இந்த காரோட விலை ரூ. 2.53 கோடியாம்... அப்படி என்னதான் இதுல கொடுத்திருக்காங்க? வாங்க பார்க்கலாம்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கார்குறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ரக வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. மின் வாகனங்கள்மீதான தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்கள் புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களைத் தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே சொகுசு மின்சார கார் விரும்பிகளைக் கவரும் வகையில் பிரபல ஆடம்பர வாகன உற்பத்தியாளரான மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இது ஓர் செடான் ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 2.45 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காரை மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட் (completely built unit) -ஆக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காரணத்தினாலேயே மிக அதிக விலையைக் கொண்டதாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் எலெக்ட்ரிக் கார் காட்சியளிக்கின்றது.

இது நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாகும். ஏற்கனவே நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு வழங்கி வரும்நிலையில் புதிதாக ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக்கை இரண்டாவது தயாரிப்பாக விற்பனைகக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி, மற்றுமொரு காரையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் மெர்சிடிஸ் களமிறங்கியிருக்கின்றது.

நிறுவனம் அடுத்ததாக இக்யூஎஸ் 580 எலெக்ட்ரிக் செடான் ரக காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் வரும் அக்டோபர் மாதமே அரங்கேற இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை நிறுவனம் உள்ளூரில் வைத்து உற்பத்தி செய்ய இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இதன் வருகைக்கு முன்னதாக சிபியூ வாயிலாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் செடான் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் கார்களின் டிசைனில் இந்த எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உருவத்திற்கு ஏற்ப அதிக பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் மோட்டார்களே மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், காரின் முகப்புபகுதியில் டிஜிட்ட்ல் லைட் ஹெட்லேம்ப், ஏஎம்ஜி ஸ்பெஷிஃபிக் பிளாக் பேனல் க்ரில், குரோம் அலங்காரக் கூறுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, பாடி நிறத்திலான பம்பர், உயர் பளபளப்பான பிளாக் நிறத்தினாலான குரோம் ட்ரிம் உள்ளிட்டவற்றாலும் இந்த வாகனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், காரின் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்திற்காக 21 அல்லது 22 அங்குல லைட்-அலாய் வீல்கள் ஏரோ அல்லது ஹெரிடேஜ் டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை 0.23 டிராக் கோஎஃப்சியன்டுக்கு ஏற்ப மெர்சிடிஸ் உருவாக்கியிருப்பது கூடுதல் சிறப்பு தகவலாக உள்ளது.

இந்த திறனுக்கு உறுதுணையாக காரின் பின் பகுதியில் பெரிய ஸ்பாய்லர் அப்ரானுடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோல் காரின் உட்புறத்திலும் பல சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை காரின் ஸ்போர்ட்டி லெவலை இன்னும் பல மடங்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக ஏஎம்ஜி இருக்கைகள், கிராஃபிக்குகள், இருக்கை கவர்கள், ஆர்டிகோ மேன் மேட் லெதர், மைக்ரோ கட் மைக்ரோஃபைபர் மற்றும் சிவப்பு நிற தையல்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது.

இதுதவிர, எம்பியூஎக்ஸ் ஹைபர்ஸ்கிரீன், மூன்று பெரிய திரைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இக்காரில் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆக்ஸில்களில் பொருத்தப்பட்டுள்ளன. நிறுவனம் இந்த ஆல் வீல் டிரைவ் வசதியுடனும் வழங்குகின்றது. அனைத்து மின் மோட்டார்களும் இணைந்து 658 பிஎச்பி பவரையும், 950 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

மேலும், வெறும் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 3.4 செகண்டுகளே இந்த மோட்டார்கள் எடுத்துக் கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். மேலும், இந்த காரில் 107.8kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 586 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த பேட்டரி பேக்கை வழக்கமான 7.4kW சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது பத்து சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரையிலான சார்ஜை ஏற்றிக் கொள்ளவதற்கு 15 மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும். அதேவேலையில் ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது மிகக் குறைவான மணி நேரங்களே போதுமானது என கூறப்படுகின்றது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை இந்த காரில் 4 லிங்க் ஆக்ஸில் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், மல்டி லிங்க் ஆக்ஸில் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் காரை மிக சூப்பரான ஆடம்பர வசதிகள் நிறைந்த வாகனமாகவும், அதிக பவரை வெளியேற்றக் கூடிய வாகனமாகவும் மாற்றியிருக்கின்றது.

இதில் ரைடிங் அனுபவத்தை மேலும் சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு ஏஎம்ஜி ரைட் கன்ட்ரோல் பிளஸ் அம்சமும் மெர்சிடிஸ் ஏஎம்ஜி இக்யூஎஸ் 53 4மேட்டிக் பிளஸ் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. கூடுதல் சிறப்பு வசதிகளாக இக்காரில் ரியர் ஆக்ஸில் ஸ்டியரிங், ஏஎம்ஜி ரக சவுண்ட் சிஸ்டம், லெவல் 2 அடாஸ் அம்சம், முகத்தைக் கண்டறிந்து செயல்படும் தொழில்நுட்பம், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் ஆகிய சிறப்புகளை் தாங்கிய வாகனமாகக் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








