ரகசியமா வச்சிருக்காங்க! இன்னோவாவிற்கு போட்டியாக மாருதியின் புதிய எம்பிவி
மாருதி நிறுவனம் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் இன்னோவா காருக்கு போட்டியாக மாருதி நிறுவனமும் 3 வரிசை சீட்களை கொண்ட எம்பிவி கார் ஒன்றைக் களம் இறக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ என்பது மிகவும் முக்கியமான நிகழ்வு இந்த நிகழ்வில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவார்கள். வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எக்ஸ்போ நடத்தத் தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்போ நொய்டா பகுதியில் நடக்கவுள்ளது. இந்த எக்ஸ்போவில் இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி தனது 3 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவலகள்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி எஸ்யூவி செக்மெண்டில் தனது பலேனோ கிராஸ் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மாருதியின் பலேனோ கார் ஒரு பிரிமியம் ஹேட்ச் பேக் காரின் அந்த காரின் டிசைனை எஸ்யூவி ஸ்டைலுக்க மாற்றி எஸ்யூவி காராக களம் இறக்குகிறது. இந்த காரை அந்நிறுவனம் YTB என்ற கோட் பெயருடன் தயாரித்துள்ளது. இதை பலேனோ கிராஸ் காராக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக நீண்ட நாட்களாக இந்திய மக்கள் எதிர்பார்த்த ஜிம்னி கார்தான்.
மாருதி நிறுவனம் இந்தியாவில் ஜிம்னி காரை தயாரித்தாலும் அதை வெளிநாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வந்தது. இந்தியாவில் 3 டோர் ஜிம்னி கார்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்பனையாகி வந்தன. இந்நிலையில் மாருதி நிறுவனம் இந்த காரை இந்தியாவிற்கு 5 டோர் காராக மாற்றிக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த கார் இந்தியாவில் லைஃப் ஸ்டைல் ஆஃப்ரோடு செக்மெண்ட் காராக விற்பனைக்கு வரவுள்ளது.
இதில் பலேனோ கிராஸ் கார் ஜனவரி மாதம் அறிமுகமாகி வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரும் என்றும், ஜிம்னி 5 டோர் கார் ஜனவரியில் அறிமுகமாகி ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்களுடன் புதிதாக ஒரு 3 வரிசை சீட்டர் வசதி கொண்ட ஒரு எம்பிவி காரையும் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023 தீபாவளியைக் குறித்து இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளது.
இந்த காரை மாருதி நிறுவனம் சி-செக்மெண்ட் எம்பிவி காராக அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் மார்கெட்டில் நேரடியாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு போட்டியாகக் களம் இறங்கவுள்ளது. இந்த கார் டொயோட்டா- மாருதி இடையேயான ஒப்பந்தப்படி மாருதியின் முதல் ரீ பேட்ஜ் காராக களம் இறங்கவுள்ளது. இந்த கார் நெக்ஸா டீலர்ஷிப் வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. மார்கெட்டில் இந்த கார் ரூ20 லட்சத்தில் துவங்கி ரூ30 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் மாருதி பிராண்டில் வரும் காராக இரந்தாலும் டொயோட்டா தான் இந்த காரை தனது பிடதி ஆலையில் தயாரித்து விற்பனைக்கு அனுப்பவுள்ளது. இதே ஆலையில் தான் மாருதியின் கிராண்ட் விட்டாரா காரும் விற்பனைக்கு வருகிறது. மாருதியின் புதிய எம்பிவி காரும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை போன்ற வடிவமைப்பிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி கிராண்ட் விட்டாரா காரும், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரும் ஒரே மாதிரியாக உருவாக்கப்பட்டதோ அதேபோல தான் இந்த காரும் உருவாக்கப்படுகிறது.
மார்கெட்டிற்கு டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் விற்பனைக்கு வந்தாலும் மார்கெட்டில் பெரும் வெற்றியை பெற்ற கார் கிராண்ட் விட்டாரா கார் தான். இதே டிரெண்ட் இந்த காருக்குள் நீடித்தால் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை விட மாருதியின் எம்பிவி கார் மார்கெட்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மாருதி இந்த காரின் தனது சிக்னேச்சர் பேட்ஜ், புதிய கிரில், புதிய பம்பர் மற்றும் ஹெட்லைட்கள், ஏடிஏஎஸ் சிஸ்டம் ஆகிய இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்பட்ட முதல் மாருதி காராக இந்த கார் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 10.1 இன்ச் டச் ஸ்கிரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், 9 ஸ்பீக்கம் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்,எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்மெண்ட் உடன் கூடிய 2ம் வரிசை சீட், மெமரி ஃபங்சன் உடன் கூடிய பவர்டு டிரைவர் சீட், பானரோமிக் சன் ரூஃப் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இடம் பெறும்
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 172 பிஎச்பி பவர் கொண்ட 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு மைல்டு ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது போக 186 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் ஒரு லிட்டருக்கு 21 கி.மீ வரை மைலேஜை வாரி வழங்கும் என எதிர்பார்க்கலாம். இன்னோவாவை தூக்கி சாப்பிடும் மாருதியின் புதிய எம்பிவி கார்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications