ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ3.20 தான் செலவு... விரைவில் வெளியாகிறது கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி கார்!

மாருதி சுஸூகி நிறுவனம் கிராண்ட் விட்டாரா காரில் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்தவுள்ளது. வெறும் ரூ85 செலவில் 26 கி.மீ பயணிக்கலாம்.

டொடயோட்டா நிறுவனம் கிளான்ஸா மற்றும் ஹைரைடர் கார்களின் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு புக்கிங்கை துவங்கிய நிலையில் ஹைரைடர் காரின் மாருதி வெர்ஷனான கிராண்ட் விட்டாரா காரிலும் சிஎன்ஜி வேரியன்டை விரைவில் வெளியிட மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரு கி.மீ பயணிக்க வெறும் ரூ3.20 தான் செலவு... விரைவில் வெளியாகிறது கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி கார்!

மாருதி நிறுவனம் சமீபத்தில் தான் தனது பலேனோ மற்றும் எக்ஸ்எல்6 ஆகிய கார்களில் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தற்போது அர்பன் க்ரூஸர் காரை நிறத்திவிட்டு தனது கிளான்ஸா மற்றும் ஹைரைடர் ஆகிய கார்களின் சிஎன்ஜிவேரியன்ட்களுக்கு புக்கிங்கை துவங்கிவிட்டது. ஹைரைடர் கார் மாருதி நிறுவனத்திடம் கிராண்ட் விட்டாரா என்ற பேட்ஜ்ஜில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் மாருதி நிறுவனமும் விரைவில் தனது கிராண்ட் விட்டாரா காரின் சிஎன்ஜி வேரியன்டை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அப்படி வெளியானால் மாருதியில் மைல்டு ஹைபிரிட் காரின் முதல் சிஎன்ஜி கார் இதுவாக தான் இருக்கும். ஒரு வேலை பிரெஸ்ஸா சிஎன்ஜி முன்னதாக மாருதி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜியை அறிமுகப்படுத்திவிட்டால் மாருதி எஸ்யூவி காரின் சிஎன்ஜி கொண்ட முதல் வாகனமாகக் கூட இது இருக்கும். தற்போது மைல்டு ஹைபிரிட்டில் மட்டுமே சிஎன்ஜி வேரியன்ட் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட் விட்டாரா காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் உடன் மைல்டு ஹைபிரிட் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள பெட்ரோல் இன்ஜின் தான் எர்டிகா சிஎன்ஜி மற்றும் எக்ஸ்எல்6 சிஎன்ஜி ஆகிய கார்களில் இருக்கிறது. இந்த இன்ஜின் சிஎன்ஜி மோடில் 88 பிஎச்பி பவரையும் 98.5 என்எம் டார்க் திறனையும் வெளியப்படுத்தும். இது பெட்ரோல் மோடை விட 15 எச்பி பவர் மற்றும் 38 என்எம் டார்க் திறன் குறைவு.

கிராண்ட் விட்டாரா காரை பொருத்தவரை சிஎன்ஜி வேரியன்ட் வெளியான பின்பு மொத்தம் மைல்டு ஹைபிரிட், ஸ்டிராங்க் ஹைபிரிட், மற்றும் மைல்டு ஹைபிரிட்டில் சிஎன்ஜி வேரியன்ட் ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும். மிட்-சைஸ் எஸ்யூவியில் நல்ல மைலேஜ் தரக்கூடிய காரை விரும்பும் வாடிக்கையாளர்கள் கிராண்ட் விட்டாரா ஸ்டிராங்க் வேரியன்ட் இருக்கும். அந்த காரின் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் மைல்டு ஹைபிரிட்டில் சிஎன்ஜி வேரியன்டை வாங்கிக் கொள்ளலாம்.

விலையைப் பொருத்தவரை தற்போது உள்ள மைல்டு ஹைபிரிட் காரை விட ரூ75,000 அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மைலேஜை பொருத்தவரை ஒரு கிலோ சிஎன்ஜிக்கு மைல்டு ஹைபிரிட்டில் 26கி.மீ அதிகமான மைலேஜை வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி என்றால் தற்போது மார்கெட்டில் சிஎன்ஜி கேஸ்களின் விலை ரூ83-88 என விலையில் விற்பனையாகிறது. சராசரியாக ரூ85 என எடுத்துக்கொண்டாலும் அந்த விலைக்கு 26 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். அதாவது ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ3.20 தான் செலவாகும். இது நல்ல மைலேஜ்தானே!

Article Published On: Friday, November 11, 2022, 10:22 [IST]
English summary
Maruti suzuki set to launch Grand Vitara CNG in december 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+