அட போங்க காரு வாங்குற ஆசையே போய்டும் போலிருக்கே... மாருதி, டாடாவை அப்படியே ஃபாலோ பண்ணியிருக்கு இந்த எம்ஜி!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் புத்தாண்டு பரிசாக விலை உயர்வை வழங்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் விலை உயர்வு பற்றி அறிவித்திருக்கின்றன.

சில சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களும் இந்த மாதிரியான ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை 2023 ஜனவரி முதல் தங்களின் புதிய கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருக்கின்றன. இதுபோன்று முன்னணி நிறுவனங்கள் விலை உயர்வை பற்றி அறிவித்திருப்பதால் இந்தியர்கள் தற்போது அதிருப்தியில் ஆழ்ந்திருக்கின்றனர். அதேவேலையில், இந்தியர்களுக்கு சற்றே மன நிம்மதி தரும் வகையில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் விலை உயர்வை பற்றி இன்னும் அறிவிக்காமல் இருக்கின்றன.

விலை உயர்வு

ஆனால், இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்காது என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. ஏனெனில், விலை உயர்வை பற்றி அறிவிக்காத நிறுவனங்கள் தற்போது அதுகுறித்த தகவலை வெளியிட தொடங்கியிருக்கின்றன. ஆமாங்க, எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் இன்னும் விலை உயர்வை பற்றி தெரிவிக்கவில்லை என சந்தோஷம் அடைந்துக் கொண்டிருந்தோமே, அந்த நிறுவனங்கள் எல்லாம் விலை உயர்வு பற்றி அறிவிக்கத் தொடங்கி உள்ளன. அந்தவகையில், நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எம்ஜி அதன் விலை உயர்வுகுறித்த தகவலை வெளியிட்டு உள்ளது.

இந்த நிறுவனமும் 2023 ஜனவரி முதலே தனது புதிய கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் உடன் கூட்டு சேர்ந்து இந்த விலை உயர்வை செய்வதை போல் அடுத்த ஆண்டு முதல் எம்ஜி விலை உயர்வை செய்ய இருக்கின்றது. இது நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், நிறுவனம் பெரும் தொகையை உயர்த்த இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

எம்ஜி அதன் கார்களின் விலையில் ரூ. 90 ஆயிரம் உயர்வை செய்ய இருக்கின்றது. விலை உயர்வுகுறித்த முழுமையான விபரம் வெகு விரைவில் வெளியிடப்பட இருக்கின்றது. இந்த திடீர் விலை உயர்விற்கு எம்ஜி நிறுவனம் வாகன கட்டுமான பொருட்களின் தொடர் விலை உயர்வையே காரணமாக கூறியிருக்கின்றது. இதே காரணத்தை முன் வைத்தே பிற நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்திருக்கின்றன. கோவிட் வைரஸ் பரவலுக்கு பின்னர் வாகனங்களின் விலை கடுமையாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

குறிப்பாக, லாக்டவுண் காலத்தில் ஏற்பட்ட உதிரி பாக தட்டுப்பாடு இப்போதும் குறிப்பிட்ட சில நாடுகளில் நீடித்த வண்ணம் உள்ளது. இது வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்விற்கு காரணமாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அடுத்த ஆண்டை புதிய வில உயர்வுடன் வாகன உற்பத்தியாளர்கள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எம்ஜி நிறுவனம் வரும் ஜனவரி மாதத்தை புதிய விலை உடன் மட்டுமே தொடங்கப்போவதில்லை.

அந்த மாதத்தில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்று இரு கார்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இரண்டுமே எலெக்ட்ரிக் கார்கள் என கூறப்படுகின்றது. அதில், ஒன்று எம்ஜி 4 இவி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் மின்சார ஹேட்ச் பேக் காராகும். இதுபற்றிய தகவலே சமீபத்தில் வெளியாகியது. தனது புகழ்பெற்ற எஸ்ஏஐசி தளத்தில் வைத்தே இந்த காரை நிறுவனம் வடிவமைத்து உள்ளது.

எம்ஜி நிறுவனத்தின் இந்த எலெக்டரிக் கார் சர்வதேச சந்தையில் 51 kWh மற்றும் 64 kWh என இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இரண்டு பேட்டரி பேக்கில் மட்டுமல்ல மின் மோட்டார் விஷயத்திலும் மாறுபட்டவையாகக் காட்சியளிக்கின்றன. 51 kWh பேட்டரி பேக்கில் 170 எச்பி பவர் கொண்ட மோட்டரும், 64 kWh பேட்டரி பேக்கில் 203 எச்பி பவர் கொண்ட மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மோட்டாரும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இரண்டும் ரியர் வீல் டிரைவ் வசதியைக் கொண்டவை ஆகும். முழு சார்ஜில் 51 kWh பேட்டரி பேக் கொண்ட எம்ஜி 4 இவி 350 கிமீ ரேஞ்ஜையும், 64 kWh பேட்டரி பேக் கொண்ட எம்ஜி 4 இவி 452 கி.மீ ரேஞ்ஜையும் வழங்கும். இது மிக சிறப்பான ரேஞ்ஜ் திறன் ஆகும்.

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறன் உடன் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 அங்குல டிரைவருக்கான திரை, ஒயர் லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, வென்டிலேட்டட் வசதிக் கொண்ட இருக்கைகள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்சன், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் உடன் கூடிய ஏடிஏஎஸ் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட காரையே எம்ஜி நிறுவனம் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்ய இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, December 16, 2022, 11:55 [IST]
English summary
Mg motor price hike 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+