டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) திகழ்கிறது. இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் புதிய சிஎன்ஜி (CNG) வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

இந்த சூழலில், புதிய ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் தற்போது இந்தியா முழுவதும் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. VXi மற்றும் ZXi என மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த புதிய சிஎன்ஜி காரின் ஆரம்ப விலை 7.77 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

இது VXi வேரியண்ட்டின் விலையாகும். இதுதான் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட். அதே நேரத்தில் ZXi இந்த காரின் டாப் வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டின் விலை 8.45 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

இது சற்று அதிக விலையாக தோன்றலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், இது லாபகரமான ஒன்றாக இருக்க கூடும். ஏனெனில் சிஎன்ஜி கார்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவுதான். வழக்கமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், இந்த புதிய சிஎன்ஜி மாடலில் S-CNG பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர், ட்யூயல் ஜெட், ட்யூயல் விவிடி, நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிஎன்ஜி எரிபொருள் மூலமாக இயங்கும்போது அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 76.5 பிஹெச்பி பவரையும், 4,300 ஆர்பிஎம்மில் 98.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

ஆனால் பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 87.8 பிஹெச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதாவது சிஎன்ஜி எரிபொருள் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் குறையும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற அனைத்து சிஎன்ஜி கார்களிலும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல் புத்தம் புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரிலும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

வசதிகளை பொறுத்தவரையில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்ய கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை, அலாய் வீல்கள் மற்றும் எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்கள் போன்ற அம்சங்கள் புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில் வழங்கப்பட்டுள்ளன.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் ஏற்கனவே இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்விஃப்ட் காரில் சிஎன்ஜி மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கிய மாருதி ஸ்விஃப்ட் காரின் சிஎன்ஜி மாடல்... திருவிழா மாதிரி கூட்டம் கூடுதாம்!

மிகவும் பிடித்தமான காரில் சிஎன்ஜி ஆப்ஷன் என்பதால், ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரை முன்பதிவு செய்வதற்கும், அந்த காரை பற்றிய தகவல்களை விசாரித்து தெரிந்து கொள்வதற்காகவும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் டீலர்ஷிப்களுக்கு வாடிக்கையாளர்கள் பலர் படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் இந்திய சந்தையில் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக தென்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, August 25, 2022, 23:59 [IST]
English summary
Maruti suzuki swift cng starts arriving at dealerships
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+