வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

இதுவரையில் இல்லாத வகையில் வெள்ளை நிறத்தில் 2022 மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று பொது இடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய முற்றிலும் அப்டேட் செய்யப்பட்ட பலேனோ ஹேட்ச்பேக் காரை இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கிடையில் புதிய பலேனோ கார்களுக்கான முன்பதிவுகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூம் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.11,000 என்கிற டோக்கன் தொகையுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். 'நியூ ஏஜ் பலேனோ' என்கிற பெயரில் புதிய பலேனோ காரின் அறிமுகம் வருகிற பிப்.23ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

இதற்கிடையில் பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டதை இதற்குமுன் பார்த்துள்ளோம். இந்த வகையில் தற்போது மீண்டும் அறிமுகத்திற்கு முன்னதாக புதிய பலேனோவின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இம்முறை சோதனை ஓட்டத்திற்காக இல்லாமல் தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோவிற்காக 2022 பலேனோ கார் ஒன்று வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

Source: PowerDrift

புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான சில டீசர் வீடியோக்கள் கடந்த வாரங்களில் மாருதி சுஸுகியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடப்பட்டன. ஆனால் அவற்றில் எதிலிலும் இந்த ஃபேஸ்லிஃப்ட் ஹேட்ச்பேக் காரின் தோற்றம் வெளிக்காட்டப்படவில்லை. குறிப்பாக, புதிய பலேனோவின் முன்பக்க & பின்பக்க டிசைனை இன்னமும் தயாரிப்பு நிறுவனம் இரகசியமாகவே பாதுகாத்து வருகிறது.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

ஏனெனில் இம்முறை பலேனோவின் முன்பக்கத்திலும் மற்றும் பின்பக்கத்திலும் தான் முக்கியமான அப்கிரேட்களை மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுவர உள்ளது. இதனாலேயே தற்போது நமக்கு பவர்ட்ராஃப்ட் செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களிலும் பலேனோவின் முன்பக்கம் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

இந்த முறை பலேனோவின் முன்பக்கம் சிரிப்பது போன்றதான முன்பக்கத்தை பெற்றுவரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வகையில் அகலமான & பெரியதான கருப்பு நிற க்ரில் அமைப்பு மற்றும் டிஆர்எல்-களுடன் பக்கவாட்டிற்கும் சேர்த்து வளைக்கப்பட்ட பிரோஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்களை இந்த காரின் முன்பக்கம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

அத்துடன் பம்பரின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதனால் பம்பரில் பொருத்தப்படும் ஃபாக் விளக்குகளுக்கான குழிகளையும் வித்தியாசமான வடிவத்தில் எதிர்பார்க்கிறோம். பொனெட் இன்னும் தட்டையானதாக இந்த ஸ்பை படங்களில் காட்சியளிக்கிறது. இதேபோல் பின்பக்கத்திலும் புதிய உள்ளீடுகளுடன் L-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள் உள்பட சில அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

இதன்படி, பின்பக்க கதவின் வடிவத்திலும், பம்பரின் வடிவத்திலும் மாருதி சுஸுகி நிறுவனம் கை வைத்திருக்கலாம். மற்றப்படி பலேனோவின் பக்கவாட்டில் பெரியதாக மாற்றம் இருக்காது என்றாலும், ஹெட்லேம்ப்கள் & டெயில்லேம்ப்களின் வடிவம் மாற்றப்படுவதால் முன் & பின்பக்க ஃபெண்டர்களின் வடிவம் மாற்றப்படலாம்.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

அத்துடன் புதிய நிறத்தேர்வுகளையும் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவர மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பேர்ல் ஆர்டிக் வெள்ளை, ஸ்ப்லெண்டிட் சில்வர், கிராண்டியூர் க்ரே, செலெஸ்டியல் நீலம், உமிழும் நெருப்பின் சிவப்பு மற்றும் லக்ஸ் பழுப்பு என்கிற நிறத்தேர்வுகள் வழங்கப்பட உள்ளனவாம்.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு டீசல் என்ஜின் இல்லாமல் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய பலேனோவில் 1.2 லிட்டர் ட்யுல்ஜெட் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட உள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

வெள்ளை நிறத்திலும் வருகிறதா!! 2022 மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் - ஸ்பை படங்கள்!

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் & 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படலாம். சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்ஃபா என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் 2022 பலேனோ ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவை தவிர்த்த பிற முக்கிய விபரங்களுக்கு காரின் அறிமுகம் வரையில் காத்திருந்தாக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 14, 2022, 17:13 [IST]
English summary
New age maruti baleno caught in camera during tvc shoot
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+