லக்சூரி கார்களின் அரசனின் அறிமுக தேதி வெளியீடு... திரை நட்சத்திரங்களின் பிரியமான காருங்க இது!
லக்சூரி கார்களின் அரசனைப் போன்று காட்சியளிக்கும் 2022 மேபேக் எஸ்-கிளாஸ் (2022 Maybach S-Class) சொகுசு காரின் அறிமுக தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மெர்சிடிஸ் பென்ஸ் அதன் 2022 மேபேக் எஸ்-கிளாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம் வரும் மார்ச் மாதம் 3ம் தேதியையே தேர்வு செய்திருக்கின்றது. இந்த காருக்கு இந்திய சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, இந்திய திரை நட்சத்திரங்கள் மத்தியில் மேபேக் மிக சூப்பரான டிமாண்ட் நிலவி வருகின்றது.

இந்த நிலையிலேயே 2022 மேபேக் எஸ்-கிளாஸ் காரை நாட்டில் களமிறக்குவதற்கான பணியில் ஆயத்தமாகியிருக்கின்றது, மெர்சிடிஸ் பென்ஸ். நிறுவனம் கடந்த ஆண்டே இக்காரின் உற்பத்தி பணியை உள்ளூர் மயமாக்கியது. இதைத் தொடர்ந்து, ரூ. 1.57 கோடி விலையில் அக்காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

புதிய 2022 எஸ்-கிளாஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஜிஎல்எஸ்600 காருக்கு அடுத்தபடியாக இடத்தில் அமர இருக்கின்றது. இந்த காரை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ. 2.43 கோடிகள் ஆகும். இது ஓர் மிக மிக அதிக சொகுசு வசதிகள் கொண்ட எஸ்யூவி காராகும்.

இந்த காரை மட்டுமில்லைங்க ஒட்டுமொத்தமாக 13 புதிய கார்களை நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முன்னணி சொகுசு கார் உற்பத்தியாளர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக இதுபோன்று செயலில் நிறுவனம் ஈடுபட்டது. மேலும், அதிக எண்ணிக்கையில் புதுமுக வாகனங்களை நிறுவனம் கொண்டு வந்ததன் விளைவாக நிறுவனம் 42.5 சதவீத விற்பனை வளர்ச்சியைக் கடந்த ஆண்டு பெற்றது.

ஆகையால், நடப்பாண்டிலும் பல்வேறு புதிய வாகனங்களை நிறுவனம் கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், ஏஎம்ஜி மற்றும் நிறுவனத்தின் இன்னும் சில புகழ்மிக்க மாடல்கள்நாட்டில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இதுதவிர, இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரும் இந்த ஆண்டிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவற்றின் வருகைக்கு ஆரம்ப புள்ளி வைக்கும் வகையிலேயே அடுத்த மாதம் 3ம் தேதி மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் லிமோசன் காரின் வருகை அமைய இருக்கின்றது. வழக்கமான எஸ்-கிளாஸ் சொகுசு கார்களைக் காட்டிலும் மிக நீளமான வீல்-பேஸைக் கொண்ட மேபேக் எஸ்-கிளாஸ் உள்ளது.

செங்குத்தாக நிற்க வைக்கப்பட்ட குரோம் பின்ஸ்ட்ரிப்களிலான மேபேக் ரேடியேட்டர் க்ரில், புதிய டிசைனிலான அலாய் வீல்கள், சி பில்லரில் மேபேக் லோகோ மற்றும் இரு பிரத்யேக நிற பூச்சு உள்ளிட்டவையும் மேபேக் எஸ்-கிளாஸ் காரை அலங்கரிக்கின்றன.

உலக சந்தையில் மெர்சிடிஸ் மேபேக் எஸ்-கிளாஸ் காரில் வி12 எஞ்ஜின் தேர்வை வழங்குகின்றது. ஆனால், இந்தியாவில் 4.0 லிட்டர் வி8 டர்போ பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 550 பிஎச்பி பவரையும், 730 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இதுதவிர இக்காரை பன்மடங்கு அதிக சொகுசு வசதிகள் கொண்ட காராக மாற்றும் விதமாக எக்கசக்க தொழில்நுட்ப மற்றும் லக்சூரி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 12.8 இன்ச் அளவுள்ள ஓஎல்இடி தொடுதிரை, 12.3 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, பின் பகுதிக்கான என்டர்டெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல்கள் மற்றும் பத்து விதமான மசாஜை வழங்கும் வசதி உள்ளிட்டவை மேபேக் எஸ்-கிளாஸ் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, பனோரமிக் சன்ரூஃப், ஆக்டீவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் பன்முக அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் தொழில்நுட்பம் ஆகியவையும் சொகுசு காரில் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர, மேபேக் எஸ்-கிளாஸ் பிரத்யேக ஓட்டுநர் பேக்கேஜையும் கொண்டிருக்கும், இது முன் இருக்கைகளை கூடுதலாக 23 டிகிரிக்கு மடித்து கொள்ள வழிவகுக்கும். இதன் வாயிலாக லெக்ரூமை அதிகரித்துக் கொள்ள முடியும். அதேவேலையில், எக்ஸிகியூட்டிவ் பின் இருக்கைகளை மேலும் 43 டிகிரி சாய்த்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








