ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

அடித்தட்டு மக்களின் விருப்பமான கார் மாடல்களில் ஒன்றான வேகன்ஆர்-ஐ மாருதி சுசுகி (Maruti Suzuki WagonR) நிறுவனம் புதுப்பித்திருப்பதாகவும், அது மிக விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

புதுமுக வாகனங்களின் படையெடுப்பால் இந்திய வாகன சந்தையில் சற்றே போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. நாட்டு மக்கள் மத்தியில் புதிய தொழில்நுட்பம், கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக சொகுசு வசதி ஆகியவற்றைக் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

இதன் விளைவாக முன்னணி நிறுவனங்களின் பிரபல கார் மாடல்கள் சில விற்பனையில் பின்னுக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, அப்டேட் செய்யப்படாத வாகனங்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் மவுசு குறைய தொடங்கியிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கையிலேயே வாகன உற்பத்தி நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

அதாவது, புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட வாகன மாடல்களின் வாயிலாக தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. அந்த வகையில், மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் புதுப்பித்தலை கையிலெடுத்திருக்கின்றது. நிறுவனம், இரு பிரபல கார் மாடல்களை புதுப்பித்த நிலையில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

பலினோ (Baleno) மற்றும் வேகன்ஆர் (WagonR) ஆகிய இரு கார் மாடல்களையே நிறுவனம் புதுப்பித்தல்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. பலினோ காரின் வருகை அடுத்த மாதம் அரங்கேற இருப்பதாக ஏற்கனவே உறுதியான தகவல்கள் வெளி வர தொடங்கிவிட்டன. இத்துடன், அக்காருக்கான புக்கிங் பணிகளும் நாட்டில் தொடங்கிவிட்டன. ஆகையால், பலினோ பிரீமியம் காரை அதிகம் விரும்புவோர் சற்றே மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

இதேபோல் பட்ஜெட் வாகன விரும்பிகளை மகிழ்விக்கும் வகையில் வேகன்ஆர் காரின் அறிமுகம் பற்றிய தகவலும் தற்போது கசிந்திருக்கின்றது. இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனும் பிப்ரவரி மாதமே அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் வேகன்ஆர் காரை மாருதி சுசுகி 2019ம் ஆண்டிலேயே விற்பனைக்குக் களமிறக்கியது.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

இதற்கு பின்னர் எந்த அப்கிரேடையும் இந்த கார் மாடலில் மாருதி சுசுகி வழங்கவில்லை. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது சந்தையில் போட்டி அதிகரித்திருப்பதனால் இக்காரை லேசான புதுப்பித்தல்களுடன் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மாருதி சுசுகி நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த தகவல் பட்ஜெட் வாகன விரும்பிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுப்பித்தலின் வாயிலாக என்னென்ன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய துள்ளியமான தகவல் வெளியாகவில்லை. அதேநேரத்தில், லேசான காஸ்மெட்டி மாற்றங்கள் மட்டும் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

முன் மற்றும் பின் பக்க பம்பர், வீல் ஆகியவற்றில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, இக்காரின் உயர்நிலை தேர்வில் 15 இன்ச் அலாய் வீல் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல் கணிசமான மாற்றங்களுடன் வேகன்ஆர் காரின் உட்புறமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

அந்தவகையில், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்ட 7 இன்ச் அளவுள்ள ஸ்மார்ட் ப்ளே தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் (இது எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும்), ஏஎம்டி தேர்வு என எக்கச்சக்க சிறப்பம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

ஆனால், எஞ்ஜினை பொருத்தவரை எந்த மாற்றமும் இடம் பெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு விதமான நேச்சுரல்லி அஸ்பைரேடட் பெட்ரோல் எஞ்ஜினிலேயே இக்கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 1.0 லிட்டர், 3 சிலிண்டர் யூனிட்டிலும், 1.2 லிட்டர், 4 சிலிண்டர் யூனிட்டிலுமே இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், சிஎன்ஜி தேர்வும் வேகன்ஆர் காரில் வழங்கப்பட இருக்கின்றது. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினிலேயே இந்த தேர்வு வழங்கப்படும்.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த தேர்வு கொண்ட 1.0 லிட்டர் எஞ்ஜின் அதிகபட்சமாக 59 பிஎஸ் மற்றும் 78 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. சிஎன்ஜி அல்லாத மோட்டார் 68 பிஎஸ் மற்றும் 90 என்எம் டார்க்க வெளியேற்றும். அனைத்து எஞ்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். ஆனால், சிஎன்ஜி தேர்வில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படும்.

ஏழைகளின் விருப்பமான காருக்கு புதுப்பித்தலை வழங்கிய மாருதி சுசுகி... இதோட அறிமுகம் எப்போது தெரியுமா?

தற்போது விற்பனையில் இருக்கும் வேகன்ஆர் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ என மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், எல்எக்ஸ்ஐ தேர்விலேயே சிஎன்ஜி வசதி வழங்கப்படுகின்றது. இக்கார், ரூ. 5.18 லட்சம் தொடங்கி ரூ. 6.58 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதைவிட சற்று கூடுதலான விலையிலேயே இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு: படத்தில் இருப்பது புதுப்பிக்கப்பட்ட வேகன்ஆர் காரின் படங்கள் அல்ல.

Source: Cardekho

More from DriveSpark

Article Published On: Monday, January 31, 2022, 17:54 [IST]
English summary
Maruti wagonr facelift launching next month in india here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+