மாருதி போட்ட பிரம்மாண்ட பிளான் எல்லாம் காலியாக போகுது... பிரம்மாஸ்திரத்தையே எம்ஜி கையில எடுத்துட்டாங்க...
எம்ஜி நிறுவனம் தனது ஹெக்டர் காரை அப்டேட் செய்து வருகிறது. இது வரும் 2023ம் ஆண்டு ரிலீஸ்க்கு திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்த விரிவான தெளிவான விபரங்களை இங்கே காணுங்கள்.

எம்ஜி நிறுவனம் ஹெக்டர் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த கார் தான் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே சிறப்பாக விற்பனையாகி வரும் கார். இந்நிலையில் எம்ஜி நிறுவனம் இந்த காரை அப்டேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

வரும் 2023ம் ஆண்டு இந்த அப்டேட் செய்யப்பட்ட கார் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படகிறது. இந்த கார் மார்கெட்டில் டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கும்.

எம்ஜி நிறுவனம் தற்போது ஹெக்டர் காரின் அப்டேட்டில் பல புதிய ஸ்டைலிங் அப்டேட்டகளை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காரின் முகப்பு பக்க கிரில், பம்பர் அப்டேட், புதிய ஹெட்லைட்கள் எனப் பல அப்டேட்களுடன் 2023ம் ஆண்டு ப்ரஷ் லுக்கில் விற்பனைக்கு வரவுள்ளன. இது போக முக்கிய பாதுகாப்பு அம்சமாக ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் பொருத்தப்படவுள்ளது.

இந்த காரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பொருத்தவரை வெர்டிகல் மவுண்டட் 14 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே பொருத்தப்படுகிறது. இது போக இதுவரை இல்லாத கலர் ஆப்ஷன்களும் இந்த அப்டேட்டில் சேர்க்கப்படவுள்ளன. அதே போல இந்த அப்டேட்டில் சில இன்ஜீன் ஆப்ஷன்களும் அப்டேட் செய்யப்படவுள்ளன. கியர் பாக்ஸ்களும் அதே மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கொடுக்கப்படவுள்ளது.

இன்ஜினை பொருத்தவரை 1.5 லி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 1.5 லி பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் ஆகிய3 இன்ஜின்
ஆப்ஷன்கள் வரவிருக்கின்றன. இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்படவுள்ளது.

இதில் 1.5 லி டர்போ மற்றும் 1.5 லி டர்போ ஹைபிரிட் பெட்ரோல் ஆகிய இன்ஜினை பொருத்தவரை 143 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், டீசல் இன்ஜினை பொருத்தவரை 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும், இதில் பெட்ரோல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஹைபிரிட் மற்றும் டீசல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது.

இது போக இந்த காரில் முக்கிய அம்சமாக புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், க்ரோம் அசெட்ஸ் கொண்ட டேஷ்போர்டுகள், வயர்லெஸ், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், புஷ் பட்டன் ஸ்டிராட், அடாப்டிப் ஹைட்லைட்கள், ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், கைடட் பார்க்கிங அசெட் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் இடம் பெறவுள்ளன.


Click it and Unblock the Notifications








