2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் எக்ஸ்எல் 6 (XL6) எம்பிவி காருக்கு இந்தியாவில் புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றது. மிகக் குறைவான முன் தொகையில் முன்பதிவு பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் மிக விரைவில் அப்டேட் செய்யப்பட்ட 2022 எர்டிகா மற்றும் 2022 எக்ஸ்எல்6 (XL6) ஆகிய எம்பிவி ரக கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. எர்டிகாவிற்கு ஏற்கனவே இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 11 ஆயிரம் முன் தொகையில் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

வரும் 15ம் தேதி அன்று இக்கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த நிலையில் மற்றுமொரு எதிர்பார்ப்பான எக்ஸ்எல்6 காரின் அறிமுகம் எப்போது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வரும் 21 ஏப்ரல் அன்றே எக்ஸ்எல்6 அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதுகுறித்த தகவல்களே தற்போது வெளியாகியுள்ளன.

2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

இத்துடன், எக்ஸ்எல் 6-க்கான புக்கிங் பணிகளையும் மாருதி சுஸுகி நாட்டில் தொடங்கியுள்ளது. மேலும் எர்டிகாவைப் போலவே இந்த காருக்கும் ரூ. 11 ஆயிரம் முன்தொகையில் புக்கிங் பணிகளை மாருதி சுஸுகி தொடங்கியிருக்கின்றது. மாருதி சுஸுகியின் இந்த நடவடிக்கை எக்ஸ்எல்6 வருகையைப் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த எம்பிவி வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

மாருதி சுஸுகி நிறுவனம் 2022 எக்ஸ்எல்6-இல் லேசான மாற்றங்களைச் செய்துள்ளது. மிக பெரிய மாற்றமாக புதிய எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் வசதிகள் உள்ளன. முன்னதாக கே15பி பெட்ரோல் எஞ்ஜின் தேர்வே இக்காரில் வழங்கப்பட்டது. இனி, கே15 சி பெட்ரோல் எஞ்ஜினை எக்ஸ்எல்6-இல் மாருதி பயன்படுத்த இருக்கின்றது.

2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

இது 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பயர்டு மோட்டார் ஆகும். கே15பி மற்றும் கே15சி இவ்விரு மோட்டார்களுக்கும் இடையில் இன்ஜெக்டர்களே வித்தியாசமாக இருக்கின்றது. கே15பி மோட்டாரில் ஒரு சிலிண்டருக்கு ஒரு இன்ஜெக்டர் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், கே15சி மோட்டாரில் ஒவ்வொரு சிலிண்டருக்கும் இரு இன்ஜெக்டர்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

இது மிக சிறந்த கன்ட்ரோல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இத்துடன், ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும் இந்த மோட்டாரில் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் விளைவாக எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டில் லேசான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

அது கே15பி மோட்டாரைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. புதிய மோட்டாருடன் சேர்த்து 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு மாற்றங்களுடனேயே எக்ஸ்எல்6 கார் வரும் 21ம் தேதி நாட்டில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது.

2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

இந்த நிலையிலேயே காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கியுள்ளன. இந்த பணிகளைத் தொடர்ந்து நிறுவனம் முதல் முறையாக 2022 எக்ஸ்எல்6 காரின் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. அந்த படங்கள் புதிய எக்ஸ்எல்6 இரு விதமான நிற தேர்வில் விற்பனைக்கு வர இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

2022 மாருதி எக்ஸ்எல்6 காருக்கு புக்கிங் தொடங்கியது... எதிர்பார்க்கவே இல்ல இவ்ளோ கம்மியான தொகையில் முன்பதிவா!

இதுமட்டுமின்றி புதிய அலாய் வீல் மற்றும் புதிய க்ரில் உள்ளிட்ட காஸ்மெட்டிக் மாற்றமும் எக்ஸ்எல்6-இல் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், புதிய அமைப்புக் கொண்ட இருக்கை, புதிய மல்டி இன்ஃபர்மேஷன் திரை உள்ளிட்டவையும் எக்ஸ்எல்6 காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய எக்ஸ்எல்6 கார் மாருதி சுஸுகியின் நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனைச் செய்யப்பட உள்ளன.

இதுபோன்ற கணிசமான மாற்றங்களுடனேயே வரும் 15ம் தேதி எர்டிகா அறிமுகமாக இருக்கின்றது. இந்த காரின் இருக்கை அமைப்பிலும், அலங்காரப் பொருட்களிலும் பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இத்துடன், இந்த காரின் எஞ்ஜின் விஷயத்திலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

குறிப்பு: 3 மற்றும் 4 படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

More from DriveSpark

Article Published On: Monday, April 11, 2022, 13:59 [IST]
English summary
Maruti suzuki starts booking officially for xl6 launch date also revealed
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+