அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகளால் புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி மோட்டார் (MG Motor). இந்த நிறுவனத்தின் புகழ் பெற்ற கார்களில் ஒன்றாக அஸ்டர் (MG Astor) திகழ்கிறது. இது மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் விலைகளை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் எம்ஜி மோட்டார் நிறுவனம் உயர்த்திருந்தது.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

எம்ஜி அஸ்டர் காரின் விலை 10 ஆயிரம் ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டிருந்தது. இந்த சூடு தணிவதற்கும் அடுத்த அதிரடியான அறிவிப்பு ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ஆம், அஸ்டர் காரை தொடர்ந்து எம்ஜி ஹெக்டர் (MG Hector) மற்றும் ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus) கார்களின் விலைகள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

இவையும் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்ஜி நிறுவனத்தின் கார்கள் ஆகும். இந்த கார்களின் விலைகள் 28 ஆயிரம் ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. ட்யூயல் டோன் வேரியண்ட்களின் விலைகள் 10 ஆயிரம் ரூபாய் வரையில் உயர்ந்துள்ளன. அதே நேரத்தில் மற்ற வேரியண்ட்களின் விலைகள் 25 ஆயிரம் ரூபாய் முதல் 28 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

வேரியண்ட்களை பொறுத்து இந்த விலை உயர்வு மாறுபடும். எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 141 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

மறுபக்கம் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 168 பிஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக உள்ளது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல், சிவிடி மற்றும் டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மறுபக்கம் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் ஒரே ஒரு கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆகும்.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

எம்ஜி நிறுவனம் தற்போது ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களின் விலைகளை உயர்த்தியுள்ள நிலையில், அடுத்தபடியாக ஹெக்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை (MG Hector Facelift) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நடப்பாண்டு இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், புதிய முன் பக்க க்ரில் அமைப்பு, மறுசீரமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டு லேஅவுட் மற்றும் புதிய 14 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த புதிய மாடலின் ஏர்கண்டிஷன் வெண்ட்களின் வடிவமும் மாற்றியமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

முன்னதாக க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் 2022 மாடலை (2022 MG Gloster) எம்ஜி மோட்டார் நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த புதிய மாடலில் அடாஸ் (ADAS) உள்பட ஏராளமான வசதிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கியுள்ளது.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

இதற்கிடையே கார்களின் விலைகள் தற்போது தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருவது வாடிக்கையாளர்களை கவலையடைய செய்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் பலர் திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த விலை உயர்வு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்புகள்... புதிய கார் வாங்குபவர்கள் கலக்கம்! இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்

ஏனெனில் எம்ஜி மோட்டார் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தற்போது கார்களின் விலைகளை தொடர்ச்சியாக உயர்த்தி வருகின்றன. தற்போது கார்களின் விலைகளை உயர்த்தியுள்ள நிறுவனங்களில் இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனமும் ஒன்றாகும். வரும் நாட்களில் இன்னும் பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Mg hector and hector plus prices hiked
Story first published: Wednesday, September 21, 2022, 9:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X