வாடிக்கையாளர்களை கவர கோவையில் வித்தியாசமான ஷோரூமை திறந்த லெக்சஸ்!
லெக்சஸ் நிறுவனம் கோவையில் தனது புதிய அனுபவத்தை தரும் ஷோரூமை திறந்துள்ளது. கோவை சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களிடம் லெக்சஸ் வாகனத்தின் விற்பனையை அதிகரிக்க இந்நிறுவனம் இந்த ஷோரூமை திறந்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனம். இந்நிறுவனத்தின் கார்கள் அதை வைத்திருப்பவர்களுக்கு சமூகத்தில் ஒரு நல்ல அந்தஸ்தை ஏற்படுத்துகிறது. லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் குர்கிராம் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் பல இடங்களில் தனது ஷோரூமை திறந்துள்ளது. தற்போது புதுடில்லி, மும்பை, பெங்களூரு, சண்டிகர், ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் அனுபவ மையத்தை நடத்தி வருகிறது.

தற்போது புதிதாகக் கோவையில் தனது ஷோரூமை திறந்துள்ளது. இந்த அனுபவ மையத்தின் டிசைனை பொருத்தவரை கோவையின் இன்டஸ்ட்ரியல் மரபு, டெக்ஸ்டைல்ஸ் பிஸ்னஸ், மோட்டார் ஸ்போர்ட் ஆகியவற்றின் அம்சங்களுடன் சேர்த்து ஜப்பானிய லெக்சஸ் நிறுவனத்தின் துல்லியம், முழுமை, நுட்பம் ஆகிய கொள்கைகளுடன் இணைந்து அந்த அனுபவ மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அனுபவ மையத்தின் நுழைவு பகுதி சென் கோர்ட் மாடலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறத்தின் சீலீன் லெக்சஸ் நிறுவனத்தின் டிரேட் மார்க் டிசைனான டிஸ்டின்ஸ்டிவ் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சென் கோர்ட் வடிவமைப்பில் பீஸ் தி ரெஸ்டென்ஸ் என்ற ஒரு டிசைன் இருக்கிறது. அதன்படி கோவையில் பிரபலமான ரேக்ளா ரேஸை பிரதிபலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி புகைப்படங்களும், அதே போல லெக்சஸ் காரின் குறைவான கார்பன் வெளியிடும் திட்டம் குறித்த வடிவங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதை அந்நிறுவனம் "ரேக்ளா டூ ஹைபிரிட்" என்ற அடை மொழியுடன் வழங்கியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் நவீன் சோனி கூறும் போது "நாங்கள் எப்பொழுதும் எங்கள் விருந்தினர்களுடன் பலமான உறவை மேற்கொள்ள விரும்புகிறோம். குர்கிராமை தொடர்ந்து இந்தியாவில் பல அனுபவ மையங்களைத் திறக்கவுள்ளோம். இதன் மூலம் பல புதிய விருந்தினர்களை வரவேற்கவிருக்கிறோம். சொகுசு,தனித்துவம், சிறப்பான அனுபவத்தை லெக்சஸ் உடன் உணருங்கள்" எனக் கூறினார்.
தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர அவர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்க தீம்டு ஷோரூம்களை அனுபவ மையங்களாக திறந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது லெக்சஸ் நிறுவனம் டயர் 2 சிட்டிகளில் தனது ஷோரூமை திறக்கும் முயற்சியில் கோவையில் இந்த ஷோரூமை திறந்துள்ளது.


Click it and Unblock the Notifications








