நாயை அடித்து தூக்கிய மஸராட்டி சொகுசு கார்... அதுக்கப்புறம் விலையுயர்ந்த காருக்கு நடந்த சோகத்தை பாருங்க!
காவல்துறையினர் பல்வேறு போக்குவரத்து விதிமீறல் காரணங்களுக்காக வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் தெரு நாய் ஒன்றை அடித்துவிட்டு தப்பிச் சென்ற காரணத்திற்காக வீடியோவின் அடிப்படையில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கக் கூடிய காரை காவல்துறையினரைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த சம்பவம்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இளம் பெண்ணிடம் கொள்ளையடிக்க முயன்ற திருடனை கடித்து குதறி விரட்டியடித்த நாய், உரிமையாளருக்காக பாம்பிடம் போராடி தன் உயிரை நீர்த்த நாய் என நன்றியுணர்வு கலந்த வரலாறுகள் பல நாய்களைச் சுற்றி உள்ளன. இத்தகைய ஓர் பிராணிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற காரணத்திற்காகவே மும்பை காவல்துறையினர் மஸராட்டி காரை தற்போது பறிமுதல் செய்திருக்கின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. பொதுவாகவே சொகுசு மற்றும் விலையுயர்ந்த கார்கள் விநோத ஒலியை வெளியேற்றக் கூடியவையாகக் காட்சியளிக்கின்றன. சில நேரங்களில் மனிதர்களையே ஆடம்பர வாகனங்களில் இருந்து வெளிவரும் சத்தம் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க செய்துவிடுகின்றது.

இந்த மாதிரியான ஓர் சொகுசு வாகனமாகவே மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஓட்டி வந்த மசாராட்டி சொகுசு வாகனம் இருந்திருக்கின்றது. காரை ஓட்டி வந்த நபர் தொடர்ச்சியாக ஆக்சலரேஷனை அழுத்திய வண்ணம் இருந்திருக்கின்றார். இது சாலைவாசிகளை மட்டுமின்றி அந்த பகுதியில் இருந்த தெரு நாயையும் எரிச்சலடைய செய்திருக்கின்றது.
MumbaiPolice Respect ✊🏻 this will surely set an example !!! Mumbai has shown the country such Hooligans won’t be spared by law !!! pic.twitter.com/6latNIpSN7
— Rrahul Narain Kanal (Iamrahulkanal) May 29, 2022
ஆகையால், அக்காரை அந்த தெரு நாய் விரட்டத் தொடங்கியிருக்கின்றது. அப்போது செல்போனில் மும்மரமாக பேசிக் கொண்டிருந்த சொகுசு காரின் உரிமையாளர், காரை அதி வேகத்தில் இயக்க ஆரம்பித்தார். சிட்டி லிமிட்டை தாண்டி உச்ச வேகத்தில் கார் இயங்கியதை நம்மால் காண முடிகின்றது.

இந்த நிலையில் காரின் முன் பகுதியில் சிக்கிய நாய், பின்னர் பல முறை உருண்டு செல்லும் வகையில் தூக்கி வீசப்பட்டது. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அந்த பகுதி வாசி ஒருவர் அவரது செல்போனில் படம் பிடித்திருக்கின்றார். பின்னர் அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சொகுசு கார் உரிமையாளர் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

புகாரை ஏற்றுக் கொண்ட மும்பை காவல்துறை, சொகுசு கார் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஐபிசி 429, 279 ஆகிய பிரிவுகளின்கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, இளைஞரை கைது செய்த காவலர்கள், விலையுயர்ந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

சாலையில் நாய் போன்ற பிற விலங்குகள் இருப்பதை அறிந்தும் ஒரு சிலர் அதிக வேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்துவதை நம்மால் காண முடிகின்றது. அத்தகையோரை எச்சரிக்கும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. குறிப்பாக, நாய் தானே என நினைத்து வேகத்தைக் குறைக்காமல் அவற்றை ஏற்றிவிட்டு செல்வோர்களை காவல்துறையின் அதிரடி நடவடிக்கை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சமூக வலைதள வாசிகள் பாராட்டையும், நன்றிகளையும் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் மஸராட்டி காரின் மதிப்பு ரூ. 2.25 கோடி ஆகும். கிரான் டூரிஸ்மோ எனும் மாடலையே காவலர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இந்த காரில் அதிக வேக இயக்க திறனை வழங்குவதற்காக ஃபெர்ராரியின் வி8 மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4.2-4.7லிட்டர் மோட்டார் தேர்வில் இந்த சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மோட்டார்கள்அதிகபட்சமாக 399-454 குதிரை திறன் மற்றும் 339-384 டார்க்கை வெளியேற்றும். இத்தகைய சூப்பரான இயக்க திறனை வெளியேற்றும் காரைக் கொண்டே மும்பை செல்வந்தர் தெருநாயை மோதிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றார். இதற்கான தக்க தண்டனையை அவர் தற்போது காவல்துறை வாயிலாக பெற்றிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








