எம்ஜி ஹெக்டர் ஹைபிரிட் கார் எப்ப வேணாலும் லாஞ்ச் ஆகலாம்... விலை எவ்வளவு தெரியுமா?
எம்ஜி நிறுவனம் தனது ஹெக்டர் காரில் ஹைபிரிட் வெர்ஷனை விரைவில் இந்தியாவிற்குக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் இந்த காரின் அறிமுகம் குறித்துக் காணலாம்.
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வரும் ஹெக்டர் காரை அந்நிறுவனம் மற்ற நாடுகளில் வேறு வேறு பெயர்களில் விற்பனை செய்து வருகிறது. எம்ஜி நிறுவனத்திற்குத் தலைமை நிறுவனமான SAIC நிறுவனம் இந்த ஹெக்டர் காரை இந்தோனேஷியாவில் தனது வூலிங் பிராண்டில் அல்மாஸ் என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஹெக்டர் காரின் ஹைபிரிட் ஆக்கும் முயற்சியில் தற்போது வூலிங் நிறுவனம் இந்தோனேஷியாவில் தனது அல்மாஸ் காரில் ஹைபிரிட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவில் வூலிங் அல்மாஸ் கார் 1.5 லிட்டர் டர்போ இன்ஜினை கொண்டுள்ளது. இதே இன்ஜின் தான் இந்தியாவில் எம்ஜி ஹெக்டர் காரிலும் உள்ளது. கிட்டத்தட்ட அல்மாஸ் காரில் உள்ள அனைத்துமே இந்தியாவில் உள்ள ஹெக்டர் காரிலும் இருக்கிறது. ஆனால் அல்மாஸ் காரில் ஏடிஏஎஸ் தொழிற்நுட்ப வசதி இருக்கிறது. எம்ஜி நிறுவனம் இதை ஹெக்டர் காரில் அப்டேட்டாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில் வூலிங் நிறுவனம் இந்தோனேஷியாவில் தனத அல்மாஸ் காரில்புதிய அப்டேட்டாக அல்மாஸ் ஹைபிரிட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் செட்டப் இ-சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரின் ஸ்டிராங்க் ஹைபிரிட் காரை கான்செப்ட் காராக அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த கார் 125 பிஎஸ் பவரையும் 168 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் தின் கொண்டது. எலெக்டரிக் மோட்டாருடன் சேர்ந்து இயங்கும் போது 174 எச்பி பவரையும் 320 என் எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இதில் இவி ஒன்லி, சிரீஸ் ஹைபிரிட், மற்றும் பேரலல் ஹைபிரிட் ஆகிய 3 டிரைவ் மோட்கள் இருக்கின்றனர். இந்தியாவில் இந்த கார் டீசல் ஸ்டிராங்க் ஹைபிரிட், பெட்ரோல் ஸ்டிராங் ஹைபிரிட், மற்றும் பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் ஆகிய 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியாகவுள்ளது.
இந்தோனேஷியாவில் வெளியாகியுள்ள வூலிங் அல்மாஸ் ஹைபிரிட் காரை பொருத்தவரை பழைய காரிலிருந்து எக்கசக்க அப்டேட்களை கொண்டுள்ளது. குறிப்பாக கோரின் பின்னால் ஹைபிரிட் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இது போக காரின் பல பகுதிகளில் நீள நிற அசெண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த காரின் ஹைபிரிட் இல்லாத கார்களிலிருந்து வேறுபட்டுத் தெரியும். இந்த கார் வெள்ளை, சில்வர், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய 4 நிறங்களில் கிடைக்கிறது.
இந்தோனேஷியாவில் இந்த அல்மாஸ் காரை பொருத்தவரை 3 வரிசை சீட்டை கொண்டது. ஒரே நேரத்தில் 7 பேர் பயணிக்கும் திறன் கொண்டது. இந்தியாவில் இதே காரை எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் என்ற பெயரில்6/7 சீட்டர் காராக எம்ஜி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. உட்புறத்தைப் பொருத்தவரை பேட்ஜ் நிற உட்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. பேனல்கள் எல்லாம் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இது போக இந்த காரில் பானரோமிக் சன்ஃரூப், கனெக்டெட் கார் தொழிற்நுட்பம், 10.4 டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஏடிஏஎஸ் சூட் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. இந்த ஏடிஏஎஸ் தொழிற்நுட்பத்தில் லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வேர்டு கோலீசன் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமெட்டிக் எம்ர்ஜென்ஸி பிரேக்கிங் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.
இந்தோனேஷியாவில் வூலிங் அல்மாஸ் காரின் விலையைப் பொருத்தவரை பேஸ் மேனுவல் எக்ஸ் வேரியன்ட் 273.5 மில்லியன் ரூபையா அதாவது இந்திய மதிப்பில் ரூ14.25 லட்சம் என்ற விலையிலும், டாப் வேரியன்ட் 470 மில்லியன் ரூபையா அதாவது இந்திய மதிப்பில் ரூ24.5 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த விலையை ஒப்பிடும் போது இந்தோனேஷியாவிலும், இந்தியாவிலும் கிட்டத்தட்ட ஒரே விலை தான் இருக்கிறது. இந்தியாவிலும் ஹெக்டர் ஸ்டிராங் ஹைபிரிட் காரை ரூ25 லட்சம் என்ற விலையில் எதிர்பார்க்கலாம்.
ஆனால் இந்தியாவில் எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தும் நோக்கில் தான் இருக்கிறது. ஹைபிரிட் ஹெக்டர் காரை அறிமுகப்படுத்தும் முயற்சி தற்போது இல்லை. முயற்சி இல்லை என்பதால் எம்ஜி இந்த காரை இந்தியாவிற்குக் கொண்டு வராது என அர்த்தம் இல்லை. தற்போது மாருதி,டொயோட்டா, ஹோண்டா நிறுவனங்கள் எல்லாம் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் அதன் வரவேற்பைப் பொருத்து எம்ஜி நிறுவனம் இந்த காரை இந்தியாவிற்குக் கொண்டு வரலாம்.


Click it and Unblock the Notifications








