ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி! இந்த காரின் உச்ச வேகம் எவ்வளவுனு தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்திய கிரிக்கெட் வீரரர் முகமது ஷமி ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வாங்கியிருப்பது என்ன கார் மாடல், அதில் என்ன மாதிரியான சிறப்பு வசிகள் எல்லாம் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதி-வேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற புகழைக் கொண்டவர் முகமது ஷமி. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் வாயிலாக இந்த மகுடத்தை அவர் சூடினார். இவருக்கு வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயரும் உண்டு.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இத்தகைய கிரிக்கெட் வீரரே தனது அதி-வேகமான பயணத்திற்காக ஜாகுவார் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்டேரா சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட ஜாகுவார் எஃப்-டைப் ஸ்போர்ட்ஸ் (Jaguar F-Type Sports) காரையே கிரிக்கெட் வீரர் வாங்கியிருக்கின்றார். இந்த காரின் விலை ரூ. 98.13 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை கோடியை தொடும் என தகவல்கள் தெரிவிக்கன்றன.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஜாகுவார் நிறுவனம் இந்த காரை அதிக சொகுசான வாகனமாக மட்டுமே தயாரிக்கவில்லை. இக்காரை அதிக வேகத்தில் இயங்கும் வாகனமாகவும் ஜாகுவார் உருவாக்கியிருக்கின்றது. இதன் அதிக வேக திறனுக்காக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 295 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இக்காரில் வழங்கப்பட்டுள்ளது. இதைவிட கூடுதல் பவர்ஃபுல் வெர்ஷனிலும் ஜாகுவார் எஃப்-டைப் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வெர்ஷனில் 5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜட் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 445 பிஎச்பி பவரையும், 580 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Image courtesy: Amit Garg/Linkedin Page

இந்த இரு வெர்ஷன்களில் ஷமி வாங்கியிருப்பது எந்த வெர்ஷன் என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும், அவர் அதிக வேகத்தில் செல்லக் கூடிய வெர்ஷனையே வாங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாகுவார் எஃப்-டைப் உச்சபட்சமாக மணிக்கு 290 கிமீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஷமி மிக சமீபத்தில்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய கான்டினென்டல் ஜிடி 650 பைக்கை வாங்கியிருந்தார். ரூ. 3.32 லட்சம் மதிப்புள்ள உயர்நிலை வேரியண்டையே அவர் வாங்கினார். இந்த பைக்கிற்கு இந்தியா மற்றும் உலக நாடுகளில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இத்தகைய ஓர் பைக்கையே அண்மையில் வாங்கி ஷமி அவருடைய ஆதரவையும் அப்பைக்கிற்கு வழங்கினார். கான்டினென்டல் ஜிடி 650 ஓர் கஃப் ரேஸர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இப்பைக்கில், 648 சிசி ஃப்யூவல் இன்ஜெக்டட், 4 ஸ்ட்ரோக், பாரல்லல் ட்வின் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த மோட்டார் 47 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பரான பைக்கை வாங்கி சில வாரங்களே ஆகின்ற நிலையில் தற்போது புதிதாக சூப்பரான மற்றும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த ஜாகுவார் எஃப்-டைப் காரை ஷமி வாங்கியிருக்கின்றார்.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

பயணங்களின் போது களைப்பை ஏற்படுத்தாத சொகுசான இருக்கை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதை பல நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். இதைத்தொடர்ந்து, பிரீமியம் கேபின் உணர்வை வழங்கும் விதமாக டச் ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜாகுவார் காரை வாங்கிய ஷமி... இந்த கார் எவ்வளவு வேகத்துல போகும்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதன் வாயிலாக எக்கசக்க இணைப்பு வசதிகளை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இந்த தொடுதிரை 3டிமேப், என்டர்டெயின்மென்ட் ஆகிய வசதிகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்த்குந்தது. இத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகளும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இணைப்பு வசதியின் வாயிலாக காரை ரிமோட் வாயிலாக கன்ட்ரோல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Article Published On: Saturday, July 23, 2022, 11:14 [IST]
English summary
Mohammad shami buys jaguar f type sports car
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+