ரோல்ஸ் ராய்ஸ் எல்லாம் கிடையாது... உலகத்திலேயே பணக்கார கார் நிறுவனம் எது தெரியுமா?
மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்திற்குத் தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் பணக்கார லக்ஸரி கார்பிராண்ட் என் பட்டம் கிடைத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்த உலகின் பணக்கார கார் நிறுவனம் என்றால் உங்கள் மனதிற்கு முதலில் எந்த நிறுவனத்தின் பெயர் வரும்? ரோல்ஸ் ராய்ஸ், புகாட்டி, இப்படி ஏதாவது ஒரு நிறுவனம் தான் பெரும்பாலான மக்களுக்கு நினைவிற்கு வரும் ஏன் என்றால் அந்நிறுவனத்தின் கார்கள் தான் மார்கெட்டில் அதிக விலையில் விற்பனையாகிறது. அந்த கார்களை கோடிக் கணக்கில் கொடுத்து வாங்க டிமாண்டும் இருக்கிறது. அதனால் அந்த நிறுவனங்களின் பெயர்தான் பலருக்குத் தோன்றும்.

ஆனால் உண்மையில் பணக்கார கார் நிறுவனம் என்றால் என்ன என யோசித்தால் ஒவ்வொரு பிறாண்டிற்கும் ஒவ்வொரு மதிப்பு இருக்கிறது. அதாவது மார்கெட்டில் குறிப்பிட்ட நிறுவனம் எவ்வளவு மதிப்பில் பொருட்களை விற்பனை செய்கிறது என்பதைப் பொருத்து அந்த பிராண்டிற்கு வேல்யூ கிடைக்கும். இப்பொழுது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் உலகில் காஸ்டலியான கார்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் தான் ஆனால் எத்தனை கார்களை தயாரிக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

காஸ்ட்லியான காரை குறைவான எண்ணிக்கையில் தயாரித்தாலும் அந்நிறுவனம் பணப் புழக்கம் குறைவாகத் தான் இருக்கும். ஆனால் விலை குறைவான கார்களை அதிகம் விற்பனை செய்தால் அந்த தொகை ஒட்டு மொத்த ரோல்ஸ்ராய்ஸ் விற்பனையை விட அதிகமாக இருந்தால் அந்த நிறுவனம் தான் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை விடப் பணக்கார நிறுவனமாகக் கருதப்படும்.

அந்த வகையில் தற்போது அதிக மதிப்பு கொண்ட லக்ஸரி கார் பிராண்ட் என்ற பெருமையை இந்தாண்டு மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தட்டி சென்றுள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து 7 ஆண்டுகளாக இந்த பட்டத்தைப் பெற்றுள்ளது.இந்நிறுவனத்தின் பிராண்ட் வேல்யூ தற்போது 56.103 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மெர்சிடீஸ் நிறுவனம் தொடர்ந்து லக்ஸரி செக்மெண்டிலேயே அதிகமாகக் கவனத்தைச் செலுத்தித் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் லாபத்தை ஈட்டப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்ற டார்கெட்டை செட் செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.

இந்த டார்கெட் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு புறம் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் வரும் 2030ம்ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் கார்களை எல்லா செக்மெண்டிலும் தயாரிக்கும் நிறுவனமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. மார்கெட்டில் எந்த இடத்தில் எல்லாம் எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வர முடியுமோ அந்த இடத்தில் எல்லாம் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த மெர்சிடீஸ்- பென்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இது மட்டுமல்ல 2039ம் ஆண்டிற்கும் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கார்பன்-நியூட்ரல் நிறுவனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இத்துடன் சேர்ந்து மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் ஆசைகளை உணர்ந்து அதற்கு தகுந்தார் போலவும் தங்கள் தயாரிப்புகளையும் வழங்கவும் முடிவு செய்துள்ளது. மேலும் ஆட்டோமொபைலியே மேலும் பல புதிய பிரிவுகளை எக்ஸ்ப்ளோர் செய்யவும் பென்ஸ் நிறுவனம் விரும்புகிறது. இதனால் விரைவில் பென்ஸ் தயாரிப்புகளில் பல புதிய செக்மெண்டில் வாகனங்களைக் காண முடியும் என எதிர்பார்க்கலாம்.

மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ1 கோடிக்கும் அதிகமான விலையில் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஏஎம்ஜி மற்றும் மேபேட்ச் ஆகிய மாடல் கார்களை இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் கார்களும் சிறப்பாக விற்பனையாகி வருவதால் இந்தியாவிலுமே அதிகமாக விற்பனையாகும் லக்ஸரி பிரண்ட் கார்கள் என்றால் மெர்சிடீஸ் - பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் தான்.

இந்த பிரிமியம் மாடல் கார்கள் செக்மெண்டில் இந்தியாவிலேயே 30 சதவீத மார்கெட் பங்கு தற்போது மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனத்திடம் தான் உள்ளது. பாக்கி உள்ள 70 சதவீதத்தை மற்ற நிறுவனங்கள் தான் பிரித்துள்ளன. ஆனால் வேறு எந்த நிறுவனத்திடமும் முழுமையாக 30 சதவீதம் இல்லை.

உலகின் பணக்கார லக்ஸி கார் நிறுவனமாக மெர்சிடீஸ் பென்ஸ் கார் தொடர்ந்து 7வது ஆண்டாக தேர்வாகியுள்ளது அதன் ரசிகர்களையும் அந்நிறுவனத்தையும் குஷியுடைய வைத்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








