பிப்ரவரியில் ஏறக்குறைய 4,500 எம்ஜி கார்கள் விற்பனை!! இந்தியாவில் விற்பனை 5% அதிகரிப்பு!
எம்ஜி மோட்டார் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான முழுமையான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் சமீபத்தில் நுழைந்த வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களுள் எம்ஜி மோட்டாரும் ஒன்று. கடந்த 2019இல் ஹெக்டர் எஸ்யூவி காரின் மூலம் நம் நாட்டில் விற்பனையை துவங்கிய இந்த நிறுவனம் அதன்பின் தனது முதல் எலக்ட்ரிக் காராக இசட்.எஸ் இவி -ஐ 2020இன் துவக்கத்தில் களமிறக்கியது.

இவற்றை தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது எம்ஜி கார்களாக க்ளோஸ்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் அறிமுகப்படுத்தப்பட்டன. கடைசியாக கடந்த 2021இல் இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் பெட்ரோல் வெர்சனாக ஆஸ்டர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. என மொத்தம் 5 கார்களை தற்போதைக்கு விற்பனை செய்துவரும் எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 4,528 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

இதுகுறித்து எம்ஜி மோட்டார் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்த விற்பனை எண்ணிக்கை 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 5 சதவீதம் அதிகம் ஆகும். சீரான முன்பதிவுகளினாலும், எம்ஜி கார்களுக்கு தேவை வலுவாக இருப்பதினாலும் பாகங்கள் விநியோக சங்கிலியில் சில தடைகளுக்கு மத்தியில் செயல்பட்டாலும் ஒரு நம்பிக்கைக்குரிய வளர்ச்சி வேகத்தை எம்ஜி மோட்டார் நிறுவனம் அனுபவதித்து வருகிறது.

வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 5 சதவீத வளர்ச்சிக்கு சமீபத்திய எம்ஜி காரான ஆஸ்டரின் வருகையினை மிக முக்கிய காரணமாக சொல்ல வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் அசத்தலான செயல்படுதிறனை கொண்ட எம்ஜி ஆஸ்டர் எஸ்யூவி கார்களை அதிகரித்துவரும் தேவைக்கேற்ப வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக எம்ஜி மோட்டார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் முதல் எம்ஜி காரான ஹெக்டர் மற்றும் க்ளோஸ்டர் மாடல்களும் அவற்றின் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எம்ஜியின் இந்த புதிய அறிக்கையில் நிறுவனத்தின் புதிய அறிமுகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி புதிய தலைமுறை இசட்.எஸ் எலக்ட்ரிக் காரின் அறிமுகம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்துவரும் எலக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட இசட்.எஸ் இவி ஆனது இணைய வசதி பெற்ற நாட்டின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காராக விளங்குகிறது. இத்தகைய காரின் புதிய தலைமுறை மாடல் நிச்சயம் சவுகரியம் மற்றும் பிரீமியம் அனுபவத்தை வழங்குவதிலும் மேம்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

வரும் ஆண்டுகளில் இசட்.எஸ் போன்ற மேலும் சில எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சுற்றுச்சூழலை உருவாக்குவதில் எம்ஜி உன்னிப்புடன் உள்ளது. எம்ஜி மோட்டாருற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலை உள்ளது. வருடத்திற்கு 80,000 வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு திறன் உடன் உள்ள இந்த தொழிற்சாலையில் மொத்தம் 2,500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

எம்ஜி மோட்டார் இந்திய சந்தையில் பல முதல்முறையான-கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எம்ஜி ஹெக்டர் இந்தியாவில் முதல் இணைய வசதி பெற்ற எஸ்யூவி கார். அதேபோல் இணைய வசதி பெற்ற முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் இசட்.எஸ் என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். எம்ஜி க்ளோஸ்டர் ஆனது நிலை-1 தானியங்கி தொழிற்நுட்ப வசதிகளை பெற்ற இந்தியாவின் முதல் பிரீமியம் எஸ்யூவி.

இந்த தானியங்கி தொழிற்நுட்பங்களை இரண்டாம் நிலையில், தனிப்பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பெற்ற இந்தியாவின் முதல் எஸ்யூவி காராக ஆஸ்டர் விளங்குகிறது. யுகே-வை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான எம்ஜி மோட்டார் 1924இல் நிறுவப்பட்டது. எம்ஜி (MG) என்பதன் முழு அர்த்தம் மோரிஸ் கேரேஜ் (Morris Garages) ஆகும். ஸ்போர்ட்ஸ் கார்கள், ரோட்ஸ்டர்கள் மற்றும் காப்ரியோலெட் கார்களுடன் எம்ஜி உலகளவில் பிரபலமான கார் பிராண்டாக விளங்குகிறது.

எம்ஜி கார்கள் பல முக்கிய பிரபலங்களுக்கும் பிடித்தமானவைகளாக விளங்குகின்றன. குறிப்பாக, பிரிட்டனில் பிரதமரில் இருந்து பிரிட்டிஷ் ராயல் குடும்பம் வரையில் ஸ்டைலான, இளமையான மற்றும் சுறுசுறுப்பான செயல்படுதிறன்களை கொண்ட எம்ஜி கார்களை பயன்படுத்தி வருகின்றனர். யுகே-வில் எம்ஜி பிராண்டிற்கு கார் க்ளப் கூட 1930இல் இருந்தே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உடன் செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








