மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இக்யூஇ (Mercedes-AMG EQE) எலக்ட்ரிக் கார்கள் அதிகாரப்பூர்வமாக படங்களுடன் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய சொகுசு எலக்ட்ரிக் கார்களை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் கூடுதல் செயல்திறன்மிக்க கார்கள் பிராண்டாக மெர்சிடிஸ்-ஏஎம்ஜி விளங்குவது தெரிந்த விஷயமே. இந்த பிராண்டில் இருந்து முதல் எலக்ட்ரிக் காராக இக்யூஎஸ் கடந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியீடு செய்யப்பட்டது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

இந்த நிலையில்தான் தற்போது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி-இல் இருந்து இரண்டாவது எலக்ட்ரிக் காராக இக்யூஇ வெளிவந்துள்ளது. இக்யூஇ 53, இக்யூஇ 43 என்கிற இரு விதமான வெர்சன்களில் மெர்சிடிஸின் இந்த புதிய எலக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளன. மெர்சிடிஸ்-பென்ஸின் எவா2 (எலக்ட்ரிக் வாகன கட்டமைப்பு) இயக்குத்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இவை இரண்டிலும் 4-சக்கர-ட்ரைவ் அமைப்பு நிலையான தேர்வாக வழங்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

இதனால் இவை 4மேட்டிக்+ வெர்சன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. மெர்சிடிஸ்-பென்ஸ் பிராண்டில் இருந்து சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இ-கிளாஸ் எலக்ட்ரிக் காரின் ஆற்றல்-வழங்கி இந்த ஏஎம்ஜி எலக்ட்ரிக் கார்களுக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், முன்பக்கத்தில் இந்த புதிய இக்யூஇ எலக்ட்ரிக் கார்கள் செங்குத்தான க்ரோம் ஸ்லாட்கள் உடன் ஏஎம்ஜி கார்களுக்கே உண்டான கருப்பு பேனல் க்ரில்லை கொண்டுள்ளன.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

இதனுடன் முன்பக்கத்தில் பிரத்யேக ஏஎம்ஜி பிரோஜெக்‌ஷன் உடன் எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரோம் உள்ளீடுகளை கொண்டதாக இருக்கும் இவற்றின் முன்பக்க பம்பர் ஆனது வாகனத்தின் நிறத்திற்கே பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் செயல்திறன்மிக்க ஏஎம்ஜி கார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக "AMG" முத்திரையும் காரின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

இந்த ஏஎம்ஜி கார்களின் பக்கவாட்டின் கீழ்ப்பகுதியில் பளபளப்பான கருப்பு நிறத்திலான பேனல்களுடன் மிகவும் நுட்பமான வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்கள் எடை குறைவானவைகளாக காற்று இயக்கவியலுக்கு இணக்கமானதாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் இக்யூஇ மாடல்கள் பெரிய அளவிலான ஸ்பாய்லரை கொண்டுள்ளன.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

வெளிப்புறத்திற்கே இத்தகைய பிரத்யேக வடிவமைப்பு என்றால், சொகுசு எலக்ட்ரிக் காரான இக்யூஇ -இன் உட்புற கேபினை பற்றி சொல்லவா வேண்டும். உயர்த்தரத்திலான தையல்கள் மற்றும் சிறப்பு கவர்கள் உடன் வழங்கப்பட்டுள்ள இருக்கைகளில் கொடுக்க வேண்டிய கிராஃபிக்ஸை உரிமையாளரே தனது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாமாம்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

இருக்கைகளிலும், அவற்றின் தலையணைகளிலும் பல்வேறு இடங்களில் "AMG" முத்திரை வழங்கப்பட்டுள்ளது. ஏஎம்ஜி இக்யூஇ 43 காரில் அதிகப்பட்சமாக 476 எச்பி மற்றும் 855 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்க ஆற்றலின் உதவியுடன் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.2 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த இக்யூஇ மாடலின் டாப்-ஸ்பீடு 210kmph ஆகும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

இக்யூஇ 43 இ-காரில் 90.6kWh லித்தியம் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பயண சூழலை பொறுத்து சிங்கிள் சார்ஜில் காரை அதிகப்பட்சமாக 462கிமீ-களில் இருந்து 533கிமீ வரையில் இயக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இக்யூஇ 53 காரில் அதே 90.6kWh பேட்டரி தொகுப்பே வழங்கபபட்டுள்ளது. இருப்பினும், இதில் 626 எச்பி மற்றும் 946 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

இதனுடன் இக்யூஇ 53 காரில் வழங்கப்படும் டைனாமிக் தொகுப்புகளினால் இந்த மாடலில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை சற்று விரைவாக 3.5 வினாடிகளிலேயே அடைந்துவிடலாம். இதன் டாப்-ஸ்பீடு 220kmph ஆகும். இக்யூஇ 53 மாடலில் செயல்படுதிறன் சற்று கூடுதலாக வெளிப்பட்டாலும், சார்ஜ் செய்தால் இயங்கக்கூடிய தூரமானது இக்யூஇ 43 மாடலை காட்டிலும் சில கிமீ குறைவே ஆகும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

இக்யூஇ 53 காரின் ரேஞ்ச் 444 கிமீ-களில் இருந்து 518 கிமீ வரையில் ஆகும். விரைவு சார்ஜரை உபயோகித்து இவற்றின் பேட்டரிகளை சார்ஜ் செய்தோமேயானால், 180கிமீ தொலைவிற்கு இயங்குவதற்கு தேவையான ரேஞ்ச் வெறும் 15 நிமிடங்களில் கிடைத்துவிடும் என மெர்சிடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்டில் இரண்டாவது எலக்ட்ரிக் கார்... இக்யூஇ!! இரு வெர்சன்களில் வெளியீடு!

இந்த வேகம் போதாது, கூடுதல் இயக்க ஆற்றலை வேண்டுவோர்க்காக ஏஎம்ஜி இக்யூஇ 53 காரில் மட்டும் பிரத்யேகமான ஏஎம்ஜி டைனாமிக்+ தொகுப்பு கூடுதல் தேர்வாக வழங்கப்பட உள்ளது. கூடுதல் தொகையை செலுத்தி இந்த தொகுப்பை பெறுவதன் மூலம் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக வழங்கக்கூடிய ஆற்றலை 687 எச்பி -ஆக அதிகரித்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 16, 2022, 15:10 [IST]
English summary
Mercedes amg eqe sporty electric car unveiled details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+