10ம் தேதில இருந்து விற்பனைக்கு கிடைக்கும்! பென்ஸ் சி-கிளாஸ் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் புதிய தலைமுறை சி-கிளாஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் அதன் ஐந்தாம் தலைமுறை சி-கிளாஸ் கார் மாடலை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு இக்காரை நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்துள்ளது. வரும் 10ம் தேதி அன்று இக்கார் விற்பனைக்கான அறிமுகத்தை பெற இருக்கின்றது.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

அதாவது, மே 10இல் இருந்தே பென்ஸ் சி-கிளாஸ் காரை விற்பனைக்கு வாங்கிக் கொள்ள முடியும். தற்போது புக்கிங் பணிகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெர்சிடிஸ் நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

மிகவும் கவர்ச்சியான காராக அதனை நிறுவனம் தயாரித்து வருகின்றது. சி 200, சி 220டி மற்றும் சி 300டி ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளில் சி-கிளாஸ் விற்பனைக்குக் கிடைக்கும். சி 300டி ஸ்போர்ட்டி அம்சங்களைத் தாங்கிய ட்ரிம் ஆகும். 'டி' என்பது டீசல் எஞ்ஜின் கொண்ட தேர்வு என்பதை குறிக்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

எனவே தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் சி கிளாஸ் இரு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் மோட்டார் தேர்வில் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. சி 200 ட்ரிம்மில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 201 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

சி 220டி தேர்வில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போசார்ஜட் டீசல் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இவற்றைப் போலவே அதிக திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட தேர்வாக சி 300டி இருக்கின்றது.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

இதில் பொருத்தப்பட்டிருக்கும் டீசல் மோட்டார் அதிகபட்சமாக 1993 சிசி திறனை வெளியேற்றக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. இதற்காக 4 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டர்போ டீசல் மோட்டார் 261 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க்கை வெளியேற்றும். அனைத்து எஞ்ஜின்களிலும் 9 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

இந்த காரில் 48 வோல்ட் திறன் கொண்ட மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா சிட்டி இ:எச்இவி தொழில்நுட்பத்தைக் காட்டிலும் அதி-நவீன வசதி என கூற முடியாது. ஆம், சி-கிளாஸில் இடம் பெற்றிருப்பதைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பு வசதிக் கொண்டதே சிட்டி இ:எச்இவி-யில் இடம் பெற்றிருக்கக் கூடிய ஹைபிரிட் சிஸ்டம்.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தின்கீழ் வழங்கப்பட்டிருக்கும் மின்மோட்டார் 20 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது சற்று அதிக மைலேஜை வழங்க உதவும். சி200 அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16.9 கிமீட்டரையும், சி 220டி அதிகபட்சமாக 23 கிமீ மைலேஜையும், சி 300டி அதிகபட்சமாக 20.37 கிமீ மைலேஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

காரின் தோற்றம் மட்டுமில்லைங்க இந்த காரின் உட்பகுதியில் இடம் பெற்றிருக்கும் அம்சங்களும் அதிக கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. எஸ் கிளாஸ் வகை கார்களை தழுவி சி-கிளாஸின் உட்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் கிளாஸ் காரில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் போலவே போர்ட்ரைட் ரக தொடுதிரை, சென்ட்ரல் ஏர்-கன்டிஷன் வெண்டுகள் மற்றும் ஃப்ரீ ஸ்டாண்டிங் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

முந்தைய தலைமுறையைக் காட்டிலும் புதிய சி-கிளாஸ் அதிக ஸ்பேஸ் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், 25 மிமீ அதிக வீல்பேஸ் புதிய ஒன்றிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரை பன்முக நிற தேர்வில் பென்ஸ் வழங்க இருக்கின்றது. அந்தவகையில், செலனைட் கிரே (Selenite Grey), மோஜாவ் சில்வர் (Mojave Silver), ஹை-டெக் சில்வர் (High-tech Silver), மனுஃப்துர் ஒபலைட் வெள்ளை (Manufaktur Opalite White), கேவன் சைட் ப்ளூ (Cavansite Blue) மற்றும் ஒப்சிடியன் கருப்பு (Obsidian Black) ஆகிய நிற தேர்வுகளில் பென்ஸ் சி-கிளாஸ் கிடைக்கும்.

வர 10ம் தேதில இருந்து இந்த காரை வாங்கலாம்... பென்ஸ் சி-கிளாஸ் இந்தியாவில் அறிமுகம்! இந்த கார் எவ்ளோ மைலேஜ் தரும் தெரியுமா!

இதுமட்டுமின்றி, அதிக தொழில்நுட்ப கருவிகளும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், கார்-டூ-எக்ஸ் கம்யூனிகேஷன், ஓவர்-தி-ஏர் அப்டேட்ஸ், ஸ்மார்ட் ஹோம் ஃபங்க்சன், புதிய எம்பியுஎக்ஸ்7 மர்றும் 11.9 அங்குல தொடுதிரை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி டிஜிட்டல் டிரைவர் திரை மற்றும் ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் ஆகியவற்றால் கட்டளை வழங்கும் வசதி உள்ளிட்டவையும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 5, 2022, 17:13 [IST]
English summary
Mercedes benz c class makes debut in india here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+