மாருதி காரை வாங்க போறீங்களா?.. இதுக்கு தயாருனா தாராளமா போய் வாங்குங்க!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய காரை வாங்கும் பிளானில் இருக்கீங்களா?, நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் காத்திருப்பு மிக மிக அதிகமாக உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் எந்தெந்த கார் மாடலுக்கு எவ்வளவு நாட்கள் காத்திருப்பு காலம் நிலவுகின்றது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வருஷம் முடிய போகுது, புதிய வருஷமும் தொடங்கப்போகுது. புத்தாண்டை பலர் புதிய வாகனங்களுடன் தொடங்க பிளான் போட்டிருக்காங்க. அப்படி நீங்க மாருதி சுஸுகியின் புதிய காரை வாங்க திட்டம் போட்டு இருக்கீங்களா?, இந்த மாதிரி ஒரு பிளான் போட்டிருந்தீங்கனா உங்களுக்கான பதிவுதான் இது. மாருதி சுஸுகியின் காரை வாங்க வேண்டும் என்றால் பல நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற சூழலே நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாருதி

குறிப்பாக, ஒரு சில கார் மாடல்களுக்கு காத்திருப்பு மாதம் பல மடங்கு அதிகமாக இருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், நிறுவனத்தின் எர்டிகா காருக்கு 9 மாதங்கள் காத்திருப்பு காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே நிறுவனத்தின் பிற தயாரிப்புகளுக்கும் மிக அதிகளவில் காத்திருப்பு காலம் நிலவிக் கொண்டிருக்கின்றது. பிரெஸ்ஸாவிற்கான காத்திருப்பு காலம் 3 மாதங்களாம். இதற்கு அடுத்தபடியாக அதிக காத்திருப்பு காலத்தை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கொண்டிருக்கின்றது.

இந்த காரை நீங்க உங்க வீட்டுக்கு ஓட்டி செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2.5 மாதங்களாவது காத்திருக்க வேண்டும். இதேபோல், நிறுவனத்தின் பிற முக்கிய கார் மாடல்களான கிராண்ட் விட்டாரா, எக்ஸ்எல் 6 மற்றும் பலினோ கார் மாடல்களுக்கும் அதிக மாதங்கள் காத்திருப்பு காலம் நீடித்துக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கான காத்திருப்பு காலம் மூன்று மாதங்கள் ஆகும். நிறுவனத்தின் பிரீமியம் வசதிகள் கொண்ட செடான் ரக காராக சியாஸ் உள்ளது.

இந்த காருக்கு காத்திருப்பு காலம் உள்ளது. இதை கைகளில் பெற வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 1.5 மாதங்கள் காத்திருக்க வேண்டும். டிசையர் காருக்கும் காத்திருப்பு நிலவுகின்றது. இந்த காருக்கான காத்திருப்பு காலம் நான்கு வாரங்கள் ஆகும். மேலும், நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடல்களனா வேகன்ஆர், எஸ்-பிரஸ்ஸோ மற்றும் செலிரியோ ஆகியவற்றிற்கும் காத்திருப்புக் காலம் உள்ளது. இவற்றிற்கான காத்திருப்பு ஒரு மாதங்களுக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோல், நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலான ஆல்டோவிற்கு காத்திருப்பு காலம் நிலவுகின்றது. இதற்கும் காத்திருப்பு காலம் 1 மாதத்திற்கும் குறைவாக காணப்படுகின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் அதன் புதிய கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. விலை உயர்வு வரும் 2023 ஜனவரியில் இருந்து அமலுக்கு வர இருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனம் மட்டுமல்ல இன்னும் பல நிறுவனங்கள் அடுத்த ஜனவரியில் விலை உயர்வைச் செய்ய இருக்கின்றது.

டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், ஹோண்டா மற்றும் எம்ஜி என பல நிறுவனங்கள் புத்தாண்டை புதிய விலை உயர்வுடன் தொடங்க திட்டம் போட்டுள்ளன. ஆகையால், அடுத்த ஆண்டு இந்தியாவில் வாகனங்கள் காஸ்ட்லியானதாக இருக்கும். வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் சுமை அதிகரித்திருப்பதாகவும், அதைக் குறைக்கும் பொருட்டே இந்த விலை உயர்வைச் செய்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாருதி இந்த செயலை செய்திருப்பது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

விலை உயர்வு ஜனவரியிலேயே செய்யப்பட இருக்கின்றது. அதுவரை பழைய விலையிலேயே மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும். இது இந்தியர்களுக்கு லேசாக ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது. புதிய ஆண்டை முன்னிட்டு காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த கால அவகாசம் மிகுந்த உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆமாங்க வாடிக்கையாளர்கள் புதிய காரை வாங்கிக் கொள்ளும் பொருட்டு பழைய விலையிலேயே இந்த டிசம்பர் மாத இறுதி வரை மாருதி கார்கள் விற்கப்பட இருக்கின்றன.

புத்தாண்டை புதிய வாகனத்துடன் கொண்டாட நினைப்பவர்கள் இப்போதே ஒரு வாகனத்தை புக் செய்துவிடுவது நல்லது. அடுத்த ஆண்டு முதல் முன்னணி நிறுவனங்கள் பல தங்களின் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருக்கின்றன. சில நிறுவனங்கள் ரூ. 90 ஆயிரம் வரை விலையை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளன. இந்த விலை உயர்வில் இருந்து தப்பிக்க இந்த மாதமே கார் அல்லது பைக்கை புக் செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 19, 2022, 17:40 [IST]
English summary
Maruti suzuki waiting period
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+