இப்ப சேமிக்க ஆரம்பிச்சா கூட வாங்கிடலாம்.. சீப் ரேட்ல எம்ஜி புது எலெக்ட்ரிக் கார கொண்டு வரப்போது...
எம்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது ஏர் காரை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அளவிற்கு பெரும் வளர்ச்சியைப் பெறவிட்டாலும் ஓரளவிற்கு வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வேகமாக வளர்ச்சி இல்லாததாதற்கு முக்கியமான காரணம் அதன் விலைதான். எலெக்ட்ரிக் கார்களின் விலை கம்பஷன் இன்ஜின் கார்களை விட அதிகமாக இருக்கிறது.

இந்தியாவிலேயே தற்போது விற்பனையில் இருக்கும் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்றால் அது டாடா நிறுவனத்தின் டியாகோ கார் தான். அதன் விலையே ரூ8.5 லட்சம் ஆகும். இந்நிலையில் கார் பிரியர்கள் பலர் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கைளை விடுத்துவந்தனர். ஆனால் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது.

இந்நிலையில் எம்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே பிரிமியம் செக்மெண்டில் ஸிஎஸ் இவி என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து இவி கார்களை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான வூலிங் நிறுவனத்தின் சார்பில் ஏர் என்ற காரை வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது.

இந்த ஏர் காரை எம்ஜி நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதை அந்நிறுவனம் கோட்பெயர் E230 என்ற பெயரில் இந்தியாவில் டெஸ்ட் செய்து வருகின்றனர். இந்த காரை எம்ஜி நிறுவனம் இந்தோனேஷியாவில் ஏற்கனவே அன்வீல் செய்துவிட்டது. அதே காரை இந்திய கண்டிஷன்களுக்கு ஏற்றார் போல சிறியதாக மாற்றம் செய்து இந்தியாவிற்குக் கொண்டு வரவுள்ளனர்.

எம்ஜி நிறுவனம் இந்த ஏர் காரை இந்தியாவில் அடுத்தாண்டு அறிமுகப்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வரும் என
எதிர்பார்க்கலாம். இந்த கார் குளோபல் ஸ்மால் எலெக்ட்ரிக் வெஹிகில் என்ற ஃபிளாட்பார்மில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்ம் மல்டி பாடி ஸ்டைலில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள காரிலிருந்து இதில் முக்கியமாக பேட்டரி மேலாண்மை சிஸ்டம் மேம்படுத்தப்படுகிறது. இந்தியாவின் கோடைக் காலத்தின் வெப்பத்தைத் தாங்கும் வகையில் இது உருவாக்கப்படவுள்ளது. இந்த கார் வூலிங் பேட்ஜ்ஜில் இருந்தாலும் இந்தியாவிற்குள் வரும் போது எம்ஜி பேட்ஜ் உடன் தான் இந்தியாவிற்கு வருகிறது.

இந்த காரின் டிசைன பொருத்தவரை கொஞ்சம் ஃபங்கி ஸ்டைலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் சிறியதாக, சிட்டிக்குள் பயணிக்க மட்டும் ஏற்றதாகவே வடிவமைக்கப்படவுள்ளது. பெரிய கதவுகளுடன் முன் சீட்டில் இருப்பவர்கள் ஏறி இறங்க வசதியாகக் கொடுக்கப்படவுள்ளது. இன் முன்பக்கத்தில் நீளமான லைட் பார் மற்றும் க்ரோம் பட்டைகள் சைடு மிரர் வரை கொடுக்கப்படும். இந்த டிசைன் எல்லாம் சர்வதேச மாடலில் இருக்கும் டிசைன்கள் தான்.

இந்த காரின் வீல்கள் ஸ்டீல் வீல்கள்தான் இருக்கிறது, இந்தியாவிற்குள் வரும் போது அலாய் வீல்களுடன் வரும் என எதிர்பார்க்கலாம். மேலும் காரின் உட்புறத்திலும் பல அப்டேட்கள் செய்யப்படவுள்ளன.

இந்த காரின் பேட்டரி கொள்ளளவு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பெரும்பாலும் 20-25 கிலோ வாட் ஹவர் வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த கொள்ளளவில் 150 கி.மீ வரை பயணிக்கும் என எதிர்பார்க்கலாம். இதில் உள்ள மோட்டாரை பொருத்தவரை 40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.


Click it and Unblock the Notifications








