குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

இந்திய சந்தையில் சமீப காலத்தில் நுழைந்த கார் தயாரிப்பு நிறுவனங்களுள் எம்ஜி மோட்டாரும் ஒன்றாகும். 2019இல் இந்த பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி மாடலின் மூலம் நுழைந்தது. இதனை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் 2வது காராக 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் இசட்.எஸ் எலக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

ஹெக்டரின் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று கவனத்தை பெற்ற எம்ஜி பிராண்டில் அடுத்ததாக நேரடியாக இசட்.எஸ் என்ற பேட்டரி கார் அறிமுகமானது அனைவரையும் மேலும் கவர்ந்தது. எம்ஜி இசட்.எஸ் எலக்ட்ரிக்கின் புதிய அப்டேட் செய்யப்பட்ட வெர்சன் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இசட்.எஸ் எலக்ட்ரிக்கை தொடர்ந்து மேலும் சில எலக்ட்ரிக் கார்களையும் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

இதனால் இந்தியா முழுவதும் சார்ஜிங் நிலையங்களை விரிவுப்படுத்துவதை இந்த நிறுவனம் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே நாடு முழுவதும் 1,000 டைப்-2 மாறுதிசை மின்னோட்ட சார்ஜிங் நிலையங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக எம்ஜி நிறுவனம் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 1000 சார்ஜிங் நிலையங்களுடன் 100 50 கிலோவாட்ஸ் விரைவு சார்ஜர்களும் நிறுவப்பட உள்ளன.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

எலக்ட்ரிக் கார்களை வாங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் சில குழப்பங்களில் ஒன்று, சார்ஜிங் வசதி எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்குமா என்பதும் ஆகும். இந்த பயத்தை இவ்வாறு சார்ஜிங் நிலையங்கள் அதிகரிப்பு குறைக்கும். எம்ஜி இசட்.எஸ் இவி காருடன் போதுமான நீளத்தில் சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது. இதனை எந்தவொரு 15 ஆம்பியர் மின்னழுத்தத்தை கொண்ட 7.5 கிலோவாட்ஸ் சுவர் மின்சாரத்துடனும் இணைக்கலாம்.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

ஆதலால் வீட்டில் மட்டுமின்றி, அலுவலகங்களிலும் சார்ஜிங் தேவையை போக்கி கொள்ள முடியும். ஆனால் இதற்கு சற்று நேரம் எடுக்கும். விரைவாக சார்ஜை நிரப்பி கொள்ள மிகவும் சில நகரங்களில், முக்கியமான எம்ஜி டீலர்ஷிப் மையங்களில் 50 கிலோவாட்ஸ் நேர்திசை மின்னோட்ட சார்ஜர்கள் உள்ளன. இவை அனைத்து நாட்களிலும், அனைத்து நேரங்களிலும் கிடைப்பதாக எம்ஜி தெரிவிக்கிறது.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

இதனை தாண்டி, பயணத்தின் போது சார்ஜிங் தேவைகள் ஏதேனும் ஏற்படுமேயானால், அதற்கும் டீலர்ஷிப் மையத்தில் இருந்து சேவை கிடைக்கிறது. இவற்றுடன் விரைவில் 1000 டைப்-2 நேர்திசை மின்னோட்ட சார்ஜர்களும், 100 50 கிலோவாட்ஸ் நேர்திசை மின்னோட்ட சார்ஜர்களும் இணையவுள்ளன. வழக்கம்போல் இந்த புதிய சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் ஏற்றி கொள்ள குறிப்பிட்ட தொகையை கட்டணமாக எம்ஜி வசூலிக்கும்.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

கடந்த மார்ச் 7ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் காரில் எதிர்பார்த்ததை போல் அளவில் பெரிய 50.3kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக நிரப்பி அதிகப்பட்சமாக 461கிமீ தொலைவிற்கு சோதனையில் பயணித்து காட்டியுள்ளனர். இந்த அளவில் பெரிய பேட்டரியை பெறும் இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் அதிகப்பட்சமாக 173 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம்.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

ஆனால் முன்பு இதனை காட்டிலும் அளவில் சிறிய 44kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு இசட்.எஸ் இவி எலக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் 419கிமீ ரேஞ்ச் பெற முடிந்தது. பேட்டரி அளவில் பெரியதாக, செயல்திறன்மிக்கதாக வழங்கி இருப்பது மட்டுமின்றி, எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய இசட்.எஸ் இவி-இல் ADAS தொழிற்நுட்பத்தினையும் சிறப்பம்சமாக வழங்கியுள்ளது.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

எக்ஸைட் & எக்ஸ்க்ளூசிவ் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2022 இசட்.எஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.22 லட்சம் மற்றும் ரூ.25.88 லட்சங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த காரை தற்போதைக்கு வாங்க முடியாது.

குறைந்த கட்டணத்தில் சார்ஜிங் வசதி.. 1,000 டைப்-2 சார்ஜர்களை நிறுவும் எம்ஜி!! விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

ஏனெனில் 2022ஆம் ஆண்டிற்கான முதல் தொகுப்பாக எம்ஜி மோட்டார் நிர்ணயித்த இசட்.எஸ் இவி ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அனைத்தும் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டன. முன்பதிவு செய்தவர்களுக்கு கார் டெலிவிரி கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 23, 2022, 21:40 [IST]
English summary
Mg motor india plans to set up 100 ev charging stations in india details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+