இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... அட்டகாசமா இருக்கே!

விரைவில் வெளியீட்டை பெற இருக்கும் 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ (2022 Mahindra Scorpio) காரின் உட்பக்க படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் அதன் 2022 ஸ்கார்பியோ (2022 Mahindra Scorpio) காரை உலகளவில் வெளியீடு (அறிமுகம்) செய்ய இருக்கின்றது. புதிய தலைமுறையாக இக்காரை உருவாக்கியிருப்பதால் மஹிந்திரா நிறுவனம் எண்ணற்ற புதிய சிறப்பம்சங்களை சேர்த்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது 2022 ஸ்கார்பியோ குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

அந்தவகையில், தற்போதும் ஓர் புதிய தகவல் 2022 ஸ்கார்பியோ பற்றி வெளியாகியுள்ளது. இம்முறை புதிய தலைமுறை ஸ்கார்பியோவின் இன்டீரியர் படங்கள் கசிந்துள்ளன. அதாவது, காரின் உட்பகுதி எப்படி இருக்கும்?, என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றது என்பதை விளக்கக் கூடிய தகவல்கள் புகைப் படங்களாக வெளியாகியுள்ளன.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

பழைய தலைமுறை (தற்போது விற்பனையில் இருக்கும்) ஸ்கார்பியோவைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாக 2022 ஸ்கார்பியோ உருவாகியிருப்பதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த படங்கள் அமைந்துள்ளன.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காருக்கு விரைவில் 20 ஆம் ஆண்டு விழாவை கொண்டாட இருக்கின்றது. வரும் ஜுன் மாதமே இந்த நிகழ்வு அரங்கேற இருக்கின்றது. அன்றைய தினத்தில் புதிய அம்சங்களுடன் உருவாகியிருக்கும் 2022 ஸ்கார்பியோ வெளியீட்டைப் பெறலாம் என நம்ப தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை நிறுவனம் சார்பில் வெளியிடப்படவில்லை.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

அதேவேலையில், அதி-தீவிரமான சாலை பரிசோதனைகளுக்கு இக்கார் உட்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், கூடிய விரைவில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ வெளியீட்டை பெற்றுவிடும் என அசைக்க முடியா நம்பிக்கையில் ஸ்கார்பியோ கார் பிரியர்கள் உள்ளனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பரிசோதனையில் ஈடுபட்டு வந்த ஸ்கார்பியோவின் உட்பகுதி படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

இந்த படங்களின் வாயிலாக 2022 ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி700 கார் கொண்டிருக்கும் உட்பகுதி ஸ்டைலில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. புதிய மஹிந்திரா சின்னம், பெரிய திரை மற்றும் ஸ்டியரிங் வீலில் பன்முக கன்ட்ரோல் வசதிகள் உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றன.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

தொடர்ந்து, இரு நிற வண்ணங்களில் ஸ்கார்பியோவின் உட்பகுதி அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பதும் தற்போது வெளியாகியிருக்கும் படங்களால் தெரிய வந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் படங்களில் ஸ்கார்பியோவின் உட்பகுதி பீஜ் மற்றும் கருப்பு ஆகிய இரு நிற காம்போவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

இதுதவிர, இரண்டாம் வரிசை இருக்கைகளுக்கென தனி ஏசி துளை, முன்பைக் காட்டிலும் அதிக இட வசதி, பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை (10 அங்குலம் இருக்கும் என கூறப்படுகின்றது), அதிக கன்ட்ரோல் பட்டன்கள் உள்ளிட்டவையும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் உலக சிப் பற்றாக்குறை காரணமாக அதிக பட்டன்களை வழங்கும் செயலை தூக்கி எறிந்த நிலையில் மஹிந்திரா அதிகப்படியான பட்டன்களை வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை கொண்டதாக புதிய ஸ்கார்பியோ உருவாகியிருக்கின்றது. இக்காரின் பெரிய இட வசதிக்காக புதிய சேஸிஸை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இப்புதிய சேஸிஸ் தார் காரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதன் வாயிலாகவே மிக தாராளமான இட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

Source: UCL

எஞ்ஜினை பொருத்தவரை புதிய ஸ்கார்பியோ கார் மாடலில் 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. தார் கார் மாடலில் இதே எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேனுவல் மற்றும் தானியங்கி ஆகிய இரு கியர்பாக்ஸ் தேர்வுகளில் தார் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

இணையத்தில் கசிந்த புதிய ஸ்கார்பியோ காரின் இன்டீரியர்... ஆஹா இப்படிதான் இருக்கபோகுதா... எதிர்பார்த்ததவிட அட்டகாசமா இருக்கே!

இதே வசதியே விரைவில் வெளியீட்டைப் பெற இருக்கும் புதிய ஜெனரேஷன் ஸ்கார்பியோவிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்று பல்வேறு சிறப்பு வசதிகள் இக்காரில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருப்பது, அக்காரின் மீதிருக்கும் ஆர்வத்தை இன்னும் பல மடங்கு அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 6, 2022, 9:43 [IST]
English summary
New gen mahindra scorpio interior picture leaked via online
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+