2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள 2022 பலேனோ கார் குறித்த புதிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை முழுமையாக இனி தொடர்ந்து பார்ப்போம்.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

புதிய தலைமுறை செலிரியோவை தொடர்ந்து மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து அடுத்ததாக பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் நடைபெற்றுவரும் நிலையில், புதிய பலேனோ கார் தொடர்பான டீசர் ஒன்றினை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தது.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

இந்த நிலையில் தற்போது பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான புதிய விபரங்கள் ரஷ்லேன் செய்தித்தளம் மூலமாக வெளிவந்துள்ளன. இந்த விபரங்களின்படி புதிய பலேனோ மாடல் "புதிய ஏஜ் பலேனோ" என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதை முதலாவதாக அறிய முடிகிறது. அதனை தொடர்ந்து இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கொண்டுவரப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

மாருதி சுஸுகியின் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ அதன் புதிய அவதாரத்தில் சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்ஃபா என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிக்மாவை தவிர்த்து மற்ற மூன்றும் மேனுவல் (அ) ஆட்டோமேட்டிக் தேர்வில் கிடைக்குமாம்.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

Source: Rushlane

ஆனால் விலை குறைவான, ஆரம்ப நிலை சிக்மா வேரியண்ட்டை மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் யூனிட்டாக மலிவான ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லையாம். அதேபோல் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாக உள்ளது.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

மேலும் தற்போது கசிந்துள்ள இந்த விபரங்களில் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காருக்கான புதிய நிறத்தேர்வுகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதன்படி, பேர்ல் ஆர்டிக் வெள்ளை, ஸ்ப்லெண்டிட் சில்வர், கிராண்டியர் க்ரே, செலஸ்டியல் நீலம், ஆபுலெண்ட் சிவப்பு மற்றும் லக்ஸ் பழுப்பு என்கிற 6 விதமான கவர்ச்சிக்கரமான நிறத்தேர்வுகள் புதிய பலேனோவிற்கு வழங்கப்பட உள்ளன.இவை அனைத்து மெட்டாலிக் ஷேடில் கொடுக்கப்பட உள்ளனவாம்.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

பெயருக்கு ஏற்ப ‘புதிய ஏஜ் பலேனோ' அதிநவீன தொழிற்நுட்பங்களை கொண்ட பிரீமியம் ஹேட்ச்பேக் காராக விளங்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த புதிய மாருதி ஃபேஸ்லிஃப்ட் காருக்கான முன்பதிவுகள் ரூ.11,000 என்கிற டோக்கன் தொகை உடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களமிறக்கப்படும் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் இதற்கு முன் சிலமுறை சோதனை ஓட்டங்களிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

அப்போது கிடைக்க பெற்றிருந்த ஸ்பை படங்களின் மூலமாக புதிய பலேனோவின் வெளிப்புறம் எத்தகைய தோற்றத்தில் இருக்கும் என்பது ஓரளவிற்கு ஐடியா கிடைத்தது. முன்பக்கத்தில் இருந்து ஆரம்பித்தோமேயானால், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் முக்கியமான அப்கிரேட்களை பலேனோ அதன் முன்பக்கத்திலேயே பெற்றுவரவுள்ளது. இதன்படி, ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் சற்று பின்னோக்கி வளைக்கப்பட்ட பிரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் இந்த காரில் வழங்கப்பட உள்ளன.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

அப்டேட் செய்யப்பட்ட வடிவில் எதிர்பார்க்கப்படும் முன் பம்பரில் சற்று அகலமான ஏர் டேம் கொடுக்கப்படலாம். அத்துடன் பம்பரின் இரு முனைகளில் வழங்கப்படும் ஃபாக் விளக்குகளுக்கான குழிகளின் வடிவமும் மாற்றியமைக்கப்பட உள்ளது. இவற்றுடன் பலேனோவின் முன் பொனெட்டிலும் மாருதி சுஸுகி நிறுவனம் கை வைக்கலாம். இம்முறை சற்று தட்டையான பொனெட்டை எதிர்பார்க்கிறோம். சமீபத்திய அறிமுகமான புதிய செலிரியோவின் பொனெட்டின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

பின்பக்கத்தில் புதிய டிசைனிலான பின்கதவு மற்றும் புதிய எல்இடி உட்பாகங்களுடன் புதிய கூர்மையான டெயில்லேம்ப்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்றால் காரின் பக்கவாட்டு பகுதி பெரியதாக அப்டேட் செய்யப்படாது. இருப்பினும் புத்துணர்ச்சியான முன் & பின்பக்கத்தின் மூலமாக புதிய பலேனோ வாடிக்கையாளர்களை கவரும் என மாருதி சுஸுகி நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குறதுனு முடிவு பண்ணியாச்சா? மொத்தம் 4 வேரியண்ட்களில்!!

முன்பை காட்டிலும் மாருதி சுஸுகி பலேனோ காரின் தோற்றத்தில் மாற்றம் இருக்கும் என்பது மட்டுமின்றி சற்று விரைப்பான ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதால், காரின் தரம் மற்றும் பாதுகாப்பும் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இத்தகைய அப்டேட்களுக்கு ஏற்ப புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 9, 2022, 7:30 [IST]
English summary
New 2022 maruti suzuki baleno variant and color options revealed details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+