எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிரடி திட்டம்... எலெக்ட்ரிக் வண்டி வாங்க போறவங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!
எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியா முழுவதும் குடியிருப்பு வளாகங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான 1,000 சார்ஜர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த 1,000 எலெக்ட்ரிக் வாகன சார்ஜர்களையும் 1,000 நாட்களில் அமைப்பதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 'எம்ஜி சார்ஜ்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய முயற்சியின் கீழ், ஏசி டைப்-2 ஃபாஸ்ட் சார்ஜர்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் அமைக்கவுள்ளது. இந்த சார்ஜர்களை அமைப்பதன் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நிறைய பேர் மாறுவார்கள் என எம்ஜி மோட்டார் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. எம்ஜி மோட்டார் நிறுவனம் இதற்காக பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இதன்படி எலெக்ட்ரிஃபீ, எக்ஸிகாம், இசார்ஜ்பேஸ், குடியிருப்பு நல சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் எம்ஜி மோட்டார் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது. இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் அதே நேரத்தில், புதிய இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளையும் எம்ஜி மோட்டார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் திகழ்ந்து கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், முதலிடத்தில் உள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் இதுதான்.

இதன் 2022 மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மாடலில் வழங்கப்படும் பேட்டரியை விட, பெரிய பேட்டரியை, புதிய எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெறவுள்ளது.

இதன் காரணமாக அதன் ரேஞ்ச் அதிகரிக்கவுள்ளது. ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் பயணிக்க கூடிய தொலைவுதான் இங்கே ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது. தற்போதைய நிலையிலேயே எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ரேஞ்ச் மிகவும் சிறப்பான ஒன்றாகதான் இருந்து வருகிறது. இதை காட்டிலும் அதிகம் என்றால், உண்மையிலேயே இது மிக சிறந்த தேர்வாக இருக்கும்.

பேட்டரி அளவு மற்றும் ரேஞ்ச் அதிகரிப்பு ஆகியவற்றுடன், புதிய வசதிகளையும் 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இதன் டிசைனிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. ஒட்டுமொத்தத்தில் தற்போதைய மாடலை காட்டிலும் பல்வேறு விதங்களில் மேம்பட்ட மாடலாக 2022 எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் போட்டியிட்டு வருகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மட்டுமே, இதன் நேரடி போட்டியாகும். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விலை குறைவான மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

எனவே எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இது நேரடி போட்டி கிடையாது. ஆனால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு விற்பனையில் நேரடியாக சவால் அளிக்க வேண்டும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை குறைவான மாடல் ஒன்றை எம்ஜி மோட்டார் நிறுவனம் களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் தற்போதைய மாடலை காட்டிலும் சிறிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது. ஆனால் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் இந்த புதிய மாடல் எப்போது விற்பனைக்கு வரும்? என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நடந்தால், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில், டாடா மற்றும் எம்ஜி மோட்டார் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்படும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன், டிகோர் எலெக்ட்ரிக் காரையும் விற்பனை செய்து வருகிறது. வரும் காலங்களில் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்யவுள்ளது. எனவே இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








