்தது. இது 30.02 சதவீதம் அதிகம் ஆகும். ஆனால் கடந்த ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் அப்பொது 1,42,850 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது இது 6.08 சதவீதம் விற்பனை சரிவாகும்.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

இதே பயணிகள் வாகனம் இந்த நிதியாண்டில் மொத்தம்6,46,170 வாகனங்கள் இதுவரை விற்பனையாகியுள்ளது. இதே காலகடத்தில் கடந்த நிதியாண்டில் மொத்தம் 5,29,981 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

இதில் மினி செக்மெண்டில் இந்நிறுவனம் ஆல்டோ, எஸ்பிரஸ்ஸோ ஆகிய கார்களை விற்பனை செய்கிறது. இது மொத்தம் 22,162 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு 20,461 கார்கள் விற்பனையாகியிருந்தது. நிதியாண்டு கணக்கில் 91,482 கார்கள் இந்த நிதியாண்டில் விற்பனையாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் 87386 கார்கள் விற்பனையாகியிருந்தது.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

அடுத்தாக காம்பேக் செக்மெண்டை பொருத்தவரை பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஸ், ஸ்விஃப்ட், டூர் எஸ், வேகன் ஆர் ஆகிய கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்கிறது. கடந்த மாதம் இந்தசெக்மெண்டில் சொத்தம் 71,557 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஆகஸ்டில் 45,577 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. நிதியாண்டு கணக்கில் 3,61,252 கார்கள் தற்போது விற்பனையாகியுள்ளது கடந்த நிதியாண்டில் 2,77,355 கார்கள் விற்பனையாகியிருந்தது.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

மிட் சைஸ் செக்மெண்டில் இந்நிறுவனம் சியாஸ் காரை மட்டுமே விற்பனைசெய்கிறது. கடந்த ஆகஸ்டில் மொத்தம் 1,516 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு ஆகஸ்டில் மொத்தம் 2,146 கார்கள் விற்பனையாகியிருந்தது. நிதியாண்டு கணக்கில் 5,567 கார்கள் இந்த நிதியாண்டிலும், 6,114 கார்கள் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்திலும் பதிவாகியுள்ளது.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

யூட்டிலிட்டி வாகனத்தை பொருத்தவரை இந்நிறுவனம் பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-கிராஸ், எக்ஸ்எல்6 ஆகி கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26,932 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு ஆகஸ்டில் 24,337 கார்கள் விற்பனையாகியிருந்தது, நிதியாண்டு கணக்கி் 1,31,056 கார்கள் இந்த நிதியாண்டிலும் 1,16,620 கார்கள் கடந்த நிதியாண்டிலும் விற்பனையாகியுள்ளது.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

வேன்களை பொருத்தவரை ஈக்கோ என்ற ஒரு வாகனத்தை மட்டுமே மாருதி நிறுவனம் விற்பனைசெய்து வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 11,999 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் 10,666 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. நிதியாண்டு கணக்கில் 58,813 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 42,506 வாகனங்கள் கடந்த நிதியாண்டின் இதே காலகடத்தில் விற்பனையாகியிருந்தது.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

லைட் கமர்ஷியல் வாகன கேட்டகிரியை பொருத்தவரை சூப்பர் கேரி என்ற ஒரு வாகனத்தை மட்டும் விற்பனை செய்கிறது. இதில் 3,371 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டில் இந்த விற்பனை 2588 ஆக இருந்தது. நிதியாண்டு கணக்கில் 17,004 வாகனங்கள் இந்த நிதியாண்டிலும், 9412 வாகனங்கள் கடந்த நிதியாண்டிலும் விற்பனையாகியுள்ளது.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

இதில் உள்நாட்டு விற்பனையில் மொத்தம் 1,43,692 வாகனங்கள் கடந்த மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 1,10,080 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. நிதியாண்டு கணக்கில் 6,97,791 வாகனங்கள் இந்த நிதியாண்டிலும், 5,59,413 வாகனங்கள் கடந்த நிதியாண்டிலும் விற்பனையாகியுள்ளது.

என்ன இருந்தாலும் மாருதி தான் செம மாஸ் . . . எவ்வளவு கார்களை வித்திருக்காங்க தெரியுமா? . . .

ஏற்றுமதியை பொருத்தவரை 21,481 வாகனங்கள் கடந்த மாதமும், கடந்தாண்டு ஆகஸ்டில் 20,619 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதுவே நிதியாண்டு கணக்கில் 1,11,229 வாகனங்கள் இந்த நிதியாண்டிலும் கடந்த நிதியாண்டில் 87,362 வாகனங்களும் ஏற்றுமதியாகியுள்ளது. மார்கெட்டில் எப்பொழுதும் மாருதி தான் கிங்காக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 2, 2022, 22:04 [IST]
English summary
Maruti suzuki sales report august 2022 know full statistics
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+