வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

ஆல்ஃபா ரோமியோ டுனல் (Alfa Romeo Tonale) எஸ்யூவி கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் ஆல்ஃபா ரோமியோ (Alfa Romeo). இந்நிறுவனம் டுனல் (Tonale) எனும் புதுமுக காரை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் ஸ்போர்ட் பயன்பாட்டு (SUV) வசதிக் கொண்ட காராகும். மைல்டு ஹைபிரிட் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் என இரு விதமான தேர்வுகளில் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

புதிய உரிமையாளரான ஸ்டெல்லண்டிஸ் கீழே இக்காரை ஆல்ஃபா ரோமியோ உருவாக்கி, தற்போது வெளியீடும் செய்திருக்கின்றது. ஸ்டெல்லண்டிஸ் 14 பிராண்டுகளுக்கு உரிமையாளர் நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமானதே மஸராட்டி (Maserati), ஜீப் (Jeep), டிஎஸ் (DS) மற்றும் லான்சியா (Lancia) உள்ளிட்ட நிறுவனங்கள் ஆகும்.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

ஆல்ஃபா ரோமியோ அதன் பிரீமியம், மின்மயமாக்கப்பட்ட மற்றும் இன்டர் கன்னெக்டட் வாகனங்களின் தேர்வை விரிவாக்கம் செய்யும் வகையில் புதிய டுனல் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ஐரோப்பிய சந்தையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி க்யூ3 உள்ளிட்ட சொகுசு கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

ஸ்டெல்லண்டிஸ் நிறுவனம் 30 பில்லியன் யூரோக்கள் முதலீட்டில் தனது பிரபல வாகன மாடல்களை மின் வாகனமாக மாற்ற இருக்கின்றது. இதன் முன்னோட்டமாகவே டுனலின் வருகை அமைந்துள்ளது. நிறுவனம், 2025ம் ஆண்டில் இருந்து மின் மயமாக்கலை செயல்படுத்த திட்டமிட்டிருக்கின்றது.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

இத்துடன், 2027ம் ஆண்டு முதல் 2030 வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆல்ஃபோ ரோமியோ டுனல், ஃபியட் கிறிஸ்லர் ஆர்கிடெக்சரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இரு விதமான வேரியண்டுகளில் கிடைக்கும்.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

மைல்டு ஹைபிரிட் வெர்ஷன்: 130 எச்பி அல்லது 160 எச்பி என வேறுபட்ட திறன்கள் தேர்வில் கிடைக்கும். இரண்டும் மைல்டு ஹைபிரிட் வசதிக் கொண்ட தேர்விலுமே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது குறைந்த வேக இயக்கத்தை வழங்கும். பெட்ரோல் இல்லாத நேரங்கள் அல்லது எரிபொருள் சிக்கனத்தை வழங்க இது உதவும்.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

டுனலின் மிக அதிக பவர் கொண்ட காராக பிளக்-இன் ஹைபிரிட் வெர்ஷன் இருக்கின்றது. இந்த காரில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது முன் வீலுக்கு இயக்கத்தை வழங்கும். இத்துடன் ஓர் எலெக்ட்ரிக் மோட்டாரும் இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

இது பின் வீலுக்கு இயக்கத்தை வழங்கும். இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின்சார பவரை வழங்குவதற்காக 15.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ முதல் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

மேலும், இந்த கார் ஒட்டுமொத்தமாக 275 எச்பி பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. எனவேதான் டுனல்-இன் மிக அதி-திறன் கொண்ட காராக இத்தேர்வு பார்க்கப்படுகின்றது. இது வெறும் 6.2 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும்.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

டுனல் எஸ்யூவி காரில் அமேசான் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டண்ட், 12.3 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் அளவுள்ள தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வீல் இருக்கே ஸ்டைலுக்கே இந்த கார வாங்கலாம் போலிருக்கே... ஆல்ஃபா ரோமியோ டுனல் எஸ்யூவி கார் வெளியீடு!

பாதுகாப்பான பயணத்திற்கு உதவும் வகையில் அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், டிராஃபிக் ஜாண் அசிஸ்டன்ஸ், ஃபார்வார்டு கொலிசன் வார்னிங், தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங், பெடஸ்ட்ரியன் டிடெக்சன், லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டரிங் மற்றும் ரியர் கிராஸ் பாத் டிடெக்சன் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, லெவல் 2 தானியங்கி டிரைவிங் சிஸ்டமும் டுனல் எஸ்யூவி காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 10, 2022, 18:00 [IST]
English summary
Mercedes gla rival alfa romeo tonale suv unveiled
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+