இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

பல கோடி ரூபாய்கள் கொடுத்து சொகுசு லக்சரி கார்களை வாங்குவதை விட அவற்றை வாங்கியபின் பராமரிப்பதுதான் பெரிய விஷயம் என்கிற கருத்து பரவலாகவே உள்ளது. இருப்பினும் நம்மில் எவரொருவருக்கும் கனவு வாகனமாக ஓர் செயல்திறன்மிக்க கார் இருக்கும்.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

சிலர் இந்த கனவை நினைவாக்கி இருக்கலாம். ஆனால் பலர் இன்னமும் லக்சரி கார்களை பார்த்து ஏக்கிக்கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பாக, விலைமிக்க ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றாலே அவற்றில் 2 இருக்கைகள் மட்டுமே இருப்பதுதான் ஸ்டைல். அத்தகைய 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்களில் நம் நாட்டில் தற்சமயம் விற்பனையாகுபவை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

மெக்லாரன் 720எஸ்

வழக்கமாக 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்களை வடிவமைப்பதில் இத்தாலியன் & ஜெர்மன் நிறுவனங்களே நிபுணத்துவம் பெற்றவைகளாக விளங்குகின்றன. ஃபெராரி, லம்போர்கினி, போர்ஷே என இதற்கு உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நாம் இந்த செய்தியில் முதலாவதாக பிரிட்டிஷ் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான மெக்லாரனின் 720எஸ் மாடலை பற்றி பார்க்க போகிறோம்.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

மாடர்ன் காற்றியக்கவியலுக்கு இணக்கமான தோற்றம், பட்டாம்பூச்சி வடிவிலான கதவுகள், வலுவான பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சேசிஸ் & உடற்கூடை பெறும் மெக்லாரன் 720எஸ் ஸ்போர்ட்ஸ் காரில் 3,994சிசி இரட்டை-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 710 பிஎச்பி & 770 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் ஆனது 7-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் வாயிலாக இயக்க ஆற்றலை பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

ஃபெராரி 812

2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் லிஸ்ட் எப்போதும் ஃபெராரியின் தயாரிப்பு இல்லாமல் முழுமையடையாது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைக்கு நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் ஒரே ஃபெராரி காராக விளங்கும் 812 மாடலில் அதற்கேற்ப ஏகப்பட்ட அதிநவீன காற்றியக்கவியலுக்கு இணக்கமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

கூபே உடலமைப்பில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஃபெராரி 812 காரிலும் அடர்த்தியான மேற்கூரையை தேவைக்கேற்ப மூடியும் திறந்தும் கொள்ளலாம். இதில் பொருத்தப்படுகின்ற 6,496சிசி நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 789 பிஎச்பி மற்றும் 712 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

போர்ஷே 911 டர்போ எஸ்

ஐரோப்பாவில் லக்சரி ஸ்போர்ட்ஸ் கார்கள் விற்பனையில் ஃபெராரிக்கு நேரெதிர் போட்டி நிறுவனமாக விளங்கும் போர்ஷேவில் இருந்து இந்தியாவில் 911 டர்போ எஸ் மாடல் 2 இருக்கைகளை மட்டுமே கொண்ட ஸ்போர்ட்ஸ் காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

ஆனால் ஃபெராரியின் 812 காரையே முந்தும் அளவிற்கு இதில் இரு டர்போசார்ஜர்களுடன் 3,745சிசி, 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 641 பிஎச்பி மற்றும் 800 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ஸ்போர்ட்ஸ் காரின் டாப்-ஸ்பீடு 330kmph ஆகும்.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

லம்போர்கினி அவெண்டேடார் எல்பி780-4 அல்டிமே

ஃபெராரி போன்று லக்சரி கார்கள் தயாரிப்பில் நீண்ட வருட அனுபவத்தையும், வரலாற்றையும் லம்போர்கினி கொண்டுள்ளது. இத்தகைய நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பாக அறிமுகமான அவெண்டேடார் எல்பி780-4 அல்டிமே ஆனது உலகளவில் வெறும் 600 மாதிரிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு யூனிட் ஆனது மிக சமீபத்தில்தான் முதல்முறையாக இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டது.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

லம்போர்கினி கார்களுக்கே உண்டான ஆப்பு-வடிவத்தில், அதிகளவில் கூர்மையான லைன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அவெண்டேடார் எல்பி780-4 அல்டிமே காரில் 6,498சிசி வி12 என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிகப்பட்சமாக 770 பிஎச்பி மற்றும் 720 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாயிலாக பெற முடியும்.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

அஸ்டன் மார்டின் டிபிஎஸ்

இந்த லிஸ்ட்டில் கடைசியாக நாம் பார்க்கவுள்ள மற்றொரு பிரிட்டிஷ் 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார் அஸ்டன் மார்டின் டிபிஎஸ் ஆகும். அதிகப்பட்சமாக 715 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இதன் 5.2 லிட்டர் இரட்டை-டர்போ வி12 என்ஜின் காரின் முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் இத்தனை 2-இருக்கை ஸ்போர்ட்ஸ் கார்கள் கிடைக்கிறதா!! ஒவ்வொன்னும் வேற லெவல்!

ஆனால் அதேநேரம் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது காரின் பின்பக்கத்தில் பொருத்தப்படுகிறது. இதனாலேயே அஸ்டன் மார்டின் டிபிஎஸ் காரில் எடை பகிர்வு சிறப்பான விகிதத்தில் கிடைக்கிறது. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த ஸ்போர்ட்ஸ் காரின் டாப்-ஸ்பீடு ஆனது 340kmph ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 17, 2022, 10:54 [IST]
English summary
Mclaren 720s to aston martin dbs the best two seater sports cars in india right now
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+