போட்டியே இல்ல... கெத்தாக விற்பனைக்கு வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

மினி எலெக்ட்ரிக் (Mini Electric) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

பிரபல பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனமான மினி (Mini) அதன் முதல் மின்சார காரை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மினி எலெக்ட்ரிக் (Mini Electric) எனும் பெயரில் அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. சர்வதேச சந்தையில் இக்கார் மினி கூப்பர் எஸ்இ (MINI Cooper SE) என்ற பெயரில் இக்கார் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை மினி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முதல் லாட்டில் 30 யூனிட் மினி எலெக்ட்ரிக் கார்களே இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான புக்கிங்குகளும் ஏற்கனவே முடிந்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

மினி நிறுவனம் மினி எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணியை கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் தொடங்கியது. இது தொடங்கப்பட்ட இரண்டு மணி நேரங்களிலேயே இந்தியர்கள் அனைத்தும் யூனிட்டுகளையும் புக் செய்துவிட்டனர். ரூ. 1 லட்சம் முன் தொகையில் புக்கிங் பணிகள் நடைபெற்றன.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

இத்தகைய அதிகபட்ச தொகையைச் செலுத்தியே பிரீமியம் கார் விரும்பிகள் மினி எலெக்ட்ரிக் காரை புக் செய்திருக்கின்றனர். இந்தியர்களின் இந்த செயல் இக்-கார் எப்போது விற்பனைக்கு எப்போது வருமோ என காத்திருந்து, அது வந்தவுடன் மிக தீவிரமாக செயல்பட்டு புக் செய்திருப்பதை காண்பிக்கின்றது. இந்த மாதிரயான சூழலால் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட முதல் லாட் மினி எலெக்ட்ரிக் அனைத்தும் விற்பனையாகியதாக மினி நிறுவனம் அறிவித்தது.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

விற்பனைக்கு வருவதற்கு முன்னரே மினி எலெக்ட்ரிக் காருக்கு இந்தியர்கள் மத்தியில் இந்தளவு வரவேற்பு கிடைத்திருப்பது நிறுவனத்திற்கு உற்சாகம் வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இக்காரை சிபியூ வாயிலாக நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அறிமுக விலையாக ரூ. 47,20,000 அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

மினி எலெக்ட்ரிக்-இல் பயன்படுத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 181 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன் 32.6 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன்-பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 270 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

இதுமட்டுமின்றி இந்த எலெக்ட்ரிக் கார் அதிக திறன் வாய்ந்த காராகவும் செயல்படும். ஆம், மினி எலெக்ட்ரிக்-இன் உச்சபட்ச வேகம் மணிக்கு 150 கிமீ ஆகும். இதுமட்டுமின்றி வெறும் 7.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் அது கொண்டிருக்கின்றது.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

பெட்ரோல் மாடலைக் காட்டிலும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் வந்திருக்கும் இந்த கார் அதிக எடையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. 145 கிலோ அதிக எடையை அதுக் கொண்டிருக்கின்றது. அதேநேரத்தில் வழக்கமான மினி காரைப் போலவே ஓர் கவர்ச்சியான தயாரிப்பாகவும் அது காட்சியளிக்கின்றது.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

மினி எலெக்ட்ரிக் ஓர் மூன்று கதவுகள் அமைப்புக் கொண்ட மின்சார காராகும். இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் 17 இன்ச் அலாய் வீல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப், யூனியன் ஜேக் தீமிலான எல்இடி டெயில்-லைட், வட்ட வடிவ ஓஆர்விஎம்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

அதேநேரத்தில் சில தனித்துவமான அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கின்றது. பெட்ரோல் வேரியண்டில் இருந்து மாறுபட்டு காணப்பட வேண்டும் என்பதற்காக இந்த மாற்றத்தை மினி வழங்கியிருக்கின்றது. அதாவது, காரின் குறிப்பிட்ட சில இடங்களில் 'இ' எனும் பேட்ஜ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

இது எலெக்ட்ரிக் என்பதை குறிக்கும். இத்துடன், புதிய முன்பக்க க்ரில் பேனலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் மினி எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்கும். ஒயிட் சில்வர், மிட்நைட் பிளாக், மூன் வால்க் கிரே மற்றும் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன் ஆகிய நிறங்களியே மினி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

போட்டியே இல்ல... கெத்தாக விற்பனை வந்தது மினி எலெக்ட்ரிக்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா அசந்துருவீங்க!

மினி எலெக்ட்ரிக் காரை 2.5 மணி நேரத்திலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு 11kW வசதிக் கொண்ட சார்ஜிங் பாயிண்ட் தேவைப்படும். இதைவிட வேகமாகவும் இக்காரை சார்ஜ் செய்ய முடியும். 50kW திறன் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் இக்காரை வெறும் 36 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். பிரீமியம் மற்றும் லக்சூரி அம்சங்கள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் விற்பனை இப்போதே கலைக்கட்டத் தொடங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 24, 2022, 13:31 [IST]
English summary
Mini electric launched in india at rs 47 20 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+