பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

கடந்த 2021ஆம் ஆண்டிலும் கொரோனா வைரஸினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய பற்றாக்குறை உள்ளிட்டவற்றினால் ஆட்டோமொபைல் வாகனங்களின் விற்பனை தடுமாற்றத்தை கண்டது. இருப்பினும் சொகுசு கார்கள் விற்பனையில் எல்லா தடைகளையும் தாண்டி மெர்சிடிஸ்-பென்ஸ் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை கண்டு வருகிறது.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

கடந்த ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மொத்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் எண்ணிக்கை 11,242 ஆகும். அதாவது மாதத்திற்கு கிட்டத்தட்ட ஆயிரம் பென்ஸ் கார்கள் (சராசரியாக 937 யூனிட்கள்) விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2020ஆம் ஆண்டில் விற்கப்பட்டு இருந்த மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 42.75% அதிகமாகும்.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

ஏனெனில் அந்த ஆண்டில், கடந்த வருட விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 3,349 யூனிட்கள் குறைவாக 7,893 மெர்சிடிஸ் சொகுசு கார்களே நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கு அடுத்து பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை இந்திய சந்தையில் கொண்டுள்ளன.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

கொரோனா வைரஸ் முதல் அலை பரவலால் கிட்டத்தட்ட 1.5 மாதங்கள் அமலில் இருந்த நாடு தழுவிய ஊரடங்குகளினால் இத்தகைய 42.75% வீழ்ச்சியை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்குகளினால் மெர்சிடிஸ் மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட அனைத்து விதமான கார்பிரேட் நிறுவனங்களின் ஏற்றுமதி & இறக்குமதிகளும் பாதிக்கப்பட்டன.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

ஆனால் உண்மையில் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் பதிவு செய்யும் இரண்டாவது குறைந்தப்பட்ச விற்பனை எண்ணிக்கை இதுவாகும். 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் முறையே 13,502 மற்றும் 13,231 யூனிட் கார்களை விற்பனை செய்திருந்த மெர்சிடிஸ்-பென்ஸ் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக முறையே 15,330 மற்றும் 15,538 சொகுசு கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

கொரோனா வைரஸ் பரவுவதற்கு முந்தைய 2019ஆம் ஆண்டிலும் கிட்டத்தட்ட 14 ஆயிரம் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதாவது 2015ஆம் ஆண்டிற்கு பின் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் சராசரி மாத விற்பனை எண்ணிக்கை 1,100க்கு கீழ் வந்ததில்லை. ஆனால் கடந்த 2020இல் வந்தது, அதன்பின் தற்போது மீண்டும் கடந்த 2021ஆம் ஆண்டில் சென்றுள்ளது.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

கார்கள் விற்பனையில் இத்தகைய வளர்ச்சி அடைந்திருப்பது குறித்து மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான மார்டின் ஸ்வெங்க் அளித்த பேட்டியில், "முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, தொழில்துறைக்கு பல சவால்களை 2021 ஏற்படுத்தியது. இருப்பினும் கடந்த ஆண்டில், விற்பனையை மீட்டெடுக்கும் மற்றும் எங்கள் சந்தை பங்கை அதிகரித்த எங்கள் செய்திறனில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வழக்கமான தயாரிப்பு அறிமுகங்களுடன் சந்தையை உற்சாகப்படுத்துவதில் நாங்கள் வெற்றியடைகிறோம்.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

மேலும், எங்களின் புதிய வணிக மாதிரியான 'எதிர்கால சில்லறை விற்பனை' மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம். 2021ஆம் ஆண்டு எதிர்காலத்திற்கான வலுவான மற்றும் நிலையான பாதை வரைபடத்தை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும், மற்ற பிராண்டுகளை விட மெர்சிடிஸ்-பென்ஸை விரும்பும் எங்கள் வாடிக்கையாளர்களின் அதீத நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அமைந்தது." என்றார்.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

இந்த 2022ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. மெர்சிடிஸின் இக்யூஎஸ் என்ற எலக்ட்ரிக் காருக்கு உலகளவில் கவனம் கிடைத்துள்ளது. இதனால் இக்யூஎஸ் காரின் தயாரிப்பு பணிகளை இந்தியாவிலேயே துவங்கவும் இந்த ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்கான வேலைகள் இந்த 2022ஆம் ஆண்டில் இருந்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

இக்யூஎஸ் மாடலின் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் துவங்கப்பட்டால், நம் நாட்டில் எலக்ட்ரிக் சொகுசு கார்களின் ஊடுருவல் அதிகமாகலாம். இந்திய சந்தையில் சொகுசு கார்கள் பிரிவில் இன்னமும் எலக்ட்ரிக்கின் பங்கு பெரிய அளவில் இல்லை என்பது உண்மையே. இந்த 2022ஆம் ஆண்டில் புதிய எஸ்-கிளாஸ் மேபக் காரையும் மெர்சிடிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பென்ஸ் கார்களில் அப்படி என்னதாங்க இருக்கு? சொகுசு கார்கள் விற்பனையில் தொடர்ந்து முதலிடம்!!

இதற்கிடையில் சமீபத்தில் உலகளவில் ஓராயிரம் கிமீ ரேஞ்சை கொண்ட மின்சார காரினை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. விஷன் இக்யூஎக்ஸ்எக்ஸ் என்ற பெயரில் வெளியீடு செய்யப்பட்டுள்ள இது உண்மையில் கான்செப்ட் மாடலாகும். அதாவது இதன் அடிப்படையில் எலக்ட்ரிக் கார்கள் எதிர்காலத்தில் வரலாம்.

Most Read Articles

English summary
Mercedes benz maintains no 1 position in luxury car market
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X