புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna). இது செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் வெர்னா செடான் கார் மிகப்பெரிய அப்டேட்டிற்காக நீண்ட காலமாக காத்து கொண்டுள்ளது. எனவே புதிய தலைமுறை (New-gen) வெர்னா செடான் காரை ஹூண்டாய் நிறுவனம் வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவது ஐந்தாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் ஆகும். இந்த கார் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஹோண்டா சிட்டி (Honda City), ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இதில், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகிய 2 கார்களும் புதுவரவுகள் ஆகும். எனவே போட்டி அதிகரித்து கொண்டு வருவதையும் மனதில் வைத்து, வெர்னா காரின் புதிய தலைமுறை மாடலை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரவுள்ள 6வது தலைமுறை ஹூண்டாய் வெர்னா பற்றிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் பிஎன்7 (BN7) என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய தலைமுறை மாடல் முற்றிலும் புதிய டிசைனை பெறவுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் 'Sensuous SPortiness' டிசைன் மொழியை இது கொண்டிருக்கும். இதன்படி புதிய பெரிய க்ரில் அமைப்பு, புதிய ஹெட்லேம்ப்கள் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இதுதவிர புதிய டெயில்லைட்கள், அப்டேட் செய்யப்பட்ட பம்பர்கள், புதிய கலர் ஆப்ஷன்கள் ஆகியவையும் வழங்கப்படலாம். உட்புறத்தை பொறுத்தவரை புதிய டேஷ்போர்டு, பல்வேறு புதிய வசதிகள் மற்றும் விசாலமான கேபின் ஆகியவை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது புதிய மாடலில் கேபின் அனுபவம் சிறப்பாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இரண்டாவது வரிசை இருக்கைகளிலும் உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கலாம். மேலும் புதிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகளும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனைத்து இன்ஜின்களுடனும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

கூடுதலாக 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஹூண்டாய் நிறுவனம் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை வெர்னா செடான் கார் இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு வரும்? என்பதை ஹூண்டாய் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

ஆனால் 2023ம் ஆண்டின் ஏதாவது ஒரு சமயத்தில் ஹூண்டாய் வெர்னா செடான் காரின் புதிய தலைமுறை மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் பிஸியாக செயல்பட்டு கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

வரும் மாதங்களில் ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து ஏராளமான புதிய கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளன. இதில், ஹூண்டாய் வெனியூ என் லைன் (Hyundai Venue N-Line), ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta Facelift) ஆகிய கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா அறிமுகம் எப்போது? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

இதுதவிர ஹூண்டாய் ஐயோனிக்5 (Hyundai Ioniq 5) மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Kona Electric Facelift) ஆகிய கார்களும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. இந்த 4 கார்களையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Note: Images used are for representational purpose only.

Article Published On: Wednesday, August 31, 2022, 15:23 [IST]
English summary
New gen hyundai verna sedan india launch details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+