புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

அப்டேட் செய்யப்படும் எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவி காரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

எம்ஜி மோட்டார் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு தனது புதிய 6-இருக்கை எஸ்யூவி காராக க்ளோஸ்டரை அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்டு வருட கணக்கில் ஆனதால், இதனை அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எம்ஜி நிறுவனம் உள்ளது. இதற்கான பணிகளில் இந்த நிறுவனம் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் இந்தியாவில் சில முறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டு இருந்தன. இந்த வகையில் சமீபத்தில் கூட புதிய க்ளோஸ்டரின் சோதனை மாதிரி ஒன்றின் ஸ்பை படங்கள் பெங்களூருவில் இருந்து வெளியாகி இருந்தன. அந்த படங்களில் காரின் பெரும்பான்மையான பகுதிகள் மறைக்கப்பட்டு இருந்தன.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

இருப்பினும் திருத்தியமைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்களை பார்க்க முடிந்தது. அதேபோல் தற்போதைய க்ளோஸ்டரின் பின்பக்க பம்பர் மற்றும் பின்கதவின் வடிவத்திலும் மாற்றங்கள் வழங்கப்படலாம். இவ்வாறு மிகவும் சில சில விஷயங்கள் மட்டுமே புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றி நமக்கு தெரியவந்துள்ளன.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், காரின் முன்பக்கத்தில் மிக முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்படும். இதனால் முன்பக்கத்திலும் அப்டேட் செய்யப்பட்ட வடிவில் எல்இடி ஹெட்லேம்ப்கள், சற்று திருத்தியமைக்கப்பட்ட ரேடியேட்டர் க்ரில் & முன்பக்க பம்பர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். அதேபோல் காரின் அலாய் சக்கரங்களின் டிசைனும் புதுமையானதாக கொடுக்கப்படலாம்.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

இத்தகைய வெளிப்புற அம்சங்களை காட்டிலும் உட்புற கேபினில் தான் க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஏகப்பட்ட புதிய வசதிகளை பெற்றுவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. க்ளோஸ்டரில் ஏற்கனவே அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்கள், 360-கோண பார்க்கிங் கேமிராகள், பனோராமிக் சன்ரூஃப், 12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், சூடான காற்றை வழங்கக்கூடிய & மடக்கும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை உள்ளிட்ட அசரடிக்கும் அம்சங்களை எம்ஜி வழங்கி வருகிறது.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

இத்துடன் மஸாஜ் & மெமரி செயல்பாடுகள், ஓட்டுனரால் காண முடியாத பகுதிகளை கண்காணிக்கும் அமைப்பு, எம்ஜி-யின் ஐ-ஸ்மார்ட் கனெக்டட் கார் தொழிற்நுட்பம், பெடல் ஷிஃப்டர்ஸ், 6-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உடன் 12.3 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், 6 காற்றுப்பைகள் என க்ளோஸ்டரில் வழங்கப்படும் தொழிற்நுட்ப அம்சங்களை சொல்லி கொண்டே போகலாம்.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

இதை தாண்டி க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்னென்ன புதிய வசதிகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் இணைக்கும்? என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இன்னும் சில வசதிகளை புகுத்த பார்க்கும். அதேநேரம் தற்போதைய தொழிற்நுட்ப வசதிகளில் சில, சற்று அப்டேட் செய்யப்பட்டிருக்கலாம். இவற்றை தவிர்த்து புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் வேறெந்த புதிய அப்டேட்டையும் எதிர்பார்க்க முடியாது.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

இதில் க்ளோஸ்டர் எஸ்யூவி மாடலின் என்ஜின் தேர்வுகளும் அடங்குகின்றன. க்ளோஸ்டரில் தற்சமயம் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-டீசல் மற்றும் 2.0 லிட்டர் இரட்டை டர்போ டீசல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் முதல் டர்போ-டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 163 பிஎச்பி மற்றும் 375 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

இது க்ளோஸ்டரின் சூப்பர் & ஸ்மார்ட் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டாவது டர்போ-டீசல் என்ஜின் 218 பிஎச்பி மற்றும் 480 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இதனை ஷார்ப் & சாவி வேரியண்ட்களில் பெறலாம். அதேபோல் இந்த இரட்டை-டர்போ டீசல் என்ஜினை ட்ரைவ் மோட்களை வழங்ககூடிய 4-சக்கர-ட்ரைவ் அமைப்புடனும் பெறலாம்.

புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்த தயாராகும் எம்ஜி!! என்னென்ன புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம்?

இந்த இரு டர்போ-டீசல் என்ஜின் தேர்வுகளுடன் டிரான்ஸ்மிஷனுக்கு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனையில் எம்ஜி க்ளோஸ்டருக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன. இதில் புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு போட்டியாக, அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு மஹிந்திரா விரைவில் குறிப்பிடத்தக்க அப்கிரேடினை வழங்க உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 17, 2022, 18:41 [IST]
English summary
2022 MG Gloster Facelift – What To Expect
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+