இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

அடுத்த 10 நாட்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள 3 புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

இந்திய சந்தையில் அடுத்த 10 நாட்களுக்குள் 3 முக்கியமான புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த 3 கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த 3 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

2022 ஹூண்டாய் டூஸான் (2022 Hyundai Tucson)

அப்டேட் செய்யப்பட்ட 2022 ஹூண்டாய் டூஸான் கார் இந்திய சந்தையில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி (August 10) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross) போன்ற பிரீமியம் எஸ்யூவி கார்களுடன் ஹூண்டாய் டூஸான் போட்டியிடும்.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

முன்பை காட்டிலும் தற்போது இன்னும் பிரீமியமாக ஹூண்டாய் டூஸான் கார் மெருகேற்றப்பட்டுள்ளது. 2022 ஹூண்டாய் டூஸான் கார் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். அத்துடன் லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) உள்பட ஏராளமான வசதிகளையும் 2022 டூஸான் காரில், ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

ஹூண்டாய் நிறுவனம் புதிய டூஸான் காரை தொடர்ந்து, இன்னும் பல்வேறு கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், க்ரெட்டா மிட்-சைஸ் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல், கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றவை மிகவும் முக்கியமானவை.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder)

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் (Skoda Kushaq) போன்ற கார்களுடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போட்டியிடும்.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் K15C மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் என டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில், 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க கூடிய டிசைன் மற்றும் வசதிகளையும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் பெற்றுள்ளது. இந்த கார் வரும் ஆகஸ்ட் 16ம் (August 16) தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை தொடர்ந்து, இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) கார் விற்பனைக்கு வரவுள்ளது. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காருக்கு இந்திய சந்தையில் தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (2022 Maruti Suzuki Alto K10)

இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்தபோது, மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது. தற்போது ஆல்டோ கே10 காரை இந்தியாவில் ரீ-லான்ச் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தயாராகி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி (August 18) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

2022 மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரில், புதிய 1.0 லிட்டர் K10C பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் ரெனால்ட் க்விட் (Renault Kwid) போன்ற கார்களுடன் புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 கார் போட்டியிடும். புதிய ஆல்டோ கே10 காரின் வருகை, டாடா டியாகோ மற்றும் ரெனால்ட் க்விட் கார்களின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இன்னும் பத்தே நாள்தான் இருக்கு... எல்லாருக்கும் பிடிச்ச மாருதி ஆல்டோ கே10 திரும்ப வருது... டாடா கார் தாங்குமா?

மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஆல்டோ கே10 காருக்கு அடுத்தபடியாக, ஏற்கனவே குறிப்பிட்டதை போல் கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்விஃப்ட் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் என ஏராளமான கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. எனவே புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு கொண்டாட்டம்தான்!

Most Read Articles
English summary
New car launches in next 10 days
Story first published: Monday, August 8, 2022, 15:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X