காரோட விலை ரூ.13 கோடி! பதிவு எண் 12 லட்ச ரூபா... மயக்கம் வர வைக்கும் அம்பானியின் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்!
ரூ. 13.14 கோடி விலையுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) சொகுசு காரை முகேஷ் அம்பானி வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக அறியப்படுபவர் முகேஷ் அம்பானி. இவரிடத்தில் ஏற்கனவே எண்ணற்ற விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் முகேஷ் அம்பானி பெயரில் தற்போது புதிதாக ஓர் சொகுசு கார் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிக விலையுயர்ந்த சொகுசு காராக ரோல்ஸ் ராய்ஸ் கல்லின் (Rolls Royce Cullinan) இருக்கின்றது. இது ஓர் அதிக லக்சூரி அம்சங்கள் கொண்ட எஸ்யூவி காராகும். இந்த காரையே முகேஷ் அம்பானி புதிதாக வாங்கியிருக்கின்றார். இந்த காரின் விலை ரூ. 13.14 கோடிகள் ஆகும். இத்தகைய மிக மிக விலையுயர்ந்த சொகுசு காரையே அவர் புதிதாக வாங்கியிருக்கின்றார்.

கடந்த ஜனவரி 31ம் தேதி அன்று இந்த காரின் பதிவு பணிகள் நடைபெற்றிருக்கின்றன. தெற்கு மும்பையில் உள்ள டர்டியோ ரீஜியினல் டிரான்ஸ்போர்ட் (Tardeo Regional Transport) அலுவலகத்திலேயே ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries) பெயரில் இக்கார் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

புத்தாண்டில் தனது கராஜை அலங்கரிக்கும் விதமாக இந்த காரை அவர் வாங்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதன் கல்லினன் சொகுசு எஸ்யூவி காரை 2018ம் ஆண்டில் முதல் முறையாக நாட்டில் அறிமுகம் செய்தது. அப்போது ஆரம்ப நிலை தேர்விற்கு ரூ. 6.95 கோடி என விலை நிர்ணயிக்கப்பட்டது.

சில கஸ்டமைசேஷன்களுடன் இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. ஆகையால், இதன் பின்னர் விற்கப்படும் கார், மேலே பார்த்ததைக் காட்டிலும் மிக மிக அதிக விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும். இத்தகைய ஓர் அதீத விலைக் கொண்ட காரையே முகேஷ் அம்பானி தற்போது புதியதாக வாங்கியிருக்கின்றார்.

டஸ்கன் சன் (Tuscan Sun) நிறம் கொண்ட கல்லின் காரையே முகேஷ் அம்பானி வாங்கியிருக்கின்றார். இந்த காரில் 12 சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 564 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இந்த காரின் ஒட்டுமொத்த எடை 2.5 டன்னாகும்.

இத்தகைய காரிலேயே மிக விரைவில் முகேஷ் அம்பானி வலம் வர இருக்கின்றார். இக்காருக்கு ஒன் டைம் டேக்ஸாக ரூ. 20 லட்சம் செலுத்தியிருப்பதாக ஆர்டிஓ அலுவலக வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த பதிவு 2037 ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். இத்துடன், சேர்த்து அவர் சாலை பாதுகாப்பு வரியாக ரூ. 40 ஆயிரம் வரை செலுத்தியிருக்கின்றார்.

இதுமட்டுமின்றி காரின் பதிவிற்காக இன்னும் சில லட்சங்களை அம்பானி வாரி இறைத்திருக்கின்றார். ரூ. 12 லட்சம் எனும் உச்சபட்ச விலையேயே அவர் கூடுதலாக செலவு செய்திருக்கின்றார். விஐபி பதிவெண்ணை பெறுவதற்காகவே இந்த அதிகபட்ச தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. 0001 என முடியும் எண்ணை அவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக விஐபி நம்பர்களுக்கு ரூ. 4 லட்சமே கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. ஆனால், முகேஷ் அம்பானி தற்போது தேர்வு செய்திருக்கும் எண் புதிய தொடரைக் கொண்டதாக இருக்கின்றது. 0001 என்ற எண் எந்த சீரிஸிலும் இல்லாத பட்சத்தில், அம்பானிக்காகவே பிரத்யேகமாக புதிய தொடரின் வாயிலாக பதிவெண் வழங்கப்பட இருக்கின்றது. இதன் காரணத்தினால்தான் இன்னும் பல லட்சங்கள் இதற்கு கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கின்றது.

போக்குவரத்து ஆணையரின் எழுத்துபூர்வ அனுமதியுடன் ஆர்டிஓ அலுலகத்தால் புதிய பதிவு எண் தொடர்களை தொடங்க முடியும். இதற்கு விண்ணப்பதாரர் வழக்கமான விஜபி எண்ணிற்கு செலுத்த வேண்டியதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக கட்டணம் வழங்க வேண்டும். எனவேதான், முகேஷ் அம்பானி கோரிய 0001 இல்லாத நிலையிலும் மும்மடங்கு அதிக கட்டணத்துடன் தற்போது புதிய சீரிஸ்கள் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக அவர் கேட்ட பதிவெண் வழங்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்றதாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, கரடு-முரடான சாலைகளில் இந்த வாகனத்தில் பயணத்தில் சிறிதளவும் அசௌகரியமான உணர்வு பயனர்களுக்கு ஏற்படாது. ஓர் கப்பலில் செல்வது போன்ற அனுபவம் இக்காரில் கிடைக்கும். எனவேதான் செல்வந்தர்கள் பலர் இக்காரை தேர்வு செய்து வருகின்றனர்.

இதுபோன்ற காரணங்களினாலயே முகேஷ் அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரை தற்போது வாங்கியிருக்கின்றார். ஏற்கனவே அவரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் பல இருக்கின்ற போதிலும் தற்போது புதியதாக ரூ. 13.14 கோடி விலையுள்ள கல்லினன் எஸ்யூவி காரை முகேஷ் அம்பானி வாங்கியிருக்கின்றார். இந்தியாவில் இன்னும் பலர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்தவர்களே அதிகம் இக்காரை பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications








