செகண்ட் ஹேண்ட் கார் டீலர்களுக்கு ஆப்பு! இனி மக்கள் ஏமாறாம இருக்க புது ரூல்ஸ் வந்தாச்சு!
பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டில் விற்பனைக்கு வரும் கார்களின் வர்த்தகத்தில் டிரான்ஸ்பரன்ஸி குறித்து மத்திய அரசு புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இன்று பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய மார்கெட் வந்துவிட்டது. புதிய கார்கள் எவ்வளவு அதிகமாக விற்பனையாகிறதோ அதற்குச் சமமாகப் பயன்படுத்தப்பட்ட கார்களும் விற்பனையாகிறது. இவ்வளவு பெரிய சந்தை ஒரு காலத்தில் ஆங்காங்கே உள்ள சிறு சிறு வணிகர்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதில் கார்பரேட் நிறுவனங்களே இறங்கிவிட்டனர். பல நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படியாக செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்யப்படுவதில் ஏகப்பட்ட பித்தலாட்டங்கள் நடக்கிறது. பலர் பல்வேறு விதிகளைச் சொல்லி கார்களை விற்பனை செய்பவரையும், வாங்குபவரையும் ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தடுக்க வேண்டும் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் வெளிப்படையான தன்மை வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை தற்போது 1989 மோட்டார் வாகன சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளனர் அதன்படி வரும் 2023ம் ஆண்டு ஏப்1ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளனர். இந்த விதிமுறைகளால் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்வதில் ஒழிவு மறைவு இல்லாத வர்த்தகம் நடை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய விதிகளின் படி செகண்ட் ஹேண்டில் கார்களை வாங்கி விற்பனை செய்யும் டீலர்களுக்கான சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டீலர்களுக்கும், வாகனத்தின் உரிமையாளர்களுக்குமான உறவு எப்படியாக இருக்க வேண்டும் எனத் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஒரு டீலர் காரை ஓனரிடமிருந்து வாங்கிவிட்டால் டீலருக்கு அந்த கார் மீதான உரிமை என்ன என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
கார் ஓனர்களிடமிருந்து டீலருக்கு கார் சென்றுவிட்டால் டீலர்களே அந்த காருக்கான பதிவுச் சான்று புதுப்பித்தல்,ஃபிட்னஸ் சான்று புதுப்பித்தல், டுப்ளிகேட் பதிவுச் சான்று, தடையில்லா சான்று, வாகனத்திற்கான உரிமையாளர் மாற்று உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். இதுபோக எலெக்ட்ரானிக் ட்ரிப் மீட்டர் காராக இருந்தால் அதில் வாகனத்தின் ட்ரிப் மீட்டரை பதிவு செய்து பராமரிக்க வேண்டியது டீலரின் பொறுப்பு தான். இதை வைத்து வாகனத்தின் மைலேஜ், எவ்வளவு தூரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாகனத்தின் பயன்பாடு உள்ளிட்ட விபரங்களைச் சோதனை செய்ய முடியும்.
வாகனம் டீலரிடமிருக்கும் போது ஏதாவது சேதாரம் அல்லது வாகனத்தின் சான்று தொலைந்து போதல் ஆகியவை நடந்தால் அதற்கு அந்த வாகனத்தை வைத்திருக்கும் டீலர் தான் பொறுப்பாவார். என்றும் இந்த புதிய விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் இனி செகண்ட் ஹேண்டில் கார்களை விற்பனை செய்பவர்கள், ஏமாற்றி கார்களை வாங்கவோ விற்கவோ, அதே நேரம் கார்கள் டீலரிடம் இருக்கும் போது அதை முறைகேடாகப் பயன்படுத்தவோ முடியாது.
இதன் மூலம் செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனை சந்தையில் ஒரு நல்ல டிரான்ஸ்பரன்ஸி ஏற்பட்டுள்ளது. இனி செகண்ட் ஹேண்டில் கார் வாங்கும் போது மக்கள் நம்பிக்கையுடன் காரை வாங்கலாம். விற்பவர்களும் பயம் இல்லாமல் விற்பனை செய்யலாம். ஆனால் இந்த துறையில் மேலும் பல மாற்றங்கள் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








