மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த 2022 ஜூலை மாதத்தில் விற்பனை செய்த பயணிகள் கார்கள் & கமர்ஷியல் வாகனங்கள் குறித்த விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

இந்தியாவில் பயணிகள் கார்கள் விற்பனையில் பல வருடங்களாக முதலிடம் வகித்துவரும் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2022 ஜூலை மாதத்தில் மொத்தமாக 1,75,916 வாகனங்களை உலகளவில் விற்பனை செய்துள்ளது. இதில் 1,45,666 வாகனங்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தாலும், 9,939 மாருதி சுஸுகி வாகனங்கள் மற்ற நிறுவனங்களாலும் இந்தியாவில் விற்பனை செய்யபட்டவை ஆகும்.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

மீதி 20,311 வாகனங்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை. கடந்த வருடங்களில் கொரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் உலகளாவிய குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் மற்ற நிறுவனங்களை போன்று நம்பர்.1 மாருதி சுஸுகியும் கார்கள் தயாரிப்பில் பெரிதும் போராட்டம் கண்டது.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

ஆனால் தற்போது அத்தகைய சூழல்கள் மாறியுள்ளன என்றாலும், எலக்ட்ரானிக் சிப்கள் பற்றாக்குறையானது கார்கள் உற்பத்தியில் சற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது என்னவோ உண்மையே. அளவில் சிறிய மாருதி கார்களாக விளங்கும் ஆல்டோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கடந்த ஜூலை மாதத்தில் மொத்தமாக 20,333 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 19,685 யூனிட்கள் மட்டுமே இவை விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இது பெரிய வளர்ச்சி இல்லையென்றாலும், மாருதியின் மினி கார்கள் பிரிவில் விற்பனை 3.29% அதிகரித்துள்ளது. அதேபோல், பலேனோ, டிசைர், இக்னிஸ், செலிரியோ, ஸ்விஃப்ட், டூர் எஸ் மற்றும் வேகன்ஆர் உள்ளிட்டவை அடங்கும் காம்பெக்ட் கார்கள் பிரிவும் கடந்த ஆண்டு ஜூலை உடன் ஒப்பிடுகையில் விற்பனையில் 20.7% வளர்ச்சியை கண்டுள்ளது.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

ஏனெனில் 2021 ஜூலையில் மொத்தம் 70,268 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த இவை கடந்த மாதத்தில் 84,818 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாருதி சுஸுகி நிறுவனம் மினி மற்றும் காம்பெக்ட் கார்கள் பிரிவுகளில் இருந்து மட்டும் கடந்த மாதத்தில் மொத்தம் 1,05,151 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் 2021 ஜூலையில் இந்த எண்ணிக்கை ஆனது 89,953 என்றே பதிவாகி இருந்தது.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

மாருதி சுஸுகியின் நடுத்தர-அளவு செடான் காரான சியாஸ் கடந்த மாதத்தில் 1,379 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆனது 1,450 சியாஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த 2021 ஜூலை உடன் ஒப்பிடுகையில் 4.89% குறைவாகும். மாருதியின் பயன்பாட்டு கார்களை பொறுத்தவரையில், இந்த பிரிவில் அடங்கும் பிரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ்.எல்6 கார்கள் மொத்தமாக கடந்த ஜூலையில் 23,272 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

அதுவே இந்த பிரிவில் கடந்த ஆண்டு ஜூலையில் பதிவான விற்பனை எண்ணிக்கை ஆனது 32,272 ஆகும். இந்த வகையில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் பயன்பாட்டு கார்கள் பிரிவில் மாருதி சுஸுகி கடந்த மாதத்தில் 27.8% சரிவடைந்துள்ளது. மாருதி சுஸுகியின் ஒரேயொரு பயணிகள் வேன் மாடலான ஈக்கோ கடந்த மாதத்தில் 13,048 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

அதுவே கடந்த ஆண்டு ஜூலையில் 10,057 ஈக்கோ வேன்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இதன் விற்பனை ஆனது 29.7% அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தம் 1,42,850 பயணிகள் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து உள்ளது.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

ஆனால் 2021 ஜூலையில் மாருதி சுஸுகியின் பயணிகள் கார்களின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 1,33,732 ஆகும். இந்த வகையில் மாருதி சுஸுகி பயணிகள் கார்கள் விற்பனை ஆனது 6.8% கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. மாருதி சுஸுகியின் ஒரேயொரு எடை குறைவான கமர்ஷியல் வாகனமான சூப்பர் கேரி கடந்த மாதத்தில் 2,816 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுஸுகி கார்கள் விற்பனை தற்போதைக்கு எப்படி இருக்கு? உலகளவில் விற்கப்பட்டவை எத்தனை?

இதன் விற்பனையும் 2021 ஜூலை (2,768) உடன் ஒப்பிடுகையில் 1.7% அதிகமாகும். இதனையும் சேர்த்து கடந்த மாதத்தில் மொத்தமாக 1,75,916 வாகனங்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம். அதுவே, கடந்த ஆண்டில் 1,62,462 மாருதி சுஸுகி வாகனங்களே உலகளவில் விற்கப்பட்டு இருந்தன.

Most Read Articles
English summary
Maruti suzuki vehicles sales july 2022
Story first published: Tuesday, August 2, 2022, 11:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X