3 ஆண்டுகளில் 1 லட்சம் கார்கள்... எம்ஜி நிறுவனத்தின் புதிய மைல்கல்...
எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 1 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணலாம்

இந்திய கார் சந்தைக்கு வந்த குறுகிய நாட்களிலேயே மக்களிடம் நல்ல மதிப்பைப் பெற்ற நிறுவனம் எம்.ஜி. இந்நிறுவனம் முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஹெக்டர் கார் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்த நிறுவனம் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது.

இந்நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹெக்டர் காரை இந்தியாவின் முதல் இன்டர்நெட் காராக அறிமுகப்படுத்தியது. முழுவதும் தொழிற்நுட்ப உயர் வசதிகளுடன் இந்த கார் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது போல இந்நிறுவனம் தற்போது அஸ்டர், ஹெக்டர், க்ளோஸ்டார், ஹெக்டர் + ஆகிய 4 கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதற்கிடையில் இந்நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஸிஎஸ் இவி ஆட்டோனமஸ் (லெவல் 1) என்ற எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழு சார்ஜில் 500 கி.மீ வரை பயணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இந்தியா வாடிக்கையாளர்களுக்கு அதற்கான பயிற்சியை வழங்கியும் வருகிறது.

அடுத்ததாக அந்நிறுவனத்தின் அஸ்டார் க்ளோஸ்டார் ஆகிய வாகனங்களையும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதோடு எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகச் செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் அட்டோனமஸ் சிஸ்டத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் சிப் தட்டுப்பாடு இந்த காருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்நிறுவனம் தனது அஸ்டார் காரின் புக்கிங்கை 5 ஆயிரம் கார்களுக்கான புக்கிங் வந்தவுடன் புக்கிங்கை நிறுத்திவிட்டது.

இந்நிறுவனம் Car-as-a-Platform (CaaP) என்ற கான்செப்டில் கார்களை உருவாக்கி வருகிறது. இதனால் சிறந்த கார்களை உருவாக்க முடிகிறது. இந்த கார்கள் பாதுகாப்பாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்கும். இப்படிப் பார்த்துப் பார்த்து இந்நிறுவனம் ஒவ்வொரு விஷயத்தையும் செய்வதால் இந்நிறுவனம் பல இடங்களில் நல்ல பெயரை எடுத்துள்ளது.

2021 Sales Satisfaction Study (SSI) மற்றும் India Customer Service Index Study (CSI) ஆகிய ஆய்வுகளில் இந்நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேசன் பெடரேஷன் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் மொத்தம் 37 சதவீதம் பெண் ஊழியர்களை வைத்து இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இதை 2023 டிசம்பர் மாதத்திற்குள் இதை 50 சதவீதமாக உயர்த்த முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிறுவனம் தங்கள் விற்பனையைத் துவங்கி 3 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்நிறுவனம் 1 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது அந்நிறுவனத்தின் அனைத்து கார்களையும் சேர்த்த ஓட்டு மொத்த எண்ணிக்கையாகும்.

அதில் பெரும்பாலும் எம்ஜி ஹக்டேர் காரின் எண்ணிக்கை தான் அதிகம். இந்த கார் விலை அதிகம் என்பதால் வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால் தரத்தை விரும்பி காரை வாங்குபவர்களுக்கு இந்த நிறுவனம் ஏமாற்றத்தை தருவதேயில்லை என்பதே மார்கெட்டில் நிலவும் கருத்து

இந்நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் எம் ஜி அஸ்டர் எனும் கார் தான் இந்நிறுவனத்தின் குறைந்த விலை கார். இந்த கார் ரூ9.98 லட்சம் முதல் ரூ17.73 லட்சம் என்ற விலையில் மார்கெட்டில் எக்ஸ் ஷோரூம் விலையாக விற்பனையாகிறது. அடுத்தபடியாக எம்ஜி ஹெக்டர் கார் ரூ14.15 லட்சம் முதல் ரூ20.31 லட்சம் என்ற விலையில் மார்கெட்டில் விற்பனையாகிறது.

மூன்றாவதாக எம்ஜி ஹெக்டர் + என்ற கார் ரூ14.65 லட்சம் முதல் ரூ20.94 லட்சம் என்ற விலையில் மார்கெட்டில் விற்பனையாகிறது.
அடுத்தபடியாக இந்நிறுவனத்தின் எம்ஜி க்ளோஸ்ட்டர் என்ற கார் ரூ31.48 லட்சம் முதல் ரூ39.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதுதான் இந்நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் அதிகபட்ச விலை

இதே போல இந்நிறுவனம் எம்ஜி ஸிஎஸ் இவி என்ற எலெக்டரிக் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த காரின் விலை ரூ22 லட்சம் - ரூ25.88 லட்சம் என்ற விலையில் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








