இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

பிரத்யேகமான ஆரஞ்ச் நிறத்தில் மாருதி டிசைர் கார் ஒன்று இரட்டை சன்ரூஃப் உடன் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி கடந்த 2020இல் பிஎஸ்6க்கு இணக்கமான டிசைர் செடான் காரை ரூ.5.89 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் செடான் காராக விளங்கும் டிசைருக்கு ஹோண்டா அமேஸ், ஃபோர்டு அஸ்பியர், ஹூண்டாய் அவ்ரா, டொயோட்டா எடியோஸ் மற்றும் டாடா டிகோர் போன்ற செடான் கார்கள் போட்டியாக விளங்குகின்றன.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

இருப்பினும் இவை அனைத்தை காட்டிலும் பெரிய வித்தியாசங்களுடன் ஒவ்வொரு மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் டிசைர் செடான் கார்கள் இந்திய சந்தையில் விற்பனையாகுகின்றன. இதனால் இதன் வாடிக்கையாளர்கள் தங்களது டிசைர் கார் மற்றவைகளில் இருந்து தனித்து தெரிவதற்காக தனிப்பயனாக்கி கொள்வதும் உண்டு. இந்த வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த கிட்அப் ஆட்டோமேட்டிவ் என்கிற கஸ்டமைஸ் நிறுவனம் மூலமாக வாடிக்கையாளர் ஒருவர் தனது டிசைர் காரை தனக்கு பிடித்தாற்போல் தனிப்பயனாக்கி கொண்டுள்ளார்.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

முந்தைய தலைமுறை மாடலின் டாப் வேரியண்ட்டான இந்த குறிப்பிட்ட டிசைர் கார் பிரத்யேகமான சன்செட் பீம் பேர்ல் ஆரஞ்ச் நிற பெயிண்ட் உடன் 17-இன்ச் மோமோ சக்கரங்களை புதியதாக பெற்றுள்ளது. அதேபோல் இதன் முன்பக்கத்தில் க்ரோம் தொடுதல்களுடன் பிரோஜெக்டர் ஹெட்லைட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஃபாக் விளக்குகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கஸ்டம் எல்இடி ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

இதுவும் இந்த டிசைர் காருக்கு சிறப்பான முன்பக்கத்தை வழங்கியுள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கிய அம்சமாக இரு சன்ரூஃப்-களை இந்த கஸ்டமைஸ்ட் டிசைர் கார் பெற்றுள்ளது. இதில் ஒன்று முன் இருக்கை வரிசைக்கும், மற்றொன்று பின் இருக்கை வரிசைக்கும் மேலாக வழங்கப்பட்டுள்ளன. இரு சன்ரூஃப்-களை பெற்ற இந்த காரின் மேற்கூரை பியானோ கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

இதன் புதிய 17-இன்ச் மோமோ சக்கரங்கள் சில்வர்-ஃபினிஷிங் உடன் அகலமான டயர்களை ஏற்றுள்ளன. ஹெர்டெக்ட் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் டிசைர் செடான் காரின் உட்புற கேபின் ஏற்கனவே சிறப்பான வகையில் வடிவமைக்கப்படுகிறது. இருப்பினும் கிட்அப் ஆட்டோமோட்டிவ் கஸ்டமைஸ்ட் நிறுவனம் இந்த குறிப்பிட்ட மாடிஃபை டிசைர் காரின் கேபினில் இருக்கைகள் மற்றும் ஹெட்லைனருக்கு பிரீமியம் தர லெதர் உள்ளமைவை வழங்கியுள்ளது.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

வழக்கமான ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், ஒட்டு மொத்த கேபினின் சவுண்ட் சிஸ்டத்தை மேம்படுத்தும் விதமாக சிறந்த ஸ்பீக்கர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் உள்ள கிட்அப் ஆட்டோமோட்டிவ் கஸ்டமைஸ்ட் நிறுவனத்தை தொடர்பு கொள்ள விரும்புவோர் saleskitup.co.in என்கிற இமெயிலின் மூலம் தொடர்புக்கொள்ளலாம்.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

273, புலியக்குளம் சாலை, போலீஸ் கந்தசாமி தெரு, கோயம்புத்தூர், தமிழ்நாடு என்பது இந்த நிறுவனத்தின் முகவரி ஆகும். இந்த குறிப்பிட்ட கஸ்டமைஸ்ட் டிசைர் முந்தைய தலைமுறை என ஏற்கனவே கூறிவிட்டோம். தற்போதைய தலைமுறை டிசைர் செடான் காரில் பிஎஸ்6-க்கு இணக்கமான 1.2 லிட்டர், 4-சிலிண்டர், கே12சி ட்யுல்ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

அதிகப்பட்சமாக 90 எச்பி-ஐ வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் அமைப்பில் ஐடியல் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழிற்நுட்பம் இணைக்கப்படுகிறது. இந்த தொழிற்நுட்பமானது காரின் மைலேஜை அதிகரிக்கக்கூடியதாக விளங்குகிறது. இந்த என்ஜின் உடன் டிரான்ஸ்மிஷனுக்கு மேனுவல் & ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கூறியதுதான், தற்போதைக்கு இந்தியாவின் சிறந்த விற்பனை செடான் காராக மாருதி டிசைர் உள்ளது.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17,438 டிசைர் செடான் கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆனது 2021 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் கிட்டத்தட்ட 46.53% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 11,901 டிசைர் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த செடான் கார்கள் விற்பனையில் மாருதியின் இந்த சப்-4 மீட்டர் செடான் காரின் பங்கு மட்டுமே 47.15% ஆகும்.

இரு சன்ரூஃப்-களுடன் கோவையை கலக்கி கொண்டிருக்கும் கஸ்டமைஸ்ட் டிசைர் கார்!! இப்படியொரு நிறத்தில் பெயிண்ட்டா!

அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 2இல் 1 செடான் கார் டிசைர் ஆகும். இதில் இருந்து இந்த மாருதி செடான் காருக்கு இந்தியாவில் எத்தகைய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை அறியலாம். மாருதி சுஸுகி சமீபத்தில்தான் டிசைரில் புதியதாக சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி இருந்தது. இதனால் இந்த செடான் காரின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Meet sunset beam pearl maruti dzire featuring twin sunroofs
Story first published: Sunday, March 20, 2022, 15:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X