அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் கடந்த 2020 ஏப்ரலில் நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியாவில் விற்பனையில் உள்ள டீசல் கார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அதேநேரம் வாடிக்கையாளர்கள் மத்தியில் டீசல் கார்களுக்கான தேவையும் கடந்த சில வருடங்களில் அதிகரித்துள்ளது.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

குறிப்பாக, அதிக மைலேஜ் வழங்கக்கூடிய டீசல் கார்களையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர். அத்தகைய டீசல் கார்களில் முக்கியமான ஐந்தினை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

1. ஹூண்டாய் வெர்னா டீசல்

இந்தியாவில் டீசல் என்ஜின் உடன் விற்பனையாகும் மிகவும் சில செடான் கார்களுள் ஹூண்டாய் வெர்னாவும் ஒன்று. ஹூண்டாய் க்ரெட்டா, செல்டோஸ் மற்றும் வென்யூவில் வழங்கப்படும் அதே 1.5 லிட்டர் யு2 சிஆர்டிஐ டீசல் என்ஜின் தான் வெர்னாவிலும் பொருத்தப்படுகிறது.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

டிரான்ஸ்மிஷனுக்கு இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வெர்னாவில் வழங்கப்படுகின்றன. இவற்றின் உதவியுடன் இந்த ஹூண்டாய் செடான் காரில் அதிகப்பட்சமாக 25kmpl வரையிலான மைலேஜை பெறலாம். வெர்னா டீசல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.11 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

2. ஹூண்டாய் ஐ20 டீசல்

ஐ20, இந்தியாவில் தற்போதைக்கு கிடைக்கும் மலிவான டீசல் கார்களுள் முதன்மையானது. இந்த காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் உடன் விற்பனையில் போட்டி போட்டுவரும் ஐ20 மாடலின் டீசல் வேரியண்டின் அதிகப்பட்ச மைலேஜ் 25kmpl ஆகும்.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

ஐ20 டீசல் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.33 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. பெட்ரோல் என்ஜினுடன் விற்பனையில் உள்ள ஐ20 கார் கடந்த 2022 ஜூன் மாதத்தில் மொத்தம் 7,921 யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை ஆனது 2021 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஐ20 கார்களை காட்டிலும் 25% அதிகமாகும்.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

3. ஹோண்டா அமேஸ்

இந்திய சந்தையில் டீசல் என்ஜின் உடன் விற்பனையில் இருக்கும் ஒரே காம்பெக்ட் செடான் கார். ரூ.8.90 லட்சம் என்கிற ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் அமேஸ் டீசல் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

அதிகப்பட்சமாக இந்த டீசல் என்ஜின் 100 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் அதிகப்பட்சமாக 24.7kmpl மைலேஜை பெற முடியும்.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

4. ஹோண்டா சிட்டி

விலை சற்று அதிகமாக இருப்பினும் இந்தியர்கள் பலரது கனவு வாகனமாக பல ஆண்டுகளாக விளங்கி வருவது ஹோண்டா சிட்டி ஆகும். இதற்கேற்ப பிரீமியம் தரத்திலான தோற்றம் மற்றும் சவுகரியமான அம்சங்களுடன் வடிவமைக்கப்படும் சிட்டி செடான் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினும் வழங்கப்படுகிறது.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

இந்த டீசல் என்ஜின் உடன் இப்போதைக்கு ஒரேயொரு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றின் மூலம் கிடைக்கும் அதிகப்பட்ச மைலேஜ் ஆனது 24.1kmpl ஆகும். சிட்டி டீசல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.13.06 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

5. கியா சொனெட்

சொனெட், கியா இந்தியா நிறுவனத்தின் பயணிகள் கார்கள் வரிசையில் தற்போதைக்கு விலை குறைந்த காராக விளங்குகிறது. ஏனெனில் இதன் தோற்றமானது அளவில் சற்று சிறியதாக காம்பெக்ட் எஸ்யூவியாக உள்ளது. இதில் வழங்கப்படும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் என்ஜின் உடன் மேனுவல் & ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்படுகின்றன.

அதிக மைலேஜ் கிடைக்கனுமா? மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள இந்த டீசல் கார்களை பாருங்க!!

இதில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் அதிகப்பட்சமாக 24.1kmpl மைலேஜ் வரையில் சொனெட் டீசல் கார் வழங்குகிறது. டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார்களின் விற்பனை போட்டியினை சமாளித்துவரும் கியா சொனெட்டின் டீசல் வேரியண்ட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.88 லட்சமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2022, 11:41 [IST]
English summary
Most fuel efficient diesel cars in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+