கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

கியா செல்டோஸ் காரின் விற்பனை தூள் கிளப்பி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

இந்திய சந்தையில் கியா செல்டோஸ் கார் கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. நமது சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த முதல் கார் இதுதான். அதிநவீன வசதிகள், பல்வேறு இன்ஜின் தேர்வுகள் மற்றும் சவாலான விலை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களால் விற்பனைக்கு வந்த உடனேயே கியா செல்டோஸ் இந்தியாவில் பிரபலமானது.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

தற்போதும் கூட வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக கியா செல்டோஸ் திகழ்கிறது. கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் 98,147 கியா செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அதற்கு முந்தைய 2020ம் ஆண்டில் கியா நிறுவனம் இந்திய சந்தையில் 96,932 செல்டோஸ் கார்களை விற்பனை செய்திருந்தது.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

இதன் மூலம் கியா செல்டோஸ் இந்திய சந்தையில் 1.25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கிட்டத்தட்ட தலா 1 லட்சம் செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை என்பதில் சந்தேகமில்லை.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

கியா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகிய மூன்று கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தைக்கான தனது நான்காவது தயாரிப்பை கியா நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. கியா கேரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

கியா கேரன்ஸ் காரை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம். இந்த காரின் பல்வேறு அம்சங்கள் எங்களை வெகுவாக கவர்ந்தன. குறிப்பாக மூன்றாவது வரிசை இருக்கைகளின் இடவசதி எங்களை அதிகமாக கவர்ந்தது. பொதுவாக மூன்று வரிசை கொண்ட பெரும்பாலான கார்களில், மூன்றாவது வரிசையில் போதிய அளவிற்கு இடவசதி இருக்காது.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

சிறியவர்கள் கூட இங்கே அமர்வதற்கு சிரமப்படுவார்கள். ஆனால் கியா கேரன்ஸ் கார் இதற்கு நேர் எதிராக உள்ளது. கேரன்ஸ் காரின் மூன்றாவது வரிசையிலும் கியா நிறுவனம் நல்ல இடவசதியை வழங்கியுள்ளது. எனவே கியா கேரன்ஸ் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன. தற்போதைக்கு இந்த காரை பற்றி நமக்கு தெரியாத ஒரு விஷயம் விலை மட்டுமே.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

விலையை மட்டும் கியா நிறுவனம் சரியாக நிர்ணயம் செய்து விட்டால், கேரன்ஸ் கார் நிச்சயமாக விற்பனையில் சாதிக்கும். கியா கேரன்ஸ் காருக்கு ஏற்கனவே முன்பதிவுகள் தொடங்கப்பட்டு விட்டன. விரைவாக டெலிவரி பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் தற்போதே இந்த காரை ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

புக்கிங் தொடங்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திற்குள்ளாகவே கியா கேரன்ஸ் காரை 7,738 பேர் முன்பதிவு செய்து விட்டனர். விலை எவ்வளவு? என்பது தெரிவதற்கு முன்பாகவே, அதுவும் வெறும் 24 மணி நேரத்திற்குள் சுமார் 8 பேர் முன்பதிவு கியா கேரன்ஸ் காரை முன்பதிவு செய்திருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

கியா கேரன்ஸ் காரை இந்திய வாடிக்கையாளர்கள் எவ்வளவு ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. கியா கேரன்ஸ் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. அத்துடன் இந்தியாவில் உள்ள கியா டீலர்ஷிப்களுக்கு கேரன்ஸ் கார்கள் வரவும் தொடங்கி விட்டன. இது நமக்கு முக்கியமான விஷயம் ஒன்றை உணர்த்துகிறது.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

கியா கேரன்ஸ் கார் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதைதான் இவை அனைத்தும் நமக்கு உணர்த்துகின்றன. நடப்பு பிப்ரவரி மாதத்தில் கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வாடிக்கையாளர்களின் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது.

கியா செல்டோஸ் விற்பனை தூள் கௌப்புது... போன வருஷம் எவ்ளோ கார் சேல்ஸ் ஆயிருக்குனு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க!

கியா நிறுவனம் வரும் காலங்களில் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது இங்கு எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. அனேகமாக செல்டோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை கியா நிறுவனம் இங்கு தனது முதல் எலெக்ட்ரிக் காராக விற்பனைக்கு அறிமுகம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 3, 2022, 22:38 [IST]
English summary
Nearly 1 lakh units of kia seltos sold in 2021 here are all the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+